Published:Updated:

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

பிரீமியம் ஸ்டோரி

இந்த வாரம் கச்சா எண்ணெய் விலைப்போக்கை பற்றி சொல்கிறார் ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனத்தின் கிளஸ்டர் ஹெட் சிவக்குமார்.

கச்சா எண்ணெய்!

##~##

அமெரிக்காவில் கச்சா எண்ணெய் தேவை சற்று குறைந்தபோதிலும், சீனாவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தம் அதன் விலை சரிவைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் நிலவிவந்த பொருளாதார சரிவு காரணமாக கச்சா எண்ணெய் விலை கடந்த சில வாரங்களாக குறைந்து வந்தது. வெளிநாட்டு முதலீடு மற்றும் நிதிநிலையை சீரமைக்க பல திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறது சீனா. இதையடுத்து கச்சா எண்ணெய் விலை சரிவு தடுக்கப்பட்டது.  

கடந்த செப்டம்பர் மாதத்தில் சவுதி அரேபியாவில் உள்ள கூட்டு நிறுவனங்களின் குறியீட்டின்படி, நாட்டின் மொத்த எண்ணெய் உற்பத்தி தோராயமாக ஒரு நாளைக்கு 10.12 மில்லியன் பேரல்களாகும். இதில் 7.84 மில்லியன் பேரல்கள் அனுப்பப்பட்டன.

ஈரான் மற்றும் ஜெனிவா நாடுகளுக்கு இடையே நவம்பர் 20-ம் தேதியன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் நோக்கம், ஈரான் அணுசக்தி திட்டங்களை தடைசெய்து, எண்ணெய் உற்பத்திக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை நீக்குவதாகும். அண்மையில் லிபியாவில் நடந்த பிரச்னை காரணமாக லண்டனில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. மேலும், அந்த நாட்டின் துணை புலனாய்வுத் துறை தலைவர் கடந்த ஞாயிறன்று கடத்தப்பட்டதால், எண்ணெய் ஏற்றுமதியில் தடங்கல்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஈரான் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டால் ஒரு மில்லியன் பேரல் தினசரி வரத்து அதிகமாகும். வரும் வாரத்தில் ரெசிஸ்டன்ஸ் லெவல்: ரூ.6,165, ரூ.6,300. சப்போர்ட் லெவல்: ரூ.5,841, ரூ.5,600.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

தங்கம்!

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

சீனாவின் ஷாங்காய் மார்க்கெட்டில் நவம்பர் 25-ம் தேதி முதல் வங்கிகளுக்கு இடையேயான தங்க வர்த்தக பரிமாற்றம் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு விலை மதிப்பற்ற உலோகங்களுக்கான தேவை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாங்காய் தங்கம்

எக்ஸ்சேஞ்ச் உலக அளவில் தங்க வர்த்தகத்தில் பெரிய அளவில் உள்ளது. சீனாவின் தங்கம் மார்க்கெட்டை விரிவுபடுத்த இது உதவும். இதனால் நடப்பு ஆண்டில் உலகின் மிகப் பெரிய தங்க நுகர்வோர் நாடாக சீனா மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சீனாவில் தங்கத்தின் பயன்பாடு 29% அதிகரித்து 1,000 மெட்ரிக் டன் அளவைத் தொடும் என புளூம்பெர்க் சர்வே தெரிவித்துள்ளது.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதையடுத்து தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. இதையடுத்து கடந்த வியாழனன்று வெளியான அறிக்கையில், அமெரிக்காவின் வேலை யின்மை குறைந்துள்ளதாக வந்துள்ளது. மேலும், ஃபெடரல் ரிசர்வ் பேங்க் தன்னுடைய பாண்டு வாங்கும் திட்டத்தில் விரைவில் மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தைகளில் ரூபாயின் மதிப்பு சரிவு தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்கள்படி வரும் வாரத்தில் விலை குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

வெள்ளி!

டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து வெள்ளியின் விலை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்த வளர்ச்சி குறியீடு சாதகமாக இருப்பதால், வெள்ளியின் விலை குறையவே வாய்ப்புகள் அதிகம்.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

அடிப்படை உலோகங்கள்!

சர்வதேச சந்தையில் காப்பரின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. அமெரிக்காவின் பொருளாதாரம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், பாண்டு பையிங் திட்டம் குறைக்கப்படலாம் என்று ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த ஃபெடரல் ரிசர்வின் ஊக்கத் திட்டம் பல கமாடிட்டிகளின் விலை அதிகரிக்க காரணமாக இருந்தது. மேலும், சீனாவில்

ஹெச்.எஸ்.பி.சி-யின் உற்பத்தி குறியீடு நவம்பர் மாதத்தில் 50.4-ஆக குறைந்துள்ளது. இது, கடந்த அக்டோபர் மாதத்தில் 50.9-ஆக இருந்தது. ஜெர்மனியில் சாதகமான வணிக நிலை நிலவுவதால் காப்பரின் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

இயற்கை எரிவாயு!

அமெரிக்காவின் எரிவாயு அதிகம் பயன்படுத்தும் பகுதிகளில், அடுத்த 10 நாட்களுக்கு சாதாரண வெப்ப நிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இயற்கை எரிவாயு தேவை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, வரும் வாரத்தில் இயற்கை எரிவாயு விலை ரூபாய் மதிப்பைப் பொறுத்தே வர்த்தகமாகும்.

- சே.புகழரசி

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு