Published:Updated:

இடியாப்பச் சிக்கலில் முதலீட்டு கமிட்டி!

இடியாப்பச் சிக்கலில் முதலீட்டு கமிட்டி!

##~##

மின்சாரம், சாலை, துறைமுகம், விமான நிலையம், தொலைத்தொடர்பு, ரயில் போக்குவரத்து என பல கட்டமைப்பு வசதிகள் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு கட்டாயம் தேவை. வெளிநாடுகளில் இருந்து மற்ற பொருட்களை இறக்குமதி செய்கிற மாதிரி, கட்டமைப்பு வசதிகளை இறக்குமதி செய்ய முடியாது. எனவே, உள்நாட்டிலேயே கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது மிக அவசியம்.

தொழில்களுக்கு குறிப்பாக, சிறு தொழில்களுக்குத் தரமான கட்டமைப்பு வசதிகள் தருவது ஓர் அரசாங்கத்தின் முக்கிய கடமை. சிறு தொழில்கள் நாடு முழுவதும் பரவியுள்ளதால், கட்டமைப்பு வசதிகளையும் எல்லா இடங்களிலும் தேவையான அளவுக்கு உருவாக்குவது அவசியம். கட்டமைப்பு வசதிகள்தான் ஓர் இடத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும்; பழைய தொழில்களை அவ்விடத்தில் தொடர்ந்து செயல்பட வைக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குறைந்துவரும் முதலீடு!

கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு முக்கியமான தேவை அதிக முதலீடு. நமது பன்னிரண்டாவது திட்டக் காலத்தில் கட்டுமான துறைக்கு மட்டும் ஒரு டிரில்லியன் டாலர் முதலீடு தேவைப்படும் என நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சொல்லி இருக்கிறார். ஆனால், அண்மைக் காலமாக, கட்டமைப்புக்கான முதலீடுகளைப் பெறுவது பெரும் சிரமமாகவே உள்ளது. பல துறைகளில் (இயந்திரம், வாகனம், மின் உற்பத்தி, நுகர்பொருட்கள்) இதற்கான முதலீடு கணிசமாக குறைந்து வருகிறது. அதாவது, நமது மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (Gross Fixed Capital Formation, சுருக்கமாக  GFCF), நம் நாட்டின் ஜி.டி.பி.யுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் 10% வரை குறைந்துள்ளது. (பார்க்க அட்டவணை!) முதலீடு இப்படி வேகமாக குறையும்போது பொருளாதார உற்பத்தியானது இன்னும்  வேகமாகக் குறையும் என்பதில் சந்தேகமே இல்லை.

முதலீட்டுக்கான கேபினட் கமிட்டி!

கட்டமைப்பு மற்றும் முக்கியத் தொழில் துறைகளில் அரசு, தனியார் மற்றும் அந்நிய முதலீடுகள் பல லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முடங்கிக் கிடக்கின்றன. இதற்கு என்ன காரணம்? பல்வேறு அமைச்சகங்களிலிருந்து பெறவேண்டிய அனுமதிக் கடிதங்கள் பெறுவதில் உள்ள தாமதம்தான் முக்கிய காரணம். இந்தச் சிக்கலை நீக்குவதற்காக முதலீட்டுக்கான கேபினட் கமிட்டி

இப்படி ஒரு கமிட்டி அமைப்பதற்கு அமைச்சர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பினாலும், மத்திய அரசாங்கம் இதைக் கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால், பிரதம மந்திரியின் தலைமையில் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இந்த கமிட்டியை அரசு அமைத்தது. இதில் 15 கேபினட் அமைச்சர்கள் உறுப்பினர்களாகவும், 3 துணை அமைச்சர்களும் திட்டக்குழு துணைத் தலைவரும்  அழைப்பாளர்களாகவும் இருக்கின்றனர்.

இடியாப்பச் சிக்கலில் முதலீட்டு கமிட்டி!

இந்த கமிட்டியின் பணிகளில் முக்கியமானது கட்டமைப்பு, உற்பத்தித் துறைகளில் ரூபாய் ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு உள்ள திட்டங்களைத் துரிதப்படுத்தி, அவற்றுக்கான எல்லா உரிமக் கடிதங்களையும் அந்தந்த அமைச்சகங்களிலிருந்து துரிதமாகப் பெற்றுத் தருவதாகும். இந்த அமைப்புக்கென ஒரு கூடுதல் இணைச் செயலர் தலைமையில் புதிய அலுவலகமும், இணையதளமும் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

பெட்ரோலியத் துறையில்..!

இந்த கேபினட் கமிட்டிக்கு முதன்முதலில் வந்த முதலீட்டுப் பிரச்னை, பெட்ரோலியத் துறை தொடர்பானவை. 1999-ல் பெட்ரோலியத் துறையில் அரசு தவிர, தனியாரும், அந்நிய முதலீடுகளும் வரலாம் என்று மாற்றி அமைக்கப் பட்டது. இதன்படி பெட்ரோலிய வாயு மற்றும் திரவ பெட்ரோல் கண்டுபிடிப்பு, உற்பத்தி நடவடிக்கைகளில் தனியார், அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு 78

இடியாப்பச் சிக்கலில் முதலீட்டு கமிட்டி!

இடங்கள் பெட்ரோலிய அமைச்சகத்தால் ஒதுக்கப்பட்டன. பாதுகாப்பு அமைச்சகம் (Defence Ministry)39 இடங்களில் பெட்ரோல் கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தியைப் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைத்தது. இந்த இடங்களில் 2012 மார்ச் வரை 13.4 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இந்த முதலீட்டில் பல வங்கிகளின் கடன் களும் அடங்கும். இவற்றில் 20 இடங்கள் ஓ.என்.ஜி.சி.க்கும் மற்றவை ரிலையன்ஸ் மற்றும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் போன்ற பெரிய நிறுவனங்களுக்கும் சொந்தமானவை.

இந்த 39 இடங்களில் 8 இடங்களில் எவ்வித நடவடிக்கையும் கூடாது (NO-GO) என்றும், மீதமுள்ள 31 இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்தது பாதுகாப்பு அமைச்சகம். எவ்வித நடவடிக்கையும் கூடாது என்று கூறப்பட்ட 8 இடங்களில் 5-க்கு கேபினட் கமிட்டியின் தலையீட்டினால் 2013 மார்ச் மாதம் அனுமதி வழங்கப்பட்டது. மீதமுள்ள 3 இடங்களில் செய்துள்ள முதலீட்டுக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ரிலையன்ஸுக்கு சொந்தமான என்.இ.சி.-26, கே.ஜி.-டி6 ஆகிய இடங்களில் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சில இடங்களை விட்டுத் தந்ததால், இந்நிறுவனத்துக்கு பெட்ரோல் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதேபோல், 2013 ஆகஸ்ட் மாதத்தில் கெய்ர்ன் இந்தியா, பெட்ரோலிய துறையில் செய்த 2.4 பில்லியன் டாலர் முதலீடு வெவ்வேறு அனுமதிகளுக்காக முடங்கிக் கிடப்பதாகவும், ஒரு பில்லியன் டாலர் முதலீடு திரும்பப் பெறவேண்டிய நிலையில் உள்ளதாகவும் இந்த கமிட்டியிடம் முறையிட்டதோடு நிற்கிறது.

எரிசக்தி துறையில்..!    

2013 ஆகஸ்ட் மாதத்தில் இந்த கமிட்டியினால் 36 கட்டுமானத் திட்டங்களுக்கு எல்லா அனுமதி களும் வாங்கித் தரப்பட்டன. இதில் 28 எரிசக்தி திட்டங்களும் அடங்கும். இதில் குறிப்பாக, மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவதில் பல சிக்கல்கள் இருந்தன. இச்சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, 82 மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிசக்தி அளிக்கும் ஒப்பந்தங்கள் கோல் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. இதனால் வருங்காலத்தில் 34,793 மெகாவாட் மின் உற்பத்தி வாய்ப்பு உருவாகியுள்ளது.

சுற்றுச்சூழல் துறையில்..!  

சுற்றுச்சூழல் துறையில் பல முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவதில் சிக்கல்கள் உள்ளன. சுற்றுச்சூழல் சட்டங்களும், காடு தொடர்பான சட்டங்களும் கடுமையாக உள்ளன. இவற்றில் சில மாறுதல்களைச் செய்து இவ்வமைச்சகங்கள் சார்ந்த அமைப்புகள் உடனடி அனுமதி வழங்க வேண்டும் என்று நிறுவனங்கள் கேட்கின்றன.

இடியாப்பச் சிக்கலில் முதலீட்டு கமிட்டி!

அண்மையில் வனச் சட்டத்தில் சில மாறுதல்களைச் செய்து சாலை, மின்சாரம் எடுத்து செல்லும் கம்பிகள் இணைப்பு, வாய்க்கால் வெட்டுவது ஆகியவற்றுக்கு அனுமதி எளிதில் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதனை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்த்தாலும், பல முதலீடுகளுக்கு சுற்றுச்சூழல் அமைப்புகள் அனுமதி அளித்துள்ளதாக இந்த கமிட்டி சொல்லி இருக்கிறது.  

இன்றைய நிலை?

ஆரம்பத்தில் 100 முதலீட்டுத் திட்டங்களே இருந்த இந்த கமிட்டியின் கீழ் இன்று இருநூறுக்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. இந்த அமைப்பின் இணையதளத்தில் பல தனியார் மற்றும் அயல்நாட்டு நிறுவனங்கள் தாங்கள் முதலீடு செய்துள்ள திட்டங்கள் பற்றி பல அமைச்சகங்களின் அனுமதிக்காக காத்திருப்பதாக கூறி, திட்டங்களின் விவரங்களை அளித்துள்ளன.

இடியாப்பச் சிக்கலில் முதலீட்டு கமிட்டி!

அண்மையில் கிடைக்கும் தகவல்களின்படி, இதுவரை 92 திட்டங்களுக்கு அனுமதி பெற்று தந்திருப்பதாகவும், இதனால் 3.5 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடு உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த முதலீடு நம் நாட்டு மொத்த உற்பத்தியில் 4% என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது.

ஓரளவுக்கே உதவும்!

இந்த கேபினட் கமிட்டியினால் மட்டுமே முடங்கிக் கிடக்கும் நூற்றுக்கணக்கான திட்டங்களுக்கான நிரந்தரத் தீர்வை தந்துவிட முடியுமா என்பது கேள்விக்குறியே!  நிர்வாகப் பிரச்னைகள்தான் முடங்கிக் கிடக்கும்  முதலீடு களுக்கு  தடை என்றால், அதை நீக்குவதற்கான வழிவகைகளை மட்டுமே இந்த கமிட்டியால் திறமையாகச் செய்ய முடியும்.

ஆனால்,  ஒவ்வொரு அமைச்சரும் இந்த அமைப்பு தனது அதிகாரத்தில் தலையிடுவதாக புகார் செய்தால், இதன் செயல்பாடு தடைபடவே செய்யும். தவிர,  சட்டரீதியான சிக்கல்களுக்கு இந்த கமிட்டியால் தீர்வு ஏதும் காணமுடியாது.  சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளை மீறுவதோ, நில ஆக்கிரமிப்பு சட்டத்துக்கு புறம்பாக நிலம் கையகப்படுத்துவதோ, உச்ச நீதிமன்றத்தில் உள்ள நிலக்கரி / கனிம வழக்குகளுக்கு உட்பட்ட வளங்களைப் பயன்படுத்த அனுமதி அளிப்பதோ இந்த கமிட்டியால் முடியாது. இடியாப்ப சிக்கலில் இருக்கும் இந்த கமிட்டி, முதலீட்டு முடக்கத்துக்கு ஓரளவுக்கே உதவும் என்பதே நிஜம்!