மிளகு! (Pepper)

''கடந்த வாரம் வடமாநிலங்களில் தீபாவளி விடுமுறை காரணமாக ஆர்டர்கள் ஏதும் இல்லாததால், மிளகின் விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்தது. எனினும், வார இறுதியில் தேவை காரணமாக விலை உயர்ந்தே காணப்பட்டது. ஸ்பாட் சந்தையில் 100 கிலோ மிளகின் விலை ரூ.48,700 வரை வர்த்தகமானது. மேலும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மிளகின் விலை, உலகச் சந்தையில் டன்னுக்கு 8,400 டாலர் வரை வர்த்தகமானது.

உற்பத்தி: கேரளா மற்றும் கர்நாடக விவாசாயிகள் மதிப்பின்படி, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் விளைச்சல் 10 முதல் 20 சதவிகிதம் குறைவாகவே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், மிளகு இருப்பு குறைந்த அளவே இருக்கிறது என்றும், மேலும் அடுத்த மிளகு விளைச்சல் சுமார் 50,000 டன்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

மேலும், சர்வதேச மிளகு சங்கம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், பிரேசிலில் சமீபத்திய அறுவடை, தேவைக்கு ஏற்ப போதுமானதாக இல்லை. மிளகு அதிகளவு உற்பத்தி செய்யும் இந்தோனேஷியாவின் ஒரு பகுதியான லம்பங்கில் மிளகு உற்பத்தி குறைந்திருக்கிறது என்றும், இந்தியா மற்றும் வியட்நாமில் அடுத்துவரும் அறுவடையில் மாற்றம் இருக்கலாம் என்றும் கூறியுள்ளது. குறிப்பாக, லம்பங்கில் மட்டும் 2013-ல் கருப்பு மிளகு உற்பத்தி 25-35 சதவிகிதம் குறையலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளை மிளகின் உற்பத்தி சற்றே அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் மிளகு உற்பத்தி 3,14,000 டன்கள் முன்னர் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சமீபத்திய அறிக்கையில் 3,45,000 டன் உற்பத்தி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே, கடந்த ஆண்டு 3,52,000 டன்னாக இருந்தது.

மேலும், உள்நாட்டு உற்பத்தி அடுத்த பருவத்தில் குறைய வாய்ப்பு இருக்கிறது என்றும், மிளகு உற்பத்தி இந்த ஆண்டில் 40 சதவிகிதம் குறைவாக இருக்கும் என்றும் இடுக்கி மாவட்ட விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எதிர்பார்ப்பு: வரும் வாரத்தில் மிளகின் தேவை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும், கிறிஸ்துமஸ், வருடப்பிறப்பு, குளிர்கால தேவைகளால் மிளகின் விலை அதிகரிக்கலாம். அதேசமயம், உற்பத்தி அளவு குறைந்துள்ளதாலும், வெளிநாட்டு ஏற்றுமதி தேவைகள் இருப்பதாலும் மேலும் விலை ஏற்றத்துக்கு இது காரணமாக இருக்கும்.''

ஜீரகம்! (Jeera)

கடந்த வாரம் ஜீரகத்தின் விலை குறைந்தே வர்த்தகமானது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உஞ்ஹா சந்தை அக்டோபர்-31 முதல் நவம்பர் 8 வரை மூடப்பட்டிருந்தது.

உற்பத்தி: நல்ல பருவமழை காரணமாக கடந்த ஆண்டைவிட விளைச்சல் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தீபாவளி பண்டிகை தினத்தையட்டி கடந்த ஒருவாரகாலம் விடுமுறையால், சந்தைக்கு வரத்து அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல விதைப்பு மற்றும் விளைச்சல், முந்தைய ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஜீரகத்தின் இருப்புகள் காரணமாக வரத்து மேலும் அதிகமாகலாம்.

எதிர்பார்ப்பு: தேவையைவிட வரத்து அதிகமாக இருப்பதால் ஜீரகத்தின் விலை குறையவே வாய்ப்புகள் அதிகம். மேலும், இந்திய வானிலை ஆய்வுத் துறை ராஜஸ்தான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

மஞ்சள்! (Turmeric)

எதிர்பார்த்த அளவு தேவை இல்லாததாலும், அதிகளவு வரத்து இருந்ததாலும் கடந்த வாரம் மஞ்சள் விலை குறைந்தே வர்த்தகமானது. மஞ்சளின் தரம் குறைவாக காணப்பட்டது மேலும், விலை குறைவுக்கு காரணமாக அமைந்தது. தீபாவளி பண்டிகையையட்டி

மஞ்சளின் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேவை மந்தமாகவே இருந்தது.

இருப்பு: முக்கிய ஸ்பாட் சந்தைகளில் கடந்த அக்டோபர் 11-ம் தேதியோடு 65 லட்சம் பைகள் இருப்பு உள்ளதாக மஞ்சள் மண்டிகள் தகவல் கூறியுள்ளன. இந்தக் கையிருப்பு, கடந்த வருடம் இதே காலத்தின் கையிருப்பைவிட ஏறக்குறைய 11 லட்சம் பைகள் அதிகமாகும்.

எதிர்பார்ப்பு: வரும் வாரத்தில் அதிக வரத்து மற்றும் தரக்குறைவு காரணமாக விலை குறையவே வாய்ப்புள்ளது.

ஏலக்காய்! (Cardamom)

தேவைகேற்ப வரத்து இருந்ததால் ஏலக்காய் விலை கடந்த வாரம் விலை குறைந்தே வர்த்தகமானது. கேரள சந்தையில் தினவரத்து கடந்த வருடத்தைவிட அதிகமாக உள்ளது. மேலும், கடந்த புதன்கிழமை வரத்து சுமார் 95 டன்னாக இருந்தது. விலை சராசரியாக கிலோ 578 ரூபாயாக இருந்தது. அதிகபட்சமாக கிலோவுக்கு 793 ரூபாய் வரை வர்த்தகமானது.

இருப்பு: எம்.சி.எக்ஸ்-ல் மொத்த ஏலக்காய் இருப்பு கடந்த நவம்பர் 6-ன்படி 62.40 டன்னாக இருந்தது. இதுவே, கடந்த வாரம் இதே காலத்தில் 76.90 டன்னாக இருப்பு இருந்தது.

எதிர்பார்ப்பு: குறைவான தேவையும், அதிகளவு உற்பத்தியும், மேலும் விலை குறைவுக்கு காரணமாக இருக்கும்.

- சே.புகழரசி.