Published:Updated:

அக்ரி கமாடிட்டி

அக்ரி கமாடிட்டி

கடுகு! (RM Seed)

##~##

கடந்த வாரம் கடுகு விலை ஏற்றத்துடனே காணப்பட்டது. காரணம், தாமதமாகவும், குறைந்த அளவிலேயும் பயிரிடப்பட்டதுதான். மேலும், மத்திய அமைச்சரவை குழு கடுகுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையைக் குவிண்டாலுக்கு ரூபாய் 3,050-ஆக உயர்த்தி யுள்ளது. இதுவே, கடந்த ஆண்டு குவிண்டாலுக்கு ரூபாய் 3,000-ஆக இருந்தது. மேலும், வரும் வாரத்தில் பண்டிகை தினங்களை அடுத்து கடுகு எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. காரணம், இந்தியாவில் சமையல் எண்ணெய்க்கு அடுத்தபடியாக கடுகு எண்ணெய் உபயோகப்படுத்தப்படுகிறது. ஆக, பண்டிகை நாட்களை அடுத்து கடுகு எண்ணெய் உபயோகம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கனடாவில் ஏற்றுமதி குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எதிர்பார்ப்பு: குறைந்த ஹெக்டேர் பரப்பளவில் கடுகு பயிரிடப்பட்டிருப்பது மற்றும் ஏற்றுமதி தேவை அதிகரித்திருப்பது காரணமாக கடுகு விலை உயரவே வாய்ப்புகள் அதிகம். மேலும், கடுகு எண்ணெய் தேவை அதிகரித்திருப்பதும் விலை ஏற்றத்துக்கு காரணமாக இருக்கும்.

அக்ரி கமாடிட்டி

ஜீரகம்! (Jeera)

முக்கிய ஸ்பாட் சந்தைகளில் ஜீரகத்தின் வரத்து அதிகமாக இருந்ததால், கடந்த வாரம் விலை குறைந்தே வர்த்தகமானது. மேலும், புதிய கான்ட்ராக்ட்களில் புதிய விலை இறக்கத்தைக் கண்டுள்ளது. வரும் வாரங்களில் தாமதமான சாகுபடி மற்றும் ஏற்றுமதி தேவையைப் பொறுத்து விலை மாற்றம் இருக்கும். என்.சி.டி.இ.எக்ஸ். வெளியிட்டுள்ள அறிக்கையில், தரத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் சிலவற்றை மாற்றம் செய்துள்ளதாக கூறியுள்ளது.

ஏற்றுமதி: கடந்த செவ்வாய்க்கிழமை ஜீரகத்தின் வரத்து 6,000 பைகளாகும் (1 பை - 55 கிலோ). மேலும், 2013 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான ஏற்றுமதி 28,000 டன்னாகும். இதுவே, கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 22,396 டன்னாக இருந்தது என்று ஸ்பைஸஸ் போர்டு ஆஃப் இந்தியா கூறியுள்ளது. 2012-2013ல் 40 முதல் 45 லட்சம் பைகள் உற்பத்தி ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், 2011-2012ல் உற்பத்தி செய்யப்பட்ட ஜீரகத்திலேயே தேவைக்கு அதிகமான சுமார் 8-9 லட்சம் பைகள் உள்ளன.

அக்ரி கமாடிட்டி

எதிர்பார்ப்பு: அதிக அளவில் ஜீரகம் ஏற்றுமதி செய்யும், துருக்கி மற்றும் சிரியாவில் நிலவிவரும் அரசியல் பதற்றத்தால், ஜீரகத்தின் ஏற்றுமதி தடைபட்டுள்ளது. மேலும், சிரியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் ஜீரகத்தின் உற்பத்தி குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் ஜீரக ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்புள்ளது. அதேசமயம், இந்த வருட விளைச்சல் நன்றாக இருக்கும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

மஞ்சள்! (Turmeric)

கடந்த செவ்வாய்க்கிழமை அதிக வரத்து மற்றும் அதிக அளவு கேரி ஓவர் ஸ்டாக்குகளுடன் ஏற்றுமதி தேவையும் இல்லாமல் போனதால் மஞ்சளின் விலை 3.07 சதவிகிதம் விலை குறைந்துள்ளது. மேலும், என்.சி.டி.இ.எக்ஸ். வெளியிட்டுள்ள அறிக்கையில், தரத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் சிலவற்றை மாற்றம் செய்துள்ளதாக கூறியுள்ளது.

உற்பத்தி: கடந்த செவ்வாய்க்கிழமை நிஜாமாபாத் மற்றும் ஈரோடு ஸ்பாட் சந்தைகளில் மஞ்சள் வரத்து முறையே 500 மற்றும் 6,000 பைகளாக (1பை- 75 கிலோ) இருந்தது. ஆந்திராவில் மஞ்சள் பயிரிடப்படும் ஏக்கரின் பரப்பளவு, அக்டோபர்-16-ன்படி 0.53 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு 0.68 லட்சம் ஹெக்டேர் பரப்பளவாக இருந்தது. மேலும், வழக்கமாகப் பயிரிடப்படும் பரப்பளவு 0.68 லட்சம் ஹெக்டேர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

அக்ரி கமாடிட்டி

2012-2013-ம் ஆண்டுக்கான உற்பத்தி சுமார் 45 லட்சம் பைகளாக இருந்தது. இது கடந்த வருடத்தைவிட சுமார் 40-50% வரை குறைவாகும். மேலும், நடப்பு ஆண்டில் கையிருப்பு 10 லட்சம் பைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான ஏற்றுமதி 17,500 டன்னாக இருந்தது. இதுவே, கடந்த வருடம் இதே காலத்தில் 24,982 டன்னாக இருந்தது என்று ஸ்பைஸஸ் போர்டு ஆஃப் இந்தியா அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

எதிர்பார்ப்பு:  அதிகளவு கையிருப்பும் சாதகமான வானிலையும் இருப்பதால், வரும் வாரத்திலும்

மஞ்சள் விலை குறையலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும், வெளிநாடு ஏற்றுமதி வாய்ப்புகள் இருப்பின் விலையில் மாற்றம் இருக்கலாம்.

சர்க்கரை! (Sugar)

அதிக அளவு வரத்து இருந்ததால், கடந்த செவ்வாய்க்கிழமையன்று 0.31 சதவிகிதம் சர்க்கரை விலை குறைந்தே காணப்பட்டது. மேலும், நவம்பர் மாத கான்ட்ராக்ட் புதிய குறைந்தபட்ச விலை 2,864 ரூபாயாக குறைந்தது. எனினும், பண்டிகை கால தேவை இருந்ததால் அதிக விலையிறக்கம் தடுக்கப்பட்டு, விலை 0.22 சதவிகிதம் அதிகரித்தது.

உற்பத்தி: 2013-2014 வருடத்தில் நல்ல மழை காரணமாக, சர்க்கரை உற்பத்தி அதிகளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் 25 மில்லியன் டன் உற்பத்தி இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. மேலும், கரும்பு பயிரிடப்படும் ஏக்கரின் அளவு கடந்த வருடத்தைப் போலவே உள்ளது.

அக்ரி கமாடிட்டி

இந்திய கரும்பு ஆலைகள் சங்கம் அக்டோபர்-1 வரையிலான கையிருப்பு சுமார் 80 லட்சம் டன்னாக இருக்கலாம் என்றும், இது சாதாரணமாக இதே காலத்தின் இருப்பைவிட 20 லட்சம் டன் அதிகம் என்றும் கூறியுள்ளது. 2012-2013-ல் குறைந்த அளவு விலைக்கே, ஏற்றுமதி நடந்துள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கி சர்க்கரை சீஸன் ஆரம்பமாகிவிடும். மேலும், நடப்பு ஆண்டில் சர்க்கரை ஏற்றுமதி 2.59 மில்லியன் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு: வரும் வாரங்களில் தீபாவளி பண்டிகையை அடுத்து, சர்க்கரை விலையில் மாற்றம் இருக்கலாம். இல்லையெனில், விலை குறைந்தே வர்த்தகமாகலாம். மேலும், அரசு ஏற்றுமதியை ஊக்குவித்தால்,  துபாய் நாட்டிலிருந்து புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் இருப்பின் சர்க்கரை விலை ஏறலாம். மாறாக, அதிக அளவு வரத்தும் விலை குறைவுக்கு காரணமாக இருக்கும்.

- சே.புகழரசி.