Published:Updated:

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

தங்கம்!

##~##

அமெரிக்காவில் நிலவி வந்த அரசியல் பதற்றம் நீங்கி, தற்போது பொருளாதார ஏற்றம் கண்டு வருகிறது. இதையடுத்து கடந்த வாரத் தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிகரித்தாலும், பின்னர் டாலரின் மதிப்பு அதிகரித்ததை அடுத்து தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்பட்டது. மேலும், அமெரிக்க பொருளாதாரம் சீராகும் வரை கடன் பத்திர அளவில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தியாவைப் பொறுத்தவரை, தீபாவளியை முன்னிட்டு தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், வியாழன் அன்று விலை குறைந்தே காணப்பட்டது.  இந்த தீபாவளிக்கு தங்கம் வாங்குவது குறைந்திருக்கிறது. கடந்த புதன்கிழமையன்று வெளியான அமெரிக்க நுகர்வோர் விலை குறியீடு, கடந்த 12 மாதங்களில் இல்லாத அளவுக்கு இருந்ததோடு, கடந்த செப்டம்பர் மாதத்தைவிட  1.2% அதிகரித்து காணப்பட்டது. வரும் வாரத்தில் தங்கத்தின் விலை டாலரின் பலம் மற்றும் ரூபாயின் மதிப்பைப் பொறுத்து அமையும். வரும் வாரத்தில் வெள்ளியின் விலையும் டாலரின் மதிப்பைப் பொறுத்தே வர்த்தகமாகும்.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

அடிப்படை உலோகங்கள்!

அமெரிக்காவில் பாண்டு வாங்கும் திட்டம் தொடரும் என்பதால், காப்பரின் விலையில் ஏற்றம் இருந்தது. சீனாவில் தற்போது நிலவி வரும் பொருளாதார நிலையால், காப்பரின் விலைக்கு அதிக சப்போர்ட் உள்ளது.  ஜப்பான் போன்ற தொழில் துறை நாடுகளில் உற்பத்தி மீட்சியடைந்து வருகிறது. அதேசமயம், தென் கொரியாவில் வேலை நிறுத்தம் காரணமாக கார் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொழில் துறைகளில் பயன்படுத்தப்படும் உலோகங்களின் தேவை குறைந்துள்ளது. மேலும், சீனாவில் குறுகிய கால வட்டி விகிதங்கள் உயர்வு காரணமாக, உலகச் சந்தைகளில் அதன் எதிரொலி இருக்கும் என்பதால் காப்பரின் விலையில்  மாற்றம் வரலாம்.  

கச்சா எண்ணெய்!

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

அதிக அளவு கையிருப்பால், கச்சா எண்ணெய் விலை குறைந்தே வர்த்தகமானது. கச்சா எண்ணெய் அதிக அளவில் பயன் படுத்தும் நாடான அமெரிக்காவில் தேவை குறைந்துள்ளது. மேலும், கடந்த புதன் கிழமையன்று வெளியான கச்சா எண்ணெய் இன்வென்டரி 4.1 மில்லியன் பேரல்கள் அதிகரித்துள்ளது.

லிபியா அரசியல் பிரச்னைகள் முடிவடைந்து, கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 90,000 பேரல்கள் ஏற்றுமதி ஆன கச்சா எண்ணெய் தற்போது சுமார் 1,50,000 - 2,00,000 பேரல்கள் ஏற்றுமதி ஆகிறது. மேலும், வரும் வாரங்களில் அதிக அளவு இருப்பு மற்றும் லிபியா ஏற்றுமதி அதிகம் இருப்பது போன்ற காரணங்களால் விலை குறையவே வாய்ப்புகள் அதிகம். அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு அதிகரித்ததை அடுத்து கச்சா எண்ணெய் விலை மேலும் குறையவே வாய்ப்புகள் அதிகம்.

இயற்கை எரிவாயு!

லேஸான வானிலை நிலவியதால், கடந்த புதன் கிழமையன்று இயற்கை எரிவாயு விலை குறைந்து காணப்பட்டது. மேலும், வரும் வாரங்களில் இயற்கை எரிவாயு விலை வானிலை மாற்றத்தைப் பொறுத்தும், ரூபாயின் மதிப்பைப் பொறுத்தும் வர்த்தகமாகலாம்.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்
கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

- சே.புகழரசி