கடந்த 13.10.13 தேதியிட்ட இதழில் 'ஃபேஸ்புக் மார்க்கெட்டிங்... குறைந்த செலவு அதிக லாபம்!’ என்னும் தலைப்பில் சொந்தமாக தொழில் செய்பவர்கள் ஃபேஸ்புக்கில் எப்படி மார்க்கெட்டிங் செய்து வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவது, ஃபேஸ்புக் மார்க்கெட்டிங் மூலம் குறைந்த செலவில் அதிக லாபத்தைப் பெறுவது எப்படி என்பதை விவரமாகச் சொல்லி இருந்தோம். அதைப் படித்துப்பார்த்த பல வாசகர்கள், ஃபேஸ்புக்கில் எங்கள் நிறுவனம் பற்றி பதிவு செய்வது எப்படி? இதற்கு யாரை அணுக வேண்டும்? எவ்வளவு செலவாகும்? என்றெல்லாம் கேட்டனர்.

வாசகர்கள் கேட்ட கேள்விகளை பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் சமூக வலைதளங்களுக்கான பிரிவின் தலைவர் கே.எஸ்.ராஜசேகரிடமே கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

'' ஃபேஸ்புக் என்பது தமிழில் முகப்புத்தகம் என்றே அழைக்கப்படுகிறது. ஃபேஸ்புக்கில் மார்க்கெட்டிங் செய்ய கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால், இணையதள வசதியைப் பெற சில நூறு ரூபாய்களை மட்டுமே செலவு செய்யவேண்டி இருக்கும். அதேபோல, இதற்காக யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியமும் கிடையாது. இணையதள வசதி இருந்தாலே போதுமானது.

முதலில் https://www.facebook.com/pages/create/ என்கிற முகவரிக்குச் சென்று அவரவர் களின் ஃபேஸ்புக் கணக்கை ஆரம்பித்துக்கொள்ளலாம். அதற்கு முன்பாக உங்களுக்கென்று தனியாக இ-மெயில் முகவரி இருப்பது அவசியம். அதையும் தயார்படுத்திக் கொண்டால்தான் ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்க முடியும்.

ஃபேஸ்புக்கில் உங்களுக்கான கணக்கை ஆரம்பித்து பின்னர் தங்களின் முகவரி, அலைபேசி எண் போன்ற விவரங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன்பிறகு தங்களின் தொழில் சார்ந்த புகைப்படங்கள் அல்லது நிறுவனத்தின் லோகோ போன்றவற்றை புரஃபைல் படமாக வைப்பது அவசியம்.

இதன்பிறகு நீங்கள் உங்கள் தொழிலுக்கான ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்திருக்கும் தகவலை தங்களின் சுற்றத்தார் மற்றும் நண்பர்களிடம் தெரியப்படுத்துங்கள். அவர்களே தங்களின் ஃபேஸ்புக் பக்கத்தை அவர்களது நண்பர்களுக்கு அறிமுகம் செய்பவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்களிடம் முதலில் தொலைபேசி வாயிலாகவோ அல்லது இதர சேவைகளின்

வாயிலாகவோ தெரியப்படுத்துவது அவசியம்.

அவர்கள் உங்களின் ஃபேஸ்புக் பக்கத்துக்கு லைக் (Like) மற்றும் பகிர்தல் (Share) போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உங்களின் ஃபேஸ்புக் பக்கம் எளிதாக இன்னொருவரால் இனம் கண்டுகொள்ளப்பட்டு, அவர்களும் உங்களின் ஃபேஸ்புக் பக்கத்தின் நண்பர் களாவார்கள்.

இந்த நண்பர்களை அதிகப்படுத்துவது அந்தந்த ஃபேஸ்புக் பக்கத்தின் உரிமையாளரையேச் சாரும். தொழில் சார்ந்த விஷயங்கள் குறித்து ஃபேஸ்புக் பிசினஸ் பக்கத்தில் போடுவதைப் பொறுத்துதான் நண்பர்களின் எண்ணிக்கையானது பெருகும். எடுத்த எடுப்பிலேயே நீங்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பது என்கிற கோணத்தில் ஃபேஸ்புக்கில் தகவல்களை போடாமல், சுவாரஸ்யமான, அதேநேரத்தில், உங்கள் தொழில் சார்ந்த தகவல்களைத் தருவதன் மூலம் நீங்கள் நிறைய ஃபேஸ்புக் நண்பர்களைப் பெறமுடியும்.

ஃபேஸ்புக் பிசினஸைப் பொறுத்தவரை, ஒருவரது விருப்பத்தைத் தெரிந்துகொண்டு, அவருக்கு நாம் உற்பத்தி செய்யும் பொருட்கள் குறித்து அதிகமாக விளம்பரம் செய்யலாம். ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்களின் விருப்பம் என்ன என்பதைத் தெரிவித்திருப்பார்கள் என்பதால் அதை மையமாகவைத்து மார்க்கெட்டிங் செய்வது எளிது!''

- செ.கார்த்திகேயன்,படம்: தி.குமரகுருபரன்.