கடற்கரை பங்களாவில் நான் பெட்ரூமில் நல்லாத் தூங்கிட்டிருந்தேன். திடீருன்னு ஏதோ சத்தம்கேட்டு முழிச்சு எழுந்து ரிமோட்டை அழுத்தி ஜன்னல் திரையை விலக்கி கட்டில்ல படுத்துக்கிட்டே வெளியில பார்த்தா, நீலக்கடலுல தங்கக் கலரில கடலோட அடித்தளத்துல சூரியன் உதயமாகிட்டு இருந்துச்சு. 'என்னா ஒரு ரம்மியமான சூழல்’ன்னு நினைச்சு எழுந்துபோய் ஜன்னலைத் திறக்கலாமுன்னு முயற்சி பண்ணுனா திறக்கவே முடியலை.

இழுஇழுன்னு இழுத்துக் கிட்டிருக்கிறப்ப, 'அடேய், ஏகாம்பரம் மணி எட்டாயிடுச்சு. ஆபீஸுக்குப் போற ஐடியா இருக்கா, இல்லையா?’ன்னு எங்கம்மா சவுண்டு விடுது. முழிச்சுப் பார்த்தா, கடற்கரை பங்களாவுல கனவுல ஒரு மில்லியனரா வாழ்ந்திட்டு இருந்திருக்கிறேன்.

அறுநூற்றிஐம்பது சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்குள்ளே பாயை விரிச்சு படுத்துக்கிட்டு கடற்கரை பங்களாக் கனவு காணுறது நல்லதுதான். ஆனா, இப்படி வெயில் உச்சிக்கு வர்றப்ப காணறது ரொம்பத் தப்பாச்சேன்னு நினைச்சுக்கிட்டே பிரஷ்ஷைத் தேட ஆரம்பிச்சேன். ஒரு நாளும் இல்லாத திருநாளா ஏன் இப்படி கனவு வந்துச்சுன்னு யோசிச்சேன். அட, நேத்து ராத்திரி தூக்கம் வராம வேர்ல்டு வெல்த் ரிப்போர்ட்ன்னு ஒரு ரிப்போர்ட்டைப் படிச்சுக்கிட்டு இருந்தேன். எல்லா தொகைகளையும் அமெரிக்கன் டாலர் கணக்குல கொடுத்திருந்தாங்க. ஒவ்வொரு நாட்டிலேயும் எத்தனை மில்லியனர்கள் 2013-ல இருக்கிறாங்க. 2018-ல எத்தனை பேரு இருப்பாங்கன்னு கணக்குப்போட்டு அதுல சொல்லியிருக்கிற பல விஷயங்களை மனசுக்குள்ள வச்சுக்கிட்டு தூங்கப்போனா மில்லியனர் கனவு வந்து தாக்கிடுச்சு. எங்க அம்மா போட்ட சத்தத்துல முழிச்சாத்தானே தெரியுது வீட்டுல நல்ல தண்ணி வந்து இரண்டு வாரம் ஆச்சுங்கிற உண்மை.

சரி, அதைவிடுங்க. என் பாடெல்லாம் உங்களுக் கென்ன புதுசா என்னா?! எல்லாரும் சேர்ந்து ஒண்ணாத்தானே அனுபவிச்சிட்டிருக்கோம். கொஞ்சம் பில்லியனர்களைப் பத்திப் பார்ப்போம்.

உலகத்துல அதிகமான அளவுல பில்லியனர்கள் இருக்குற நாடு அமெரிக்காதாங்க. 515 பேரு இருக்கிறாங்க. அப்புறமா சீனா (157), ஜெர்மனி (148), இங்கிலாந்து (135), ரஷ்யா (108), இந்தியா (103), ஹாங்காங் (75), பிரான்ஸ் (64), சவுதி அரேபியா (64), சுவிட்சர்லாந்து (61) அப்படீன்னு எண்ணிக்கை ஆர்டரில போகுது டாப் டென் லிஸ்ட்.

அதனால நமக்கென்ன ஆச்சு ஏகாம்பரம்னு நீங்க கேக்குறது எனக்குப் புரியுது. ஆனாலும், நம்ம நாட்டிலேயும் அதிக எண்ணிக்கையில பில்லியனர்கள் இருக்கிறாங்கன்னு சொல்லிக்கிறதுல ஒரு பெருமை இருக்குது இல்லீங்களா?!

ஆனா, அப்படி ஒண்ணும் மெச்சுக்கிறதுக்கு வாய்ப்பில்லீங்க. பில்லியனருன்னு எண்ணிக்கையைச் சொல்லுறோமே தவிர, சொத்து மதிப்பைப் பாத்தா, கொஞ்சம் சங்கடமாத்தான் இருக்குது. சீனாவுல இருக்குறவங்க சொத்து மதிப்புல பாதிக்கும் கீழான சொத்து மதிப்புதான் நம்ம ஊரு பில்லியனர்களோட சொத்து மதிப்பைக் கூட்டினா வருது.

ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி நிலைமை எப்படி இருந்துருக்குமுன்னு நினைச்சு மேலே படிச்சா, 2000-01ஆம் வருஷம் இந்தியாவுல 9 பில்லியனர்களும், சீனாவுல ஒரே ஒரு பில்லியனரும் இருந்திருக்காங்கன்னு ரிப்போர்ட் சொல்லுது. ஆனா, இன்னைக்கு நிலைமை கொஞ்சம் தாறுமாறாப் போய்க்கிட்டு இருக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு மனசு நொந்து போயிட்டேங்க.

இன்னைக்குதான் இப்படியிருக்கு. எதிர்காலத்துல, அதாவது இன்னும் ஓர் அஞ்சு வருஷம் கழிச்சு நாமெல்லாம் ரொம்பவுமே முன்னேறிடும்வோமுன்னு நினைச்சுகிட்டே ரிப்போர்ட்டை மேலே படிச்சேங்க. பில்லியனரெல்லாம் நமக்கு வேணாம். மில்லியனர்கள் விஷயத்துலயாவது நாம முன்னணியில இருப்போமான்னு பார்த்தா, 2013-ம் வருஷத்துல அதுலேயும் அமெரிக்காதாங்க நம்பர் ஒண்ணு. 1,32,16,000 பேரு மில்லியனரா இருக்கிறாங்க. சீனாவுல 11,23,000 பேரும் இந்தியாவுல 1,82,000 பேரும்தான் இதுலயும் வர்றாங்க 2013-ல.

ஏகாம்பரம், இந்த விஷயத்துல நாம எதிர்காலத்துல எப்படின்னு கேக்குறீங்களா? 2018-ல அமெரிக்கா வுல 1,86,18,000 பேரும், சீனாவுல 21,12,000 பேரும், இந்தியாவுல 3,02,000 பேரும் மில்லியனரா இருப்பாங்கன்னு எதிர்பார்க்குறோமுங்குது அந்த ரிப்போர்ட்.

வரும்படி கம்மியா இருந்தா நம்ம நாட்டுல எப்படிங்க மில்லியனரும், பில்லியனரும் அதிகரிப்பாங்க? ஏறக்குறைய 126 கோடி ஜனங்க இருக்கிற நம்ம நாட்டுல 28 லட்சம் பேருதான் ஒரு லட்சம் அமெரிக்கன் டாலருக்கு மேலே சொத்துபத்து வச்சிருக்காங்களாம். ஏறக்குறைய 114 கோடி பேரு பத்தாயிரம் அமெரிக்கன் டாலருக்கு (ஏறக்குறைய ஆறு லட்சம் ரூபாய்) கீழேதான் சொத்துபத்து வச்சிருக்காங்களாம்.

2000-மாவது வருஷத்துக்கும் 2013-ம் வருஷத்துக்கும் இடையே உள்ள வளர்ச்சியைப் பார்ப்போமேன்னு பார்த்தேங்க. சீனாவுல தனிநபர் ஆவரேஜ் சொத்து மதிப்பு ஏறக்குறைய மூணு மடங்கா (300 சதவிகித அதிகரிப்பு) ஆகியிருக்கு (அமெரிக்க டாலர் 5,700-ல் இருந்து 22,230). இந்தியாவுல அதே பதிமூணு வருஷத்துல 2,000 டாலருல இருந்து 4,700 டாலரா ஆகியிருக்கு. நம்ம நாட்டுல எல்லா வசதியும் இருக்குது. இளமை பொங்கும் இளைஞர்கள் இருக்கிறாங்க. கல்விச்சாலைகள் இருக்குது. ஆனாலும், சம்பாதிச்சு சொத்து சேர்க்குறதுல மட்டும் ஏங்க இப்படி சொதப்புறாங்க? ரிப்போர்ட்ல இருக்கற பிகர்களை விடுங்க. நம்மைச் சுத்தி இருக்கற ஏழை - பணக்காரன் வித்தியாசத்தைப் பாருங்க. பணக்காரன் பணக்காரனாயிகிட்டே போறான். ஏழை ஏழையாயிகிட்டே வர்றான். நம்மளை மாதிரி நடுத்தர வர்க்கமெல்லாம் இன்னும் அஞ்சு வருஷத்துல ஏழையாகவே மாறிடுவோமோன்னு பயமா இருக்கிற அளவுக்கு விலைவாசி எகிறுது. இப்படி ஏறுகிற விலைவாசியில யாருங்க மில்லியனர் ஆகமுடியும்?

நான் படிச்ச ரிப்போர்ட்டிலேயே க்ளீயரா ஒரு விஷயம் போட்டிருக்காங்க. இந்தியா மாதிரி நாடுகள்ல தனிநபர் சொத்து டேட்டாக்கள் கிடைக்கிறது கொஞ்சம் கடினம். அதனால பல்வேறு வகையில மதிப்பிட்டு பண்ணியிருக்கோமுன்னு சொல்லியிருக்காங்க. குத்துமதிப்பாச் சொல்லி இருக்காங்கன்னு சொன்னாலும் ஏழை-பணக்காரன் வித்தியாசம் குறைக்கப்படணுமுங்கிறதுதான் என்னோட வாதம்.

டேட்டாவைப் பார்த்தாலே ஒண்ணு தெளிவா புரியுதுங்க. மேலே இருக்கறவன் மேலே மேலே போயிகிட்டே இருக்கான். கீழே இருக்கறவன் நசுங்கிக்கிட்டு இருக்கானுங்கறதுதாங்க அது. உள்ளூருல அரைவயிறும் கால்வயிறுமா காலங்கழிக்கிறவங்களை முதல்ல அரசாங்கம் கரையேத்த வழி செய்யணும். அப்புறம்தானேங்க உலக அரங்குல போட்டி போடறதெல்லாம்? நான் சொல்றது சரிதானே!