Published:Updated:

பி.எஃப். வருமானம்: வரி கட்டணுமா ?

பி.எஃப். வருமானம்: வரி கட்டணுமா ?

பிரீமியம் ஸ்டோரி

கேள்வி-பதில்

பி.எஃப். வருமானம்: வரி கட்டணுமா ?
##~##
கடந்த நான்கு வருடமாக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். தற்போது சொந்தத் தொழில் செய்வதற்காக அந்த வேலையை விட்டுவிட்டேன். என் பி.எஃப். கணக்கில் இருந்த பணத்தையும் எடுத்துவிட்டேன். அந்தத் தொகைக்கு  வருமான வரி செலுத்தவேண்டுமா?

- முருகன், தாம்பரம். சி.ஏ.கோபால கிருஷ்ணராஜு, ஆடிட்டர்.

பி.எஃப். வருமானம்: வரி கட்டணுமா ?

''ஐந்து வருடத்துக்குள் பி.எஃப். கணக்கில் உள்ள தொகையை எடுத்தால் அதை இதர வருமானமாகக் காண்பித்து, அடிப்படை வரம்புக்கு ஏற்ப வருமான வரி செலுத்தவேண்டும். நீங்கள் நான்கு வருடத்தில் வேலையைவிட்டு விலகியதால் வரி செலுத்த வேண்டும்.''

பி.எஃப். வருமானம்: வரி கட்டணுமா ?

பத்தாண்டுகளுக்கு முன்பு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கினேன்.  தற்போது ரூ.8 லட்சம் பாக்கி உள்ளது. இப்போது கடனை ப்ரீ-குளோஸ் செய்யலாம் என நினைக்கிறேன். இதற்கு என்ன நடைமுறை?

- ராஜசேகர், கும்பகோணம். எஸ்.சுப்புராமன், முதன்மை மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தலைமை அலுவலகம், சென்னை.

பி.எஃப். வருமானம்: வரி கட்டணுமா ?

''வீட்டுக் கடனை ப்ரீ-குளோஸ் செய்வதில் எந்த விதமான சிக்கலும் இல்லை. இதற்காக வங்கிகள் கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடனை முன்கூட்டியே கட்டும்போது, நிலுவையில் உள்ள கடன் தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து கட்டினால் போதும்.''

பி.எஃப். வருமானம்: வரி கட்டணுமா ?
பி.எஃப். வருமானம்: வரி கட்டணுமா ?

 ஜூன், 2012-ல் வீட்டுக் கடன் மூலம் ஒரு ஃப்ளாட் வாங்கினேன். மே, 2013-ல் ஃப்ளாட்டை தருவதாக சொன்னார் பில்டர். ஆனால், இன்றுவரை தரவில்லை. இதற்கான அபராதத் தொகை 2% தருவதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.  இத்தொகைக்கு நான் வரி விலக்கு பெற முடியுமா? கட்டுமான காலத்தில் கட்டும் இ.எம்.ஐ.க்கு வரிவிலக்கு கிடைக்குமா?

- சம்பத், சென்னை. ஸ்ரீகாந்த், ஆடிட்டர்.

பி.எஃப். வருமானம்: வரி கட்டணுமா ?

''அபராதம் மூலமாக வரும் தொகையும் வருமானம்தான். எனவே, அத்தொகைக்கு உங்களின் வருமான வரம்புக்குட்பட்டு வரி செலுத்த வேண்டும். மேலும், நீங்கள் வீட்டுக் கடனுக்காக செலுத்தும் இ.எம்.ஐ.யில் அசல் மற்றும் வட்டியும் சேர்ந்து இருக்கும். கட்டுமானப் பணி நடைபெறும் காலத்தில் வீட்டுக் கடனுக்கு செலுத்தும் வட்டித் தொகைக்கு அந்த ஆண்டில் வரி விலக்கு பெற முடியாது. அதேநேரத்தில், கட்டுமானப் பணி முடிந்தபிறகு நீங்கள் செலுத்தியிருக்கும் வட்டி தொகையை அடுத்த ஐந்து வருடத்துக்கு சமமாக பிரித்து வரிச் சலுகை கோரி பெற முடியும். உதாரணத்துக்கு, கட்டுமானப் பணிகள் நடைபெறும் காலத்தில் மொத்தம் 5 லட்சம் ரூபாய் வட்டி செலுத்தி இருந்தீர்கள் எனில், அத்தொகை அடுத்த ஐந்து வருடங்களுக்கு ரூ.1 லட்சம் என கணக்கு காண்பித்து வரி விலக்கு பெறலாம். இதில் ஒரு நிபந்தனை. இந்த ரூ.1 லட்சம் என்பது நிதி ஆண்டில் கட்டும் வட்டியில் கழிக்கப்படும் ரூ.1.5 லட்சம் உட்பட்டதுதான். அதாவது, முன்கட்டுமானக் காலத்தில் கட்டிய வட்டி ரூ.1 லட்சம் கழிக்கப்பட்ட பிறகு மீதியுள்ள ரூ.50,000-க்கே கட்டுமான காலத்துக்குப் பிறகான வட்டியில் கழித்துக்கொள்ள முடியும். கட்டுமான காலத்தில் கட்டப்படும் அசல் தொகைக்கு வரிச் சலுகை இல்லை.''

பி.எஃப். வருமானம்: வரி கட்டணுமா ?
பி.எஃப். வருமானம்: வரி கட்டணுமா ?

 நான் ஐந்துக்கும் மேற்பட்ட இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வைத்திருக்கிறேன். இந்நிலையில் கடந்த மாதம் ஒரு புதிய பாலிசி எடுத்தேன். இந்த பாலிசி எலெக்ட்ரானிக் வடிவத்தில்தான் கிடைக்கும் என்கிறார் என் ஏஜென்ட். என்னிடம் இருக்கும் பழைய பாலிசிகளை எலெக்ட்ரானிக் முறையில் கட்டாயம் மாற்ற வேண்டுமா?

- சுதாகர், வண்ணாரப்பேட்டை. ஏ.ஆர்.வாசுதேவன், மேலாளர், சி.டி.எஸ்.எல்.

பி.எஃப். வருமானம்: வரி கட்டணுமா ?

''இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் புதிய பாலிசிகள் எலெக்ட்ரானிக் வடிவத்தில் இருக்க வேண்டும் என ஐ.ஆர்.டி.ஏ. அறிவித்துள்ளது. இதற்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது. ஆனால், ஏற்கெனவே உள்ள பாலிசிகளை இ-வடிவத்தில் மாற்றவேண்டும் என்று கட்டாயமில்லை. நீங்கள் விருப்பப்பட்டால் மாற்றிக்கொள்ளலாம். இதற்கு ஐ.ஆர்.டி.ஏ.வால் அனுமதிக்கப்பட்ட ரெப்பாசிட்டரி நிறுவனங்கள் உள்ளன. என்.எஸ்.டி.எல்.

டேட்டா பேஸ் மேனேஜ்மென்ட், சென்ட்ரல் இன்ஷூரன்ஸ் டெபாசிட்டரி, ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் புராஜெக்ட், கேம்ஸ் ரெப்பாசிட்டரி சர்வீஸ், கார்வி இன்ஷூரன்ஸ் ரெப்பாசிட்டரிகளில் ஏதாவது ஒன்றில் டீமேட் கணக்கு ஆரம்பிக்கலாம். இதற்கு நீங்கள் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கும் நிறுவனங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அங்கு நீங்கள் வைத்திருக்கும் இன்ஷூரன்ஸ் பத்திரங்களைத் தந்து, அதை இ-வடிவத்தில் மாற்றிக்கொள்ளலாம். இதற்கு குறைந்தது ஒருமாத காலம் ஆகும்.''

பி.எஃப். வருமானம்: வரி கட்டணுமா ?

நான் படித்துமுடித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். இன்னும் இரு ஆண்டுகளில் திருமணம் செய்துகொள்ள நினைக்கிறேன். என் திருமண தேவைகளுக்கு எப்படி முதலீடு செய்யலாம்?

- உமேஷ், சென்னை. என்.ஸ்ரீகாந்த், நிதி ஆலோசகர்.

பி.எஃப். வருமானம்: வரி கட்டணுமா ?

 ''உங்கள் திருமணத்துக்கான காலம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ளதால், நீங்கள் ரிஸ்க் எடுக்க முடியாது. எனவே, வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், வங்கி ஆர்.டி., குறுகியகால கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ரிலையன்ஸ் லிக்விட் ஃபண்டு, ஆக்ஸிஸ் டிரஷரி ஃபண்டு ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.''

பி.எஃப். வருமானம்: வரி கட்டணுமா ?
பி.எஃப். வருமானம்: வரி கட்டணுமா ?

நீண்டகால நோக்கில் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஸ்டாப் லாஸ் தேவையா?

@- செந்தில்நாதன், ஷியாம் சேகர், தலைவர், தமிழ்நாடு முதலீட்டாளர்கள் சங்கம்.

பி.எஃப். வருமானம்: வரி கட்டணுமா ?

 ''நீண்டகால முதலீட்டாளர்களுக்கு ஸ்டாப் லாஸ் என்பது தேவையே இல்லை. ஏனெனில், நீண்டகாலத்துக்கு பங்குகள் வாங்கும்போது அதிக கவனத்துடன்தான் பங்குகளை வாங்குவோம். தவிர,  சிறிய ஏற்றஇறக்கங்களுக்கெல்லாம் பங்குகளை விற்றால் அது நீண்டகால முதலீட்டுக்கு சரிவராது. ஸ்டாப் லாஸ் என்பது முதலீட்டுக்கான கருவி (டூல்) கிடையாது. அது வர்த்தகம் செய்வதற்கான கருவி என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். குறுகியகால முதலீட்டில் நஷ்டத்தைத் தவிர்ப்பதற்காகத்தான் ஸ்டாப் லாஸ்.''

படம்: ஜெ.வேங்கடராஜ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு