கேள்வி - பதில்

?வாரன்டி, கேரன்டி... இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

- சித்ரா, சென்னை.

சரோஜா, ஒருங்கிணைப்பாளர், சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்டு சிவிக் ஆக்ஷன் குரூப்.

''வாரன்டி, கேரன்டி இரண்டும் ஒரேமாதிரிதான் இருக்கும். அதாவது, கேரன்டி என்பது ஒரு பொருளின் மீது தரப்படும் வாக்குறுதி. வாரன்டி என்பது வாங்கும் பொருள் குறிப்பிட்ட காலத்துக்குள் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் பொருளை சரி செய்து தருவது, மாற்றித் தருவது, பணத்தைத் திரும்பக் கொடுப்பது. வாரன்டி என்பது வாங்கும் பொருளின் தரம் குறித்தது. அதாவது, எங்கள் தயாரிப்புகள் குறிப்பிட்ட தரத்தில் நிச்சயம் இருக்கும். இதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என்கிற வாக்குறுதியைத் தருவதாகும்.'

?மாதம் ரூ.10,000 வீதம் 15 ஆண்டுகள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

- தமிழ்ச்செல்வி, சென்னை.

பத்மநாபன், நிதி ஆலோசகர்.

''15 வருடங்களுக்கு மாதம் ரூ.10,000 வீதம் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் மொத்தமாக நீங்கள் 18 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். இந்தத் தொகைக்கு குறைந்தபட்சம் 12 - 15% வரை வருமானம் கிடைத்தால், உங்களுக்கு 15 ஆண்டுகள் முடிவில் 50- 68 லட்சம் ரூபாய் வரை கிடைக்கக்கூடும். ஐ.டி.எஃப்.சி. பிரீமியர் ஈக்விட்டி, பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட் லைன் ஈக்விட்டி போன்ற ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்தால் உங்களுக்கு 8 - 9% வருமானம் கிடைக்கக்கூடும். எனவே, 15 ஆண்டுகள் முடிவில் 34 லட்சம் ரூபாய் கிடைக்கலாம். பிர்லா சன் லைஃப் டைனமிக் பாண்டு ஃபண்டு, கோட்டக் பாண்டு ஃபண்டு போன்ற கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். மேலும், ஒரே ஃபண்டில் உங்கள் மொத்த முதலீட்டையும் போடாமல், மூன்று அல்லது நான்கு ஃபண்டுகளில் பிரித்துப்போடுவதே சரியாக இருக்கும்.''

?நான் எடுத்திருக்கும் மெடிக்ளைம் பாலிசியை நடத்திவரும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சேவை எனக்குப் பிடிக்கவில்லை. வேறு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ள முடியுமா?

- ஹரிகரன், ஈரோடு.

ஆர்.சிவக்குமார், துணைப் பொது மேலாளர், யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் கம்பெனி.

''ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சேவை பாலிசிதாரருக்கு திருப்தி அளிக்கவில்லை எனில், அந்த பாலிசியை வேறு நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ள ஐ.ஆர்.டி.ஏ. அனுமதி அளித்துள்ளது. இதனால் பாலிசி பலன்களில் பாதிப்பு இருக்காது. அதாவது, சில நோய்களுக்கு நான்கு வருடங்களுக்கு பிறகுதான் க்ளைம் கிடைக்கும். இது போன்றவற்றுக்கு அந்த நான்கு வருடத்தில் ஒரு நிறுவனத்தில் ஒரு வருடமும், இன்னொரு நிறுவனத்தில் மூன்று வருடமும் பாலிசியை வைத்திருந்தாலும் அந்த சலுகை கிடைக்கும். ஆனால், புதிதாக இன்ஷூரன்ஸ் எடுக்கும் நிறுவனத்தில் நோ-க்ளைம் போனஸ் வசதி இருந்தால் மட்டுமே கிடைக்கும்.''

?டிவிடெண்ட் ரெக்கார்டு தேதியில் பங்கை வாங்கியிருந்தால் டிவிடெண்ட் கிடைக்குமா?

- ராஜேஷ் கிருஷ்ணன், முகப்பேர்.

விவேக் கார்வா, பங்குச் சந்தை நிபுணர்.

''டிவிடெண்ட் ரெக்கார்டு தேதியில் ஒரு பங்கை வாங்கினால் உங்களுக்கு டிவிடெண்ட் கிடைக்காது. ஒரு பங்கை வாங்கி அது டிவிடெண்ட் ரெக்கார்டு தேதி அன்று டீமேட் கணக்கில் இருக்கும்போதுதான் டிவிடெண்ட் கிடைக்கும். நீங்கள் வாங்கும் பங்கின் டிவிடெண்ட் ரெக்கார்டு தேதி 20 என வைத்துக் கொள்வோம். டிவிடெண்ட் 5 ரூபாய். இந்தப் பங்கு 19-ம் தேதி 100 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அந்தப் பங்குக்கு டிவிடெண்ட் கொடுக்கப்பட்டால், பங்கு 20-ம் தேதி காலை டிவிடெண்ட் 5 ரூபாய் போக 95 ரூபாய்க்கு வர்த்தகமாகவே அதிக வாய்ப்பு. ஆனால், ரெக்கார்டு தேதிக்கு முந்தைய தினமான 19-ம் தேதி நீங்கள் பங்கை வாங்குகிறீர்கள் என்றால், உங்களின் டீமேட் கணக்கில் 21-ம் தேதிதான் டீமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். அந்தப் பங்கின் டிவிடெண்ட் புரோக்கருக்கு சென்றுவிடும். அவர், பின்னால் உங்கள் கணக்கில் வரவு வைப்பார்.''

?வங்கியில் வாங்கிய வீட்டுக் கடன் பாக்கியை என் தம்பியிடம் கடன் வாங்கி அடைக்க இருக்கிறேன். இதை வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது எப்படி குறிப்பிடுவது?

- முருகேசன், தென்காசி.

சத்தியநாராயணன், ஆடிட்டர்.

''வீட்டுக் கடனை திரும்பச் செலுத்த உங்கள் தம்பியிடம் கடன் வாங்கி அதைத் தாராளமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். திரும்பச் செலுத்தும் தொகையில் அசலில் ரூ.1 லட்சம் வரைக்கும் 80சி பிரிவின் கீழும், வட்டியில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் 24-ன் கீழ் கழித்துக்கொள்ளலாம். நீங்கள் உங்கள் தம்பியிடம் கடன் வாங்கிய விஷயம் ஃபார்ம் 16 அல்லது வருமான வரிக் கணக்கில் இடம் பெறாது. ஆனால், அந்த பணம் உங்களுக்கு எப்படி கிடைத்தது என வருமான வரித் துறை அதிகாரிகள் கேட்டால், அதற்கு ஆதாரமாக காட்ட, தம்பியிடம் வாங்கிய தொகையை காசோலையாக வாங்கிக்கொள்வது நல்லது.''

?கமாடிட்டி சந்தையில் தங்கம், வெள்ளி வாங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்?

- சசிக்குமார், திருச்சி.

ஜி.வி.எஸ்.ராஜேஷ், உரிமையாளர், புளூ பேர்டு கமாடிட்டீஸ்.

''கமாடிட்டி சந்தையில் தங்கம், வெள்ளியை ஸ்பாட் மார்க்கெட்டிலும், ஃப்யூச்சர் மார்க்கெட்டிலும் வாங்கலாம். இதற்கு கே.ஒய்.சி. படிவத்தைப் பூர்த்தி செய்து தரவேண்டும். ஃப்யூச்சர் மார்க்கெட்டில் தங்கம், வெள்ளி வாங்குவதற்கு டீமேட் கணக்கு தேவையில்லை. ஆனால், ஸ்பாட் மார்க்கெட்டில் வாங்குவதற்கு டீமேட் கணக்கு மற்றும் டிரேடிங் கணக்கு வேண்டும். கான்ராக்ட் முடிவதற்கு 4, 5 நாட்களுக்கு முன்பாக டெலிவரி எடுக்கும் விஷயத்தை புரோக்கருக்கு தெரிவிப்பது முக்கியம். மேலும், என்ன தேவைக்காக டெலிவரி எடுக்கிறீர்கள் என்பதைத் தெரிவிக்க வேண்டும். இதற்கு பான் கார்டு, வங்கிக் கணக்கு விவரம், வருமானத்திற்கான ஆதாரம் ஆகியவற்றை டெலிவரி எடுக்கும் போது குறிப்பிட வேண்டும். ஃப்யூச்சர் மார்க்கெட்டில் டெலிவரி என்பது கிலோ கணக்கில் மட்டும்தான் எடுக்க முடியும். 15 முதல் 30 நாட்களில் டெலிவரி கிடைத்துவிடும். ஸ்பாட் மார்க்கெட்டில் கிராம் கணக்கில் கூட டெலிவரி எடுக்க முடியும். ஆனால், தமிழ்நாட்டில் டெலிவரி சென்டர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.''