இந்த வாரம் கொண்டைக்கடலை விலைப்போக்கை பற்றி சொல்கிறார் ஜே.ஆர்.ஜி. வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தென்மண்டல மேலாளர் முருகேஷ்குமார்.

கொண்டைக்கடலை! (Chana)

''நடப்பு ஆண்டில் கொண்டைக்கடலை விதைப்பு பெரிய மாநிலங்களில் தொடங்கினாலும் பயிரிடப்படும் பரப்பளவு குறைந்துள்ளது. இதற்குக் காரணம், விவசாயிகள் அதிக லாபம் தரும் கோதுமை போன்ற பயிர்களுக்கு மாறியிருப்பதாகும். நடப்பு ராபி பருவத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு 3,100 ரூபாய் நிர்ணயித்திருந்தாலும், தற்போதுகூட ஸ்பாட் சந்தையில் கொண்டைக்கடலை விலை குவிண்டாலுக்கு 3,000 ரூபாய் வரை வர்த்தகமாகி வருகிறது. காரீஃப் பருவத்தில் பருப்பு வகைகளின் உற்பத்தி 6.01 மில்லியன் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுவே கடந்த ஆண்டு, இதே காலத்தில் 5.91 மில்லியன் டன்னாக இருந்தது. மேலும், அதிகப்படியான கை இருப்பால், 30 சதவிகிதம் விலை குறைந்துள்ளது. வரும் மாதங்களில் விலை குவிண்டாலுக்கு 3,000 ரூபாய் முதல் 3,500 ரூபாய் வரை வர்த்தகமாகலாம். 2,800-க்கு கீழ் விலை குறையும்போது வாங்கலாம்.''

மிளகாய்! (Chilli )

கடந்த வாரம் வரத்தைவிட தேவை அதிகமாக இருந்ததால் விலை சற்று அதிகரித்து வர்த்தகமானது. வரும் வாரத்தில் ஏற்றுமதி தேவை அதிகரிக்கலாம் என்பதால், விலையும் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இலங்கை மற்றும் பங்களாதேஷில் தேவை அதிகரித்திருப்பதாக ஸ்பாட் சந்தைகள் கூறுகின்றன. எனினும், போதியளவு மிளகாய் வரத்து அதிக விலையேற்றத்தைத் தடுக்கலாம். மத்தியப்பிரதேச மாநிலத்திலிருந்து மிளகாய் வரத்து தொடங்கியுள்ளது. மேலும், மத்தியப்பிரதேசத்தில் மிளகாய் பயிர் 50 முதல் 55 லட்சம் பைகள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆந்திரப்பிரதேச விவசாயிகள்துறை மிளகாய் பயிரிடப்படும் பரப்பளவு 9.5 சதவிகிதம் குறைந்து 12,302 ஹெக்டேராக உள்ளது என கூறியுள்ளது.

மஞ்சள்! (Turmeric)

அதிக இருப்பு மற்றும் வரத்து காரணமாக கடந்த வாரம் மஞ்சள் விலை குறைந்தே வர்த்தகமானது. மேலும், மஞ்சளின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி தேவை மந்தமாக இருப்பதால் விலை குறையவே வாய்ப்புள்ளது. நவம்பர் 12-ம் தேதியின்படி என்.சி.டி.இ.எக்ஸ்-ல் மஞ்சள் இருப்பு 5,398 டன்னாக இருந்தது. இதுவே, கடந்த மாதம் இதே காலத்தில் 7,325 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்திய வானிலை ஆய்வுமையம் தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் மிக கனத்தமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது. குறிப்பாக, ராயலசீமா பகுதியில் கனத்தமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மஞ்சளின் விலை வரும் வாரத்தில் மந்தமாகவே இருக்கும்.

ஏலக்காய்! (Cardamom )

ஏலக்காய் வரத்து போதிய அளவு இருந்ததால் கடந்த வாரம் அதன் விலை சற்று குறைந்தே வர்த்தகமானது. மேலும், சந்தை நிலவரப்படி சராசரியாக கேரள ஏலச் சந்தைகளில் தினவரத்து, கடந்த வருடம் இதே காலத்தில் இருந்ததைவிட அதிகமாகவே இருக்கிறது. மேலும் கடந்த வியாழக்கிழமை தினவரத்து சுமார் 101 டன்னாக இருந்தது. சராசரி விலை கிலோ 595 ரூபாய்க்கும் அதிகபட்ச விலை 833 ரூபாய்க்கும் வர்த்தகம் இருந்தது. மேலும், நவம்பர் 11-ன்படி எம்.சி.எக்ஸ்-ல் ஏலக்காய் இருப்பு 69.80 டன்னாக இருந்தது. இதுவே, கடந்த வாரம் இதே காலத்தில் 59 டன்னாக இருந்தது. ஆக வரும் வாரத்தில் ஏற்றுமதி தேவை இருப்பின், விலையில் மாற்றம் இருக்கலாம். இல்லையெனில், விலை குறையவே வாய்ப்புகள் அதிகம்.

மிளகு! (Pepper)

கடந்த வாரம் மிளகின் தேவை அதிகம் இருந்ததால் விலை அதிகரித்தே வர்த்தகமானது. இந்தியா மட்டும் அல்லாமல் மிளகு உற்பத்தி செய்யப்படும் நாடுகளில் மிளகு விலை அதிகரித்தே வர்த்தகமானது. குறிப்பாக, இலங்கையில் 4 சதவிகிதமும், வியட்நாமில் 2 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. மேலும், வரும் வாரத்தில் அதிகப்படியான தேவை இருப்பதால் மிளகு விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், அடுத்த மிளகு அறுவடை சீஸனிலும் உற்பத்தி குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரத்தில் குறைவான இருப்பு மற்றும் அதிக தேவை காரணமாக விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

- சே.புகழரசி.