மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2010-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 21000 புள்ளிகளைத் தாண்டியது. மூன்று ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் சென்செக்ஸ் 21000 புள்ளிகளைத் தாண்டி இருக்கிறது.

2010 நவம்பர் 5-ம் தேதி சென்செக்ஸ் 21004.96 புள்ளிகளுக்கு உயர்ந்தது. அதன்பிறகு, 2013 அக்டோபர் 30 அன்று சென்செக்ஸ் 21000 புள்ளிகளைக் கடந்து, 21034 என்ற அளவில் முடிவடைந்தது.

இதேபோல், நிஃப்டி புள்ளிகள் 2010 நவம்பர் 5-ல் 6312 புள்ளிகளுக்கு உயர்ந்தது. அதன்பிறகு, 2013 நவம்பர் 3-ம் தேதி 6313 புள்ளிகளுக்கு அதிகரித்தது. தீபாவளி முகூர்த் வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் புதிய உச்சத்தை அடைந்திருக்கின்றன. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் குதூகலித்து வருகிறார்கள்.

இந்திய பங்குச் சந்தை மீண்டும் சூடுபிடிக்க காரணங்கள் என்னென்ன என ஏ.டி.எஸ். நிறுவனத்தின் ஹெட் (ஈக்விட்டி) புரிசை இரா.சுந்தரிடம் கேட்டோம். அவர் ஐந்து முக்கிய காரணங்களைப் பட்டியலிட்டார்.

''அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைவாக இருப்பதால் வெளிநாட்டினர் இந்திய பங்குச் சந்தையில் அதிகம் முதலீடு செய்வது முதலாவது காரணம். உலகிலுள்ள பல பங்குச் சந்தைகளும் முன்னேற்றத்துடன் காணப்படுவது இரண்டாவது காரணம். மூன்றாவது காரணம், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் ரகுராம் ராஜன் எடுத்த நடவடிக்கைகளால் இந்திய ரூபாயின் மதிப்பு சீராக இருக்கிறது. பருவமழை நன்றாகப் பெய்ததால், உணவுப் பொருட்கள் விலை குறையும் என்கிற நம்பிக்கை நான்காவது காரணம். பொருளாதார வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு குறைந்தபோதிலும், இதற்கும் கீழே போகாது; இனி பொருளாதார வளர்ச்சி ஏற்றத்துடனே இருக்கும் என்ற நம்பிக்கை முதலீட்டாளரிடம் உருவாகி இருப்பது ஐந்தாவது காரணம்'' என அந்த ஐந்து காரணங்களைத் தெளிவாகச் சொன்னார்.

சற்று நிறுத்தி, ''இந்த இடைப்பட்ட காலத்தில் எஃப்.ஐ.ஐ. எனப்படும் அந்நிய நிதி முதலீட்டாளர்கள் ரூ.2.25 லட்சம் கோடியை இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். ஆனால், இதே காலகட்டத்தில் இந்திய மியூச்சுவல் ஃபண்டு துறை ரூ.33,400 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளது. மேலும், இந்த மூன்று ஆண்டுகளில் முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு ரூ.10.2 லட்சம் கோடி குறைந்துள்ளது. இது, மும்பை பங்குச் சந்தையின் பங்குகளை கொண்டு கணக்கிடப்பட்ட தொகையாகும்.

சென்செக்ஸ் குறியீடு 21000 புள்ளிகளைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டபோதிலும், மற்ற நாட்டு பங்குச் சந்தைகளை ஒப்பிடும்போது இந்திய பங்குச் சந்தையின் ஏற்றம் மிக மிகக் குறைவே. இந்த ஆண்டு ஆசியாவின் நான்காவது மோசமான பங்குச் சந்தையாக இந்திய பங்குச் சந்தை விளங்குகிறது.

நடப்பு 2013-ல் இந்திய பங்குச் சந்தையின் சென்செக்ஸ், நிஃப்டி மட்டுமே புதிய உச்சத்தைத் தொடவில்லை. அமெரிக்காவின் எஸ் அண்டு பி 500, ஜெர்மனியின் டி.ஏ.எக்ஸ்., மலேசியாவின் கே.எல்.எஸ்.இ. காம்போஸைட் இண்டெக்ஸ் புதிய உச்சத்தை எட்டி உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்கப் பங்குச் சந்தை 37%மும், ஜப்பானிய பங்குச் சந்தை 51%மும் ஏற்றம் கண்டுள்ளன'' என உள்நாட்டு நிலைமைகளோடு உலக நிலைமைகளையும் எடுத்துச் சொன்னார்.

''கடந்த மூன்று ஆண்டுகளில் பெரும்பாலான பங்குகள் விலை குறைந்து காணப்பட்டாலும், ஒரு சில பங்குகள் மட்டும் விலை அதிகரித்துள்ளதால், சென்செக்ஸ் குறியீடு மீண்டும் 21000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது. 2010 நவம்பரில் இருந்த சென்செக்ஸ் குறியீடு இப்போதும் அதே அளவில் இருந்தாலும், சில பங்குகள் நல்ல ஏற்றத்துடன் காணப்படுகின்றன. இந்த மூன்றாண்டு காலத்தில் 16 பங்குகளின் விலை 8% முதல் 172% வரை விலை அதிகரித்துள்ளது. முதல் ஐந்து இடங்களில் சன் பார்மாச்சூட்டிகல் (172%), ஹிந்துஸ்தான் யுனிலீவர் (103%), டி.சி.எஸ். (94%) ஐ.டி.சி. (88%), டாடா மோட்டார்ஸ் (52%) போன்ற பங்குகள் உள்ளன.

14 பங்குகளின் விலை கணிசமாக விலை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, பி.ஹெச்.இ.எல். (73%), ஜிண்டால் ஸ்டீல் (66%), ஹிண்டால்கோ (51%), எஸ்.பி.ஐ. (51%), டாடா ஸ்டீல் (48%) போன்ற பங்குகளின் விலை அதிகமாக குறைந்துள்ளன. சென்செக்ஸ் குறியீடு நவம்பர் 2010 அளவை எட்டிய போதிலும், மிட் கேப் பங்குகள் 40% குறைந்தும், ஸ்மால் கேப் பங்குகள் 60% குறைந்தும் காணப்படுகின்றன'' என்றவரிடம், துறைவாரியாகச் செயல்பாடு எப்படி இருந்தது என்று கேட்டோம்.

''துறை வாரியாகப் பார்க்கும்போது, மருந்து தயாரிப்பு, நுகர்வோர் துறை (FMCG) மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. கேப்பிட்டல் கூட்ஸ் (மூலதனத் துறை), உலோகத் துறை, வங்கித் துறை, மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்புத் துறை பங்குகள் விலை மிகவும் குறைந்து காணப்படுகின்றன.

பொதுவாகவே, பங்குச் சந்தை ஏற்றத்துடன் காணப்படாத காலகட்டங்களில் பாதுகாப்பான துறை (Defensive Sector) எனப்படும் நுகர்வோர் பொருள் துறை, மருந்துத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகள் நல்ல ஏற்றத்தில் இருக்கும். அவை இப்போதும் நன்றாகவே உள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக பங்குச் சந்தை ஏற்றத்துடன் காணப்படவில்லை. பெரும்பாலான பங்குகள் 50% - 95% வரை இறக்கம் கண்டுள்ளன. அதேநேரத்தில், நுகர்வோர், மருந்து, ஐ.டி, துறையைச் சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றத்துடன் காணப்படுகின்றன'' என்றவர், தற்போதைய நிலையில் முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள் எவை என்பதைக் குறிப்பிட்டார்.

''அமெரிக்காவின் பொருளாதாரம் சீரடைந்து வருவதாலும், இனி நல்ல முன்னேற்றம் காணப்படும் என்பதாலும், அமெரிக்காவைச் சார்ந்து இயங்கும் தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகளை வாங்கலாம். இன்ஃபோசிஸ், டி.சி.எஸ். மற்றும் ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ் பங்குகள் முதலீட்டுக்கு ஏற்றவைகளாகும். நல்ல பருவமழையினால், கிராமப்புற மக்களின் பொருட்கள் வாங்கும் சக்தி அதிகரிக்கும். இதனால் நுகர்வோர் துறை பங்குகள் ஏறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதால், ஐ.டி.சி., ஹெச்.யூ.எல். பங்குகளை கவனிக்கலாம்.

மருந்துத் துறையில் சிப்லா மற்றும் சன் பார்மா பங்குகளுக்கு ஆதரவு அளிக்கலாம். மோட்டார் வாகனத் துறையும் இனிவரும் காலங்களில் நன்றாக இருக்கும் என்பதால், டாடா மோட்டார் டி.வி.ஆர். மற்றும் பஜாஜ் ஆட்டோ பங்குகளை வாங்கலாம். இவை நீண்டகால முதலீட்டுக்கு ஏற்றவை என்பதால், விலை இறங்கும்போது இந்த பங்கை வாங்கிச் சேருங்கள். அதேநேரத்தில், உள்கட்டமைப்பு, மின் துறை, உலோகத் துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம். மேலும், மிட் கேப், ஸ்மால் கேப் பங்குகளையும் தவிர்க்கவும்'' என்றார்.

ஆல் த பெஸ்ட்..