'இரவு எட்டு மணிக்கு வருகிறேன். எனக்கு ஒரு ரவா தோசை வாங்கி வைக்கவும்’ என எஸ்.எம்.எஸ். அனுப்பி இருந்தார் ஷேர்லக். அவர் சொன்னபடி செய்தோம். 'டெல்லியில் ரொட்டியும் சப்பாத்தியும் சாப்பிட்டு நாக்கு வறண்டுவிட்டது. வாரும், சாப்பிட்டபடி பேசுவோம்!’

என்று அவர் சொல்லவே, மொட்டைமாடிக்கு கிளம்பினோம்.

''டெல்லி தேர்தல் எப்படி இருக்கிறது?'' என்றபடி பேச்சை ஆரம்பித்தோம்.

''டெல்லியில் காங்கிரஸ் நிச்சயம் வராது. காரணம், கெஜ்ரிவாலின் அம் ஆத்மி கட்சிதான். அவர் சி.எம். ஆனால்தான் டெல்லி உருப்படும் என்கிற அளவுக்கு அங்கு அவரைப் பற்றி புகழ்ந்து பேசுகிறார்கள். வடஇந்தியாவில் அநேக மாநிலங்களில் மோடி அலை வீசுவதாகச் சொல்கிறார்கள் என் பிசினஸ் நண்பர்கள். முடக்குவாதத்தால் முடங்கிக்கிடக்கும் இந்த அரசாங்கத்தைத் தூக்கிப்போட்டுவிட்டு, பிசினஸுக்கு சாதகமாகச் செயல்படுகிற ஒருவர் பிரதமராக வரவேண்டும் என்று நினைக்கிறார்களாம் அவர்கள். தேர்தலுக்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை எனில், தரமிறக்கம் செய்வோம் என

எஸ் அண்டு பி உள்பட சில ரேட்டிங் நிறுவனங்கள் சொல்ல, ரேட்டிங் நிறுவனங்கள் எப்படி மோடிக்கு ஆதரவாக பேசலாம் என்று கொதித்திருக்கிறது காங்கிரஸ்!

அது மட்டுமல்ல, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவர் சந்திரசேகர், கே.ஜி. பேசினிலிருந்து கிடைக்கும் இயற்கை எரிவாயு வருவாயில் தங்களின் மாநிலத்துக்கும் பங்கு தரவேண்டும் என புது கோரிக்கையை வைத்திருக்கிறார். 'இந்தக் கோரிக்கையை முடிந்தவரை பெரிதாக ஊதி வெடிக்க வையுங்கள். அப்படி செய்தீர்கள் என்றால் உங்கள் தேர்தல் செலவுகள் அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் கம்பெனி ஒன்று சந்திரசேகரிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறதாம். அது எந்த நிறுவனம் என்பதை வாசகர்களின் யோசனைக்கே விட்டுவிடுகிறேன்!'' என்றவரிடம், பங்குச் சந்தை பற்றிய செய்திகளைத் தாருங்கள் என்று நாம் கோரிக்கை வைத்தோம். ''இதோ'' என்று கை கழுவியவர், என்.எஸ்.இ.எல். பற்றி பேச ஆரம்பித்தார்.

''என்.எஸ்.இ.எல்-ன் கணக்கு வழக்குகளை ஆடிட்டிங் செய்த கிராண்ட் தார்ன்டன் நிறுவனம் தனது ஆய்வில், என்.எஸ்.இ.எல், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் மார்ஜின் தொகையை இந்நிறுவனம் தன் சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்தி இருப்பதாக ஆதாரத்துடன் சொல்லி இருக்கிறது. உதாரணத்துக்கு 2013, மார்ச் 28-ம் தேதி, 236.5 கோடி ரூபாயை எடுத்து தன் சொந்த பிசினஸுக்கு பயன்படுத்தி உள்ளது. என்ன மோசடி இது, ஒரு எக்ஸ்சேஞ்சே இப்படி செய்யலாமா?'' என்று கர்ஜித்தார்.

இளஞ்சூட்டில் தண்ணீர் தந்து அவரை கூல் செய்தோம். ''செப்டம்பர் காலாண்டு முடிவுகள் எப்படி வந்திருக்கிறது?'' என்றோம்.

''நவம்பர் 6 வரையில் சுமார் 900 கம்பெனி களின் காலாண்டு முடிவுகள் வந்துள்ளன. இவற்றின் விற்பனை 18.8% அதிகரித்துள்ளது. இது முந்தைய ஜூன் காலாண்டில் 4.3 சதவிகிதமாக இருந்தது. இதே காலத்தில் செயல்பாட்டு லாபம் 6 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆனால், நிகர லாபம் 0.4% குறைந்துள்ளது. இதற்கு அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் குறைந்தது ஒரு முக்கிய காரணம். அதேநேரத்தில், ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களின் லாபம் நன்றாக உள்ளது. பெரிய சாஃப்ட்வேர் நிறுவனங்களின் வருமானம் 28% அதிகரித்துள்ளது. இதே காலத்தில் பார்மா நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி 12.7% உயர்ந்துள்ளது. வாகனத் துறையில் மாருதி சுசூகி, பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனங்களின் விற்பனை பெயர் சொல்லும்படி இருக்கிறது'' என்றார்.

''பங்குகள் பற்றிய செய்திகளைச் சொல்லுங்கள்...?'' என்றோம்.

''பி.எஸ்.இ. மற்றும் என்.எஸ்.இ. 65 பங்குகளை டி(ஜி) குரூப்-க்கு மாற்றி இருக்கின்றன. பிராண்டு ஹவுஸ் ரீடெய்ல்ஸ், டோனியர் இண்டஸ்ட்ரீஸ், வெப்சால் எனர்ஜி சிஸ்டம், பயோனீர் டிஸ்டில்லியரீஸ், நிட்கோ, அமித் ஸ்பின்னிங் இண்டஸ்ட்ரீஸ், பாரமவுன்ட் பிரின்ட்பேக்கிங் ஆகிய இதில் அடக்கம். இவற்றில் ஜாக்கிரதையாக வர்த்தகம் செய்வது நல்லது!

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கடந்த செப்டம்பரில் அதிக அளவில் வாங்கிக் குவித்த பங்காக பார்தி ஏர்டெல்லும், அதிக அளவில் விற்றுத் தீர்த்த பங்காக எஸ்.பி.ஐ.யும் இருந்திருக்கிறது. ஹெச்.டி.எஃப்.சி., ஹெச்.டி.எஃப்.சி. பேங்க் பங்குகளையும் ஃபண்டு நிறுவனங்கள் அதிகம் வாங்கி இருக்கின்றன.

என்.எஸ்.இ சுமார் 1,400 பங்குகளின் சர்க்யூட் லிமிட் மற்றும் சர்க்யூட் ஃபில்டர் வரம்பை மாற்றி அமைத்துள்ளது. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், சுஸ்லான் எனர்ஜி, யூ.பி. இன்ஜினீயரிங், எவ்ரான் எஜுகேஷன் போன்ற பங்குகளுக்கான சர்க்யூட் வரம்பு 5%-லிருந்து 10%-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மணப்புரம் ஃபைனான்ஸ், முத்தூட் ஃபைனான்ஸ், வோக்கார்ட், எம்.சி.எக்ஸ் போன்றவற்றின் சர்க்யூட் ஃபில்டர் 5%-லிருந்து 20 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் காலாண்டு முடிவு நல்லபடியாக வந்திருக்கிறது. ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனத்தின் லாபம் அதிகரித்ததே இதற்கு காரணம். செப்டம்பர் காலாண்டில் அதன் நிகர லாபம் 70.7% அதிகரித்து, 3541.86 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

சந்தை நடுத்தர மற்றும் நீண்டகாலத்தில் பாசிட்டிவ்-ஆக இருக்கிறது. நிஃப்டி ரெசிஸ்டன்ஸ் சுமார் 6250-6350-ஆக உள்ளது. இப்போதைக்கு ப்ராஃபிட் புக்கிங் நடப்பதால், சந்தை சறுக்கலில் இருக்கிறது. தவிர, அமெரிக்காவின் வளர்ச்சி பற்றி நல்லபடியாக புள்ளிவிவரங்கள் வெளியாகி இருப்பதால் எஃப்.ஐ.ஐ.கள் நம் சந்தையிலிருந்து வேகமாக வெளியேறலாம், உஷார்'' என்றவர் விருட்டென வீட்டுக்குக் கிளம்பினார்.