இந்த வாரம் தங்கம், வெள்ளி விலைப்போக்கு பற்றி சொல்கிறார் ஃபார்ச்சூன் (Fortune) கமாடிட்டி நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் கமலேஷ் ஜோகி.

தங்கம்!

''அமெரிக்காவில் பொருளாதாரம் குறித்த அறிக்கை டாலருக்கு சாதகமாக இருந்ததால், தங்கத்தின் விலை கடந்த வாரம் சர்வதேச சந்தையில் 1,300 டாலரை நோக்கி சரிந்தது. மேலும், ஐரோப்பாவின் சென்ட்ரல் பேங்கின் வட்டி குறைப்பு, டாலரின் மதிப்பு அதிகரிக்க உதவியது. இதனால் எம்.சி.எக்ஸ். கமாடிட்டி வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை அதிகபட்சமாக 30,264 ரூபாய் முதல் குறைந்தபட்சம் 29,500 ரூபாய் வரை வர்த்தகமானது.

அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி ஜூலை - செப்டம்பர் காலாண்டில் நிபுணர்களின் எதிர்பார்ப்பான 2 சதவிகிதத்தையும் தாண்டி 2.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மேலும், நடப்பாண்டில் மட்டும் விலைமதிப்பற்ற உலோகங்களின் விலை 22% வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்கப் பொருளாதாரம் இவ்வாறு மேன்மை அடைந்து வருவதால், அமெரிக்காவின் பாண்டு பையிங் திட்டத்தைக் குறைக்கலாம். வரும் வாரத்தில் தங்கத்தின் விலை குறைந்து வர்த்தகமாகலாம்.

பரிந்துரை: நீண்டகால நோக்கில் வாங்கலாம்; வாங்கும் விலை: ரூ.29,600 - 29,200; விற்கும் விலை - ரூ.31,200; ஸ்டாப்லாஸ் - ரூ.28,800.

வெள்ளி!

அமெரிக்கப் பொருளாதார அறிக்கையால், டாலரின் மதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து வெள்ளியின் விலையில் அதிகளவு ஏற்ற இறக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வரும் வாரத்தில் வெள்ளியின் விலை குறையவே வாய்ப்புள்ளது. ரூ.49,500-க்கு மேல் விலை ஏறினால் ரெசிடன்ஸ் லெவல் ரூ.50,200, ரூ.51,300-ஆக வைத்துக்கொள்ளலாம். சப்போர்ட் லெவல் ரூ.47,800-ஐ அடுத்து ரூ.46,700, 45,800.''

அடிப்படை உலோகங்கள்!

ப்ளூம்பெர்க் சர்வேயில் 18 நிபுணர்களின் அறிக்கையின்படி, காப்பரின் விலை வரும் வாரத்தில் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதில் 7 வல்லுநர்கள் காப்பரின் விலை குறையும் என்றும், 7 வல்லுநர்கள் காப்பரின் விலையில் மாற்றம் இருக்காது என்றும், மீதம் உள்ளவர்கள் காப்பரின் விலை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளனர். அமெரிக்க கமாடிட்டி வர்த்தக கமிஷன் அறிக்கைபடி, வர்த்தகர்கள் மற்றும் ஊக வர்த்தகர்கள் கடந்த அக்டோபர் 29-ன்படி 10,297 லாங் கான்ட்ராக்ட்களை வைத்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதத்தை விட இது அதிகமாகும்.

சீனாவின் உற்பத்தி கடந்த 18 மாதங்களை விட அக்டோபர் மாதத்தில் அதிகமாகியுள்ளது. மேலும், சுத்திகரிக்கப்பட்ட காப்பரின் இறக்குமதியானது பிப்ரவரி 2012-க்கு பிறகு கடந்த செப்டம்பரில் அதிகரித்துள்ளது. மேலும், சீனாவின் பர்ச்சேஸிங் மேனேஜர்ஸ் இண்டெக்ஸ் 51.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதுவே, கடந்த மாதம் 51.1 சதவிகிதமாக இருந்தது.

மேலும், சீனாவின் பொருளாதாரம் 2014-ம் வருடத்துக்குள் 7.4% அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்காவின் பாண்டு பையிங் திட்டம் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, வரும் வாரத்தில் காப்பரின் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

கச்சா எண்ணெய்!

அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 2.8 சதவிகிதமாக மூன்றாவது காலாண்டில் அதிகரித்துள்ளது. இது கடந்த காலாண்டில் 2.5 சதவிகிதமாக இருந்தது என்று அமெரிக்க வணிகத்துறை கூறியுள்ளது. ஆனால், எதிர்பார்த்த அளவோ 2 சதவிகிதமாகும். மேலும், அக்டோபர் மாதம் சீனாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்ததால் கச்சா எண்ணெய் விலை குறைந்தது.

இதற்கு காரணம், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனா இரண்டாவது இடத்தில் இருப்பதாகும். வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் விலை சீனாவின் இறக்குமதியைப் பொறுத்து மாறுபடலாம். மேலும், இந்திய ரூபாயின் மதிப்பைப் பொறுத்துதான் வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் இருக்கும்.

இயற்கை எரிவாயு!

மத்திய மற்றும் கிழக்கு அமெரிக்கப் பகுதிகளில் குளிர் காரணமாக இயற்கை எரிவாயு விலை மேலும் அதிகரித்து வர்த்தகமானது. மேலும், வரும் வாரத்தில் மத்திய மற்றும் கிழக்கு அமெரிக்கப் பகுதிகளில் மிதமான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. இது இயற்கை எரிவாயு விலையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். என்னதான் வானிலை மாற்றத்தைப் பொறுத்து இயற்கை எரிவாயு விலை மாறலாம் என்றாலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பைப் பொறுத்தும் வர்த்தகமாகலாம்.

- சே.புகழரசி.

ரூபாய் மதிப்பு 63 வரை செல்ல வாய்ப்பு!

இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில வாரங்களாக பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லாத நிலையில் இருந்து மாறி கடந்த வெள்ளியன்று 62.48க்கு சென்றது. வரும் வாரத்தில் ரூபாயின் மதிப்பு எவ்வாறு இருக்கும் என்று இந்தியா சிமென்ட்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கே.சுரேஷிடம் கேட்டோம்.

''நடப்பு கணக்கு பற்றாக்குறை காரணமாக ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு 68 ரூபாய் வரை சரிந்தது. இதையடுத்து மத்திய அரசு தங்க இறக்குமதியைத் தடை செய்தது. மேலும், கச்சா எண்ணெய் இறக்குமதியும், டாலரின் தேவையை அதிகரிக்கிறது. ஆனால், மத்திய அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளால் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது. மேலும், நடப்பு ஆண்டில் 60 பில்லியன் டாலராக குறைக்கத் திட்டமிட்டுள்ளது. ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவனம், தேர்தலுக்குப் பின் பொருளாதார வளர்ச்சி குறைந்தால் இந்தியாவின் தரக் குறியீட்டை குறைப்போம் என்று அறிவித்தது ரூபாயின் மதிப்பு குறைவதற்கு காரணமானது. வரும் வாரத்தில் ரூபாயின் மதிப்பு 63 ரூபாய் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது'' என்றார்.