Published:Updated:

வென்ச்சர் கேப்பிட்டல் முதலீடு: முன்னணியில் நிற்கும் தென்மாநிலங்கள்!

வென்ச்சர் கேப்பிட்டல் முதலீடு: முன்னணியில் நிற்கும் தென்மாநிலங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

நம் நாட்டில் வென்ச்சர் கேப்பிட்டல் முதலீடு எப்படி இருக்கிறது என்கிற ஆய்வறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது சென்னை ஐ.ஐ.டி.-ன் மேனேஜ்மென்ட் துறை. இந்த ஆய்வறிக்கையை மேனேஜ்மென்ட் துறை பேராசிரியர் தில்லைராஜன் தொகுத்து அளித்துள்ளார். இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள முக்கிய விஷயங்களை அவர் நம்மிடம் எடுத்துச் சொன்னார்.  

''கடந்த பத்தாண்டுகளில் மொத்தம் 1,303 மில்லியன் டாலர் முதலீடு இந்தியாவுக்குள் வந்திருக்கிறது. இதில் கிழக்கு மாநிலங்கள் 61.47 மில்லியன் டாலரும், (மொத்த முதலீட்டில் 5%), வடமாநிலங்கள் 181.85 மில்லியன் டாலரும் (மொத்த முதலீட்டில் 14%), தென்மாநிலங்கள் 847.93 மில்லியன் டாலரும் (மொத்த முதலீட்டில் 65%), மேற்கு மாநிலங்கள் 212.03 மில்லியன் டாலரும் (மொத்த முதலீட்டில் 16%) பெற்றிருக்கின்றன. மெட்ரோ நகரங்கள் 1056.43 மில்லியன் டாலரும், மெட்ரோ அல்லாத நகரங்கள் 246.85 மில்லியன் டாலரும் முதலீடுகளாக பெற்றுள்ளன.

வென்ச்சர் கேப்பிட்டல் முதலீடு: முன்னணியில் நிற்கும் தென்மாநிலங்கள்!

துறைவாரியாக வந்த வென்ச்சர் கேப்பிட்டல் முதலீடுகளைப் பற்றி சொல்ல வேண்டுமெனில், ஆரம்பகட்ட பணிகளுக்கு 205.53 மில்லியன் டாலரும், முறைப்படுத்துதல் மற்றும் சேவை வேலைகளுக்கு 1031.73 மில்லியன் டாலரும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வேலைகளுக்கு 66.02 மில்லியன் டாலரும் வந்திருக்கிறது. இதன்மூலம் தொழில்முனைவது இன்றைக்கு பலரும் விரும்பி ஏற்கும் விஷயமாக மாறிவருகிறது என்பதை மறுக்க முடியாது'' என்றார் அவர்.

வென்ச்சர் கேப்பிட்டல் முதலீட்டை பெறுவதில் தென்மாநிலங்கள் முன்னணியில் இருப்பது நமக்குப் பெருமைதான்!

- நீரை.மகேந்திரன்,
படம்: ப.சரவணகுமார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு