மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாணயம் ஜாப் - பணியைக் காப்பாற்றும் பன்முகத் திறமை!

நாணயம் ஜாப் - பணியைக் காப்பாற்றும் பன்முகத் திறமை!

##~##

''ஒரு நிறுவனம் ஆட்குறைப்பு செய்யும்போது நீங்கள் கடைசி ஆளாக இருக்க வேண்டும். ஒரு நிறுவனம் பதவி உயர்வுக்கு பணியாளர்களை பரிசீலிக்கும்போது நீங்கள் முதல் ஆளாக இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் செய்யவேண்டியது உங்களுடைய திறமையைப் பல்வேறு துறைகளில் வளர்த்துக்கொள்வதுதான்!'' என்கிறார் மனிதவள மேம்பாட்டாளர் டாக்டர் கே.ஜாபர் அலி. பன்முகத் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

''இன்றையச் சூழ்நிலையில் வேலை என்பதுதான் ஒருவரின் அடையாளமாகவும், சுயமதிப்பாகவும் இருக்கிறது. வேலை இல்லாதவர்களுக்கு சமூகத்தில் கிடைக்கும் மதிப்பு குறைவுதான். வேலையை அடிப்படையாக வைத்துதான் வாழ்க்கைத் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில் வேலை இழப்பு என்பது பெரும் பொருளாதார நெருக்கடியையும், மனவேதனை யையும் கொடுக்கும். மேலும், கடந்த இரண்டு, மூன்று வருடமாக புதிய வேலை வாய்ப்பு என்பதும் பெரிதாக இல்லை. எனவே, வேலை மாறுவது என்பது குறைந்துவிட்டது. ஐ.டி. துறையில் இந்தியா முழுவதும் 2011-12-ம் வருடத்தில் 1.75 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் இருந்தன. அதே 2012-13 வருடத்தில் வெறும் 50 ஆயிரம் புதிய வேலைகள் மட்டும்தான் உள்ளன என நாஸ்காம் தெரிவித்துள்ளது.  

நாணயம் ஜாப் - பணியைக் காப்பாற்றும் பன்முகத் திறமை!

எனவே, ஒவ்வொருவரும் இருக்கும் வேலையைத் தக்கவைத்துக்கொள்வதுதான் நல்லது. ஒரு நிறுவனம் ஆட்குறைப்பு செய்யும்போது, 'இவரையெல்லாம் வெளியே அனுப்பிவிடலாம் என்று போடும் பட்டியலில் உங்கள் பெயர் கடைசியில் இருக்க வேண்டும்’ எனில், நீங்கள் உங்கள் திறமையை பல்வேறு துறைகளிலும் வளர்த்துக்கொள்வதுதான் சிறந்தது.

வேலை இழப்பு என்கிற நெகட்டிவ் சூழ்நிலையில் மட்டுமல்ல, பதவி உயர்வு என்கிற பாசிட்டிவ் சூழ்நிலையிலும் உங்களுக்குரிய பலன் கிடைக்க வேண்டுமெனில் பல்வேறு துறைகளில் உங்கள் திறமையை வளர்த்துக்கொள்வதுதான் நல்லது.

ஏற்கெனவே செய்துவரும் வேலையின் நுணுக்கங்கள் அனைத்தையும் நாம் கற்றுக் கொண்டு விட்டோமா என்பதை ஒருமுறைக்கு இரண்டுமுறை ஆராய்ந்து பார்த்துவிடுவது நல்லது. இந்த வேலையில்தான் நமக்கு எல்லாமே தெரியுமே என்று நினைத்துக்கொண்டு புதிதாக எதுவுமே கற்றுக்கொள்ளாமல் இருந்துவிடக் கூடாது. எப்போதுமே இது நமக்குத் தேவையில்லை என எந்த

நாணயம் ஜாப் - பணியைக் காப்பாற்றும் பன்முகத் திறமை!

விஷயத்தையும் ஒதுக்கிவைக்கக் கூடாது. அடுத்தடுத்து புதிதாக எதையாவது கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அதாவது, நீங்கள் விற்பனைப் பிரிவில் வேலை பார்க்கிறீர்கள் என்றால், தயாரிப்பு சம்பந்தமான வேலைகளையும் அதில் உள்ள நுணுக்கங்களையும் தெரிந்துவைத்துக்கொள்வது அவசியம்.

புதிதாக வரும் விஷயங்களை உடனுக்குடன் அப்டேட் செய்துவைத்துக்கொள்வது நமக்கு கூடுதல் சிறப்பைத் தரும். அதிலும், தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களாக இருந்தால், லேட்டஸ்ட் டெக்னாலஜி பற்றி தெரிந்துவைத்திருப்பது மிகவும் அவசியம்.

தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்..!

எதையுமே தேவைப்படும்போது கற்றுக்கொள்ளலாம் என அலட்சியமாக இருக்கக் கூடாது. ஏனெனில், எப்போதுமே ஒரு நிறுவனம், உங்களால் அந்த நிறுவனத்துக்கு என்ன லாபம் கிடைக்கும் என்றுதான் பார்க்கும். இவரால் இரண்டு வேலையை ஒருசேர பார்க்க முடியுமா, கூடுதலாக என்னென்ன விஷயங்கள் தெரியும் என்பதைதான் பார்க்கும். இப்போது உள்ள நிறுவனங்கள் பலவும் பல சிக்கலில் உள்ளன. எனவே, ஒருவரின் சம்பளத்தில் இரண்டுபேர் வேலையைச் செய்பவர்களைத்தான் வேலைக்கு வைத்துக்கொள்ளவே தயாராக இருக்கிறது. கூடுதலாக தெரியும் விஷயங்கள் அனைத்தையும் நிர்வாகத்துக்கு தெரிவிப்பது நல்லது. நேரடியாக தனக்கு இதெல்லாம் தெரியும், அதெல்லாம் தெரியும் என்று நிர்வாகத்திடம்போய் சொல்ல முடியாது. எனவே, உங்களுக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் கூடுதலான வேலைகளையும் சேர்த்து செய்தால் நிர்வாகத்துக்கு உங்கள் திறமை தெரியும்.

நீங்கள் வேலை பார்க்கும் துறைக்குத் தேவையான படிப்புகள் ஏதாவது இருந்தால் அந்தப் படிப்பை பகுதி நேரத்திலாவது படித்துவைப்பது நல்லது. தொழில்நுட்பங்களை எப்போதுமே விரல்நுனியில் வைத்துக்கொள்வது முக்கியம். பொதுவாக தொழில்நுட்பங்களில் கைதேர்ந்தவர்களாக இருப்பவர்கள் தங்கள் வேலையை விரைவாகச் செய்து முடித்து விடுவார்கள் என்பது எல்லோரும் நம்பும் ஒரு விஷயம். அது தெரியாதவர்களை நிறுவனங்கள் மதிப்பதில்லை. எனவே, நிறுவனத்தில் உள்ள தொழில்நுட்பத்தை விரைவாக கற்றுக்கொள்வது முக்கியம்.

செய்ய வேண்டியவை!

ஆட்குறைப்பு என்று வரும்போது கடைசியாக வேலைக்குச் சேர்ந்தவர்களை முதலில் வேலையைவிட்டு அனுப்புவதுதான் வழக்கம். சட்டப்படியும் அதுதான் சரி. ஆனால், இன்று அப்படியெல்லாம் நடப்பதில்லை. திறமையற்றவர்களையும், அதிக சம்பளம் வாங்குபவர்களையும்தான் முதலில் வேலையை விட்டு வெளியேற்றுகிறார்கள். எனவே, ஆட்குறைப்பு சமயங்களில் குறைவான சம்பளத்தில் வேலை பார்க்கவும் நீங்கள் தயாராக

நாணயம் ஜாப் - பணியைக் காப்பாற்றும் பன்முகத் திறமை!

இருக்க வேண்டும். அதோடு, நிறுவனத்தின் வேறு கிளையில் அல்லது வேறு பிரிவுகளில் வேலை பார்க்கவும் உங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

நிர்வாகம் தனக்கு எதிராக இருப்பவர்களை வேலையில் வைத்திருக்க எப்போதுமே விரும்பாது. எனவே, நிர்வாகத்துக்கு எதிரான கருத்துகளைப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. அத்துடன் பணியிடத்தில் அனைவருடனும் தோழமையுடன் இருக்க பழகிக்கொள்ள வேண்டும். நிறுவனம் மேற்கொள்ளும் புதிய திட்டங்களைச் செயலாற்றுவதில் முதல் ஆளாக நீங்கள் இருக்க வேண்டும். சரியோ, தவறோ புதிய விஷயங்களைத் தெரிந்துகொண்டு அதை மற்றவர்களுடன் விவாதிப்பது முக்கியம். தெரியாத விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவது நல்லது.

ஆட்குறைப்பு செய்யும் சமயங்களில் எனக்கு எல்லாமே தெரியும். எனக்கு வேலை போகாது என அதிக நம்பிக்கையுடன் இருக்கக் கூடாது. ஏனெனில், இன்றையச் சூழ்நிலையில் வேலைக்கு மட்டும் இல்லாமல் நிறுவனத்துக்கே பாதுகாப்பு கிடையாது. எனவே, எப்போதுமே அடுத்த வேலைக்கு உங்களைத் தயார்படுத்தி வைத்துக்கொள்வது நல்லது.

இதையெல்லாம் சரியாகச் செய்தாலே போதும்,  எந்தச் சூழ்நிலையிலும் வேலையை இழக்கும் நிலை உங்களுக்கு வராது.

- இரா.ரூபாவதி.