பிரீமியம் ஸ்டோரி

இந்த வாரம் மிளகாயின் விலைப்போக்கைப் பற்றி சொல்கிறார் ஜே.ஆர்.ஜி வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் கமாடிட்டி நிபுணர் சௌடா ரெட்டி.

மிளகாய்! (Chilli)

''மிளகாய் விலை கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து 50% உயர்ந்துள்ளது. அதோடு கடந்த இரு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை குவிண்டாலுக்கு 7,500 ரூபாயாக அதிகரித்துள்ளது. காரணம், மத்தியப்பிரதேச மாநிலத்தில் பயிர்கள் சேதமடைந்துள்ளது. அதேசமயம், ஏற்றுமதி தேவையும் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வருடத்தில் மிளகாய் விலை ரூபாய் 4,800 முதல் 7,300-குள்ளேயே வர்த்தகமாகி வந்தது. 2012-13-ம் வருடத்தில் மிளகாய் உற்பத்தி 13 லட்சம் மெட்ரிக் டன்னாக குறைந்தது.  

உற்பத்தி: ஆந்திராவில் மிளகாய் உற்பத்தி சுமார் 2 லட்சம் ஹெக்டேராக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. ஆந்திராவில் பெய்த தொடர் மழை காரணமாக ஏற்கெனவே மிளகாய் பயிர் சேதமடைந்துள்ளது. உள்நாட்டு உற்பத்தி கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 14 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்துள்ளது.

அக்ரி கமாடிட்டி!

ஏற்றுமதி: கடந்த வருடம் 2.81 லட்சம் டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ஏப்ரல் - ஜூன் வரையிலான ஏற்றுமதி 65,500 டன்களாகும். இந்தியாவுக்கு வருடத்துக்கு மிளகாய் ஏற்றுமதி மூலம் 2,000 கோடி ரூபாய் வரை கிடைக்கிறது.

பருவம்: ஜனவரி முதல் ஏப்ரல் வரை, வரத்து அதிகப்படியாக இருப்பதால் விலை குறையும். மே மாதத்துக்குபின் வரத்து குறையும்போது விலை அதிகரிக்கும். இந்த விலையேற்றம் தொடர்ந்து நவம்பர் மாதம் வரை நீடிக்கும். ஆனால், மத்தியப்பிரதேசத்தில் விளைச்சல் குறைந்துள்ளதால் விலையிறக்கம் இருக்காது.

எதிர்பார்ப்பு: டிசம்பர் மாத கான்ட்ராக்ட்கள் தற்போது குவிண்டால் 7,500 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகின்றன. டிசம்பர் கான்ட்ராக்ட் முடியும் வரை குவிண்டாலுக்கு ரூபாய் 6,600 முதல் 8,000 வரை வர்த்தகமாகலாம். வரும் வாரத்தில் சப்போர்ட் லெவல்: ரூ.6,800, ரூ.7,100. ரெசிஸ்டன்ஸ் லெவல்: ரூ.8,000, ரூ.8,400.''

அக்ரி கமாடிட்டி!

மிளகு! (Pepper)

மிளகு விலை தேவை மற்றும் சப்ளை பற்றாக்குறையால் தொடர்ந்து ஏற்றத்திலேயே உள்ளது. மேலும், உலக மிளகு வர்த்தக சந்தைகளில் மிளகு விலை அதிகரித்தே காணப்பட்டது. நடப்பாண்டில் கறுப்பு மிளகு உற்பத்தி 25-30 சதவிகிதம் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்தோனேஷியாவில் உள்ள லம்பங்கில் உற்பத்தி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நடப்பாண்டில் உற்பத்தி குறைந்ததும், கடந்த ஆண்டின் கையிருப்பு  நடப்பாண்டு முதல் 6 மாதத்தில் ஏற்றுமதிக்காக உபயோகப்படுத்தப்பட்டதால், இருப்பு குறைவாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜீரகம்! (Jeera)

அக்ரி கமாடிட்டி!

கடந்த வாரத்தில் ஜீரகத்தின் தினவரத்து அதிகமாக இருந்ததால் விலை சற்று குறைந்தே வர்த்தகமானது. குஜராத்தில் ஜீரக விதைப்பு தற்போது முடிவடைந்துள்ளது. மேலும், பயிரிடப்பட்டுள்ள பரப்பளவானது கடந்த வருடத்தைவிட அதிகம். கடந்த வியாழனன்று தினவரத்தாக உஞ்ஹா சந்தையில் 9,000 பைகளாக (1 பை- 55 கிலோ) இருந்தது. கடந்த வருடத்தைவிட ஜீரகம் பயிரிடப்படும் பரப்பளவு

10 - 15 சதவிகிதம் அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வரத்து அதிகம் மற்றும் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக வரும் வாரத்தில் விலை குறைய வாய்ப்புகள் அதிகம்.

ஏலக்காய்! (Cardamom)

அதிக கையிருப்பால் கடந்த வாரம் ஏலக்காய் விலை குறைந்தே வர்த்தகமானது. சந்தை தகவல்படி, கேரளாவில்  கடந்த வருடத்தைவிட வரத்து அதிகமாக இருக்கிறது. கடந்த வியாழனன்று ஏலக்காய் வரத்து 122 டன்னாக இருந்தது. குறைந்தபட்ச விலை ரூபாய் ரூ.624-ஆகவும், அதிகபட்ச விலை ரூ.800  வரையும் வர்த்தகமானது.

- சே.புகழரசி,  
படம்: ஜெ.வேங்கடராஜ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு