Published:Updated:

பணவளக் கலை!

பணவளக் கலை!

பணவளக் கலை!

பணவளக் கலை!

Published:Updated:
##~##

என்னால் தொழில் தொடங்க முடியுமா? எனக்கு அந்தத் திறமை இருக்கிறதா? ஓய்வுகாலத்துக்கு அருகில் இருக்கும் என் வயசில் இதெல்லாம் சாத்தியமா? இதெல்லாம் அதிர்ஷ்டம் இருக்கிறவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்பது போன்ற பலவிதமான எண்ண ஓட்டங்கள் உங்கள் மனதில் ஓட ஆரம்பித்திருக்கும்.

இங்கேதான் நாம் ஒரு பெருந்தவறைச் செய்கிறோம். அன்றாடம் நாம் சந்திக்கும் பணரீதியான வெற்றி பெற்றவர்களையும், அவர்களுடைய நடவடிக்கைகளையும் மனதில் வாங்கி யோசிக்க ஆரம்பிக்கிறோம். ஒரு தொழிலதிபரை நாம் ஒரு திருமணத்தில் சந்திக்கிறோம். மனுஷன் என்ன ஒரு தெளிவாகப் பேசுகிறார்! கம்ப்யூட்டர் பற்றியும் தெரிகிறது; காபியின் வரலாறும் தெரிகிறது; அமெரிக்கா போனாலும் காருடன் ஏர்போர்ட்டில் நிற்கும் அளவுக்கு ஆள்பழக்கம் இருக்கிறது. ஆத்தூருக்குப் போனாலும் மதியச்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணவளக் கலை!

சாப்பாடு எங்கள் வீட்டில்தான் என்று கட்டாயப்படுத்தும் அளவுக்கு ஆளும்  இருக்கிறது என்ன ஒரு நெட்வொர்க், அடேங்கப்பா என்று வியக்கிறோம்.

ஆனால்,  நமக்கோ வசிக்கும் ஊரைத் தாண்டினால்  சொந்தக்காரர்கள் தவிர, வேறு யாரும்  பழக்கமில்லை. இந்தப் பலவீனத்தை எல்லாம் வைத்துக்கொண்டு நம்மால் தொழில் செய்ய முடியவே முடியாது என்ற முடிவினை அரை நொடியில் எடுத்துவிடுகிறோம்.  

ஒரு விஷயத்தை ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் தெளிவு பிறக்கும். திருமண வீட்டில் நாம் பார்த்த தொழிலதிபர் நீண்டநாட்களாகத் தொழிலில் இருப்பார். பல ஊர்களிலும் அவருடைய தயாரிப்புகளோ அல்லது அவரது தயாரிப்புக்கு உதவும் பொருட்களையோ சப்ளை செய்வார். இதனாலேயே நட்புவட்டம் அவருக்கு கூடியிருக்கும். பல இடங்களுக்குச் சென்று நிறைய மனிதர்களைச் சந்திப்பதாலும் அவரை நோக்கி சிந்து சமவெளி நாகரிகம் குறித்த செய்திகளும், அடுத்த ஐந்தாண்டுகளில் கம்ப்யூட்டர் துறையில் என்ன புதுமைகள் வரும் என்பது குறித்த செய்திகளும்  அவருக்கு வந்துகொண்டேயிருக்கும். இதனை உள்வாங்கி பின்னர் அவர் பல இடங்களிலும் வாய்ப்புக் கிடைக்கும்போது சொல்வாராயிருக்கும். நாமோ இன்னும் தொழிலை ஆரம்பிக்கவேயில்லை! அதற்குள் நாம் அவருடைய அனுபவத்தையும் கம்பீரத்தையும் பெற நினைத்தால் அது சாத்தியமேயில்லை.

பணவளக் கலை!

இன்னும் ஓர் உதாரணம் சொல்கிறேன். சினிமாத் துறையில் இருக்கும் பல்வேறு பணிகளிலும் (நடிப்பு, இசை, இயக்கம், பாடல், எடிட்டிங், விநியோகம், தயாரிப்பு என) சாதனையாளராக வேண்டும் என பலரும் அன்றாடம் புதிதுபுதிதாக முயல்கிறார்கள். பல முன்னணி ஹீரோக்கள் இருக்கும்போதுதான் அறிமுக ஹீரோக்கள் திரைக்கு வருகிறார்கள். பல முன்னணி டைரக்டர்கள் இருக்கும் சூழலில்தான் புதிய டைரக்டர்கள் வருகிறார்கள்.

சினிமாத் துறையில் வெற்றி என்பதே கடுமையான போட்டியைத் தாண்டி வெள்ளைத்திரையில் மக்கள் கண்ணில் பட்டுவிடுவதுதான். திரையில் மக்கள் கண்ணில்பட்டு மனதில் நின்றுவிட்ட பின்னர்தான் ஒருவரது வருமானம்  பலமடங்கு அதிகரிக்க ஆரம்பிக்கும். மக்கள் கண்ணில் படுவதற்கு முன்னால், அவர்கள் எடுக்கும் மிகக் கடுமையான முயற்சியும், பயிற்சியும், ரிஸ்க்கும்தான் அவர்களை மக்கள் கண்ணில் படவைக்கிறது. இதற்கே  மிகக் கடுமையான முயற்சி, பயிற்சி மற்றும் ரிஸ்க் எடுக்கவேண்டியுள்ளது. திரையில் மக்கள் கண்ணில்பட்டு மனதிலும் நின்றுவிட்டால், அதன்பிறகும் தொழில்ரீதியாக பல்முனைப் போட்டியான சவால்கள் தொடர்கிறது. அந்தச் சவால்களைத் தாண்டி உங்கள் மனதைத் தொடர்ந்து கவரும் நிலையை தக்கவைத்துக்கொள்ளும் நிலையைப் பெறும்போதுதான் சினிமா ஒருவருக்கு அதீத பணத்தையும் பாப்புலாரிட்டியையும் தருகிறது.

பணவளக் கலை!

சினிமாத் துறையில் ஜெயித்தவர்களைப் பார்த்து வியக்கிறோமே தவிர, மக்கள்  கண்ணில் படும்முன்பு அவர் நடத்திய போராட்டங்கள் நமக்கு பெரியதாகத் தெரிவதில்லை. அதேபோல்தான் நம் தொழிலதிபர் உதாரணத்திலும். அவர் நம்முடைய கண்ணில்படும் நாளிலேயே அவரை நாம் மதிப்பீடு செய்து நாமும் தொழில் செய்யலாம் என்று நினைத்தோமே என்று அவருடன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். அட, சாமி! இது நமக்கு லாயக்குப்படாது என்று ஒதுங்க ஆரம்பிக்கிறோம். சினிமாவின் ஒவ்வொரு பிரிவிலும் இன்றைக்கு கோலோச்சி இருக்கும் லீடர்களைப் பார்த்து பயந்தால் புதிதாக நடிகர், நடிகை, காமெடியன், மியூசிக் டைரக்டர், பாடலாசிரியர், டைரக்டர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என புதியவர்கள் யாருமே வரமாட்டார்கள். ஒவ்வொரு நாளும் பலர் புதிதாக முயலத்தானே செய்கின்றனர். அதேபோல்தான் தொழிலும். எல்லா காலகட்டத்திலும் லீடர்கள் இருப்பார்கள். தொழில் செய்து பழகும் இளம்தொழில்முனைவோரும் இருப்பார்கள். இதை நீங்கள் கட்டாயம் புரிந்துகொண்டேயாக வேண்டும்.

அடுத்தபடியாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது, அதிக பணம் சம்பாதிப்பதற்கு வயது ஒரு தடை அல்ல என்பதை. வேலையில் நேற்று சேர்ந்தவரும், வேலையில் இருந்து நாளைக்கு ரிட்டையர் ஆகப் போகிறவரும் பணம் சம்பாதிப்பதைப் பொறுத்தவரை, ஒரே தகுதியைக் கொண்டவரேயாவார். இவர்கள் இருவருக்கும் இடையே பல நிலைகளில் (உதாரணத்துக்கு, மிட் கேரியர்) இருப்பவர்களுக்கும் இது பொருந்தவே செய்யும்.

உங்கள் வயது மற்றும் நிதி நிலைமைக்கு ஏற்றாற்போல் நீங்கள் உங்கள் பணம் சம்பாதிக்கும் திறனை அதிகப்படுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டியிருந்தால் நிச்சயமாக நீங்கள் இன்று சம்பாதிக்கும் அளவைக்காட்டிலும் அதிகமாகச் சம்பாதிக்க முடியும். இந்த முதல் முன்னேற்ற நிலையில் அடியெடுத்து வைப்பதுதான் மிகமிக முக்கியமானது என்பது என் வாதம்.

பணம் சம்பாதிப்பதற்காக நீங்கள் புதிதாகச் செய்யப்போகும் முயற்சி எந்தவிதத்தில் இருக்கவேண்டும் (எவ்வளவு முதலீடு, எவ்வளவு ரிஸ்க் போன்றவை) என்பதையே உங்கள் வயதும் உங்கள் சூழ்நிலையும் முடிவு செய்வதாக இருக்கவேண்டுமே தவிர, பணம் சம்பாதிப்பதற்கான முயற்சிகளை செய்வதா, கூடாதா? என்பதில் உங்கள் வயதும் சூழலும்  தடையாக இருக்கக் கூடாது.  

உங்கள் வயது குறையக்குறைய நீங்கள் கொஞ்சம் அதிகமான ரிஸ்க்கை எடுக்கலாம். பள்ளி செல்லும் குழந்தைகள் உங்களுக்கு இருந்தால் கொஞ்சம் நிதானமாக ரிஸ்க்கைக் குறைத்து நீங்கள் செயல்பட வேண்டியிருக்கும். உங்கள் மகள்/மகன்களுக்கான கடமைகள் முடிந்து, அவர்கள் சொந்தக்காலில் நிற்க ஆரம்பித்துவிட்டால் உங்கள் ரிஸ்க்கை அதிகரிக்கலாம்.  

அடுத்தபடியாக, நீங்கள் எந்த அளவுப் பணத்தை இழக்கத் தயாராக இருக்கிறீர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். அது என்ன, இழக்கத் தயாராக இருப்பது?

பணவளக் கலை!

தொழில் செய்வது போன்ற எந்த பணம் சம்பாதிக்கும் முயற்சியிலும் நிச்சய வெற்றி என்பதில்லை.  அதனால் தொழில் நம் கையை மீறி செல்லும்போது எவ்வளவு பணத்தை இழக்க நாம் தயாராக இருக்கிறோம், எந்த அளவுக்குப் பணத்தை இழந்தால் நம்மால் தாங்க முடியும் என்பதைத் தெரிந்தபின்னர் இறங்குவதே புத்திசாலித்தனம்.  

இது பணரீதியான தயார் நிலை எனில், மனரீதியாகவும் நீங்கள் தொழிலுக்குத் தயாராக வேண்டியிருக்கும். அதாவது, மாற்றங்கள் வரும்போது அவற்றை தாங்கிக்கொள்ள மனரீதியாகவும் பக்குவம் தேவைப்படும். மாற்றம் என்பது சிலசமயம் ஏற்றம் தருவதாகவும், சிலசமயம் ஏமாற்றம் தருவதாகவும் இருக்கும். ஏமாற்றம் வரும்போது ஏங்காமலும், ஏற்றம் வரும்போது ஏட்டிக்குப் போட்டியான செயல்களைச் செய்யாமலும் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

உதாரணத்துக்கு, நன்கு ஆராய்ந்து அறிந்து நமக்கு ஏற்றாற்போன்ற சிறிய தொழில் ஒன்றைச் செய்கிறோம். ஒரு வருடம் ஓடிவிட்டது. மாதம் சுத்தமாக 10,000 ரூபாய் லாபம் வருகிறது. 5,000 வரும் என்று எதிர்பார்த்தோம். இரட்டிப்பாக பணம் வருகிறதெனில், அந்த சந்தோஷத்தில் கையில் இருக்கும் பைக்கை விற்றுவிட்டு, 10,000 ரூபாய் இஎம்ஐ கட்டுகிற மாதிரி ஒரு கார் வாங்கக் கூடாது. இந்தப் பத்தாயிரம் தொடர்ந்து வரும் என்பதற்கு எந்த கேரன்டியும் கிடையாது. நம் தொழிலில் ஏறுமுகத்தை மட்டுமே பார்த்திருக்கிறோம். இறங்குமுகம் வந்தால் என்னவாகும் என்று பார்த்ததில்லை.

இதற்குமாறாக, மாதம் ரூபாய் 5,000 உபரி வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்து, தொழில் ஒன்றை ஆரம்பித்து ஒரு வருடம் ஆகியும் மாதம் ரூபாய் 2,000கூட சம்பாதிக்க முடியவில்லை என்பதால் கோபம்கொண்டு தொழிலில் வேலைக்கு இருப்பவரை கடிந்துகொண்டு தொழிலுக்கு நாமே குழியும் பறித்துவிடக்கூடாது.

எந்த ஒரு தொழிலுமே யூகங்கள் நிறைந்ததுதான். இந்த இடத்தில் இந்த நேரத்தில் இந்தத் தொழில் ஜெயிக்கும் என்று நினைத்து ஆரம்பிப்பது யூகம்தான். தொழில் செய்யும்போது எல்லாமே தெளிவாக இருக்காது. சில யூகங்களின் அடிப்படையில்தான் நாம் வியாபாரத்தை ஆரம்பிக்க வேண்டியிருக்கும். சாலையோரத்தில் இருக்கும் சிறியதொரு டீக்கடையிலும்கூட நிறைய யூகங்கள் இருக்கிறது. யாரும் முதல் நாளே அந்தக் கடையில் வந்து நாளைக்கு இத்தனை பேர் வந்து டீ குடிப்போம் என்று (ரயிலில் செய்வது போல்!) முன்பதிவு செய்துவிட்டு அடுத்த நாள் வந்து டீ குடித்துச் செல்வதில்லை. டீக்கடையின் அன்றாட வியாபாரமே யூகங்களின் அடிப்படையில்தான்.  பால் இல்லை என்று கடையை மதியம் மூடவும் முடியாது. பால் இருக்கிறது என்று ஆளே நடமாடாத இடத்தில் இரவு பூராவும் கடையைத் திறந்துவைத்தும் பிரயோஜனம் ஏதும் இல்லை.

ஹோட்டல் நடத்தும் நண்பர்களிடம் கொஞ்சம் பேசிப் பாருங்கள். அக்கம்பக்க நிகழ்வுகள், கோயில் கொண்டாட்டங்கள், பண்டிகைகள், ஊருக்கு வருகைதரும் சாமியார்கள், அரசியல்வாதிகள், முக்கிய கூட்டங்கள், பேரணிகள், வெயில், மழை, பள்ளிவிடுமுறை, அன்றைய தினத்தில் வரச் சாத்தியமான சுற்றுலாப் பேருந்துகள் (கோயிலுக்கு சென்று திரும்புபவர்கள் ஒருசில மாதங்களில், இன்பச் சுற்றுலாவுக்குச் செல்பவர்கள் ஒருசில மாதங்களில், பேரணிக்கு சென்று திரும்புபவர்கள் சில தினங்களில் என) பல்வேறுவிதமான செய்திகளின் அடிப்படையிலான யூகங்களிலேயே அவர்களுடைய கடையின் புரொடக்ஷனை ப்ளான் பண்ணவேண்டியிருக்கும். நாளடைவில் இந்தக் கலையை அவர்கள் அநாயசமாக கையாண்டாலும் ஆரம்பத்தில் கொஞ்சம் திணறித்தான் இருப்பார்கள்.

பணவளக் கலை!

நாமும் நாம் ஆரம்பிக்கும் தொழிலில் இந்தப் பிரச்னைகளை முதல் ரவுண்டில் சந்தித்து பின்னரே தேர்ச்சி பெறுவோம். அதனாலேதான் முதல் ரவுண்டு முடியும் வரை அதில் அதிக வருமானம் வந்தால் அதில் மயங்காமலும், குறைந்த வருமானம் வந்தால் அதைக்கண்டு வருந்தி எரிச்சலடையாமலும் இருக்க வேண்டும் என்கிறேன். ஏனென்றால், நம் நேரம், முயற்சி, பணம் என்ற மூன்றையும் இந்த யூகத்துக்காகச் செயல்படுத்துகிறோம். யூகங்கள் தவறானால் இந்த மூன்றும் விரயமாகிவிடுகிறது. தொழிலில் ஏற்றம்இறக்கம் என்ற இரண்டுமே இருக்கும்.

முதல் ரவுண்டில் ஏற்றம் வந்தால், இறக்கம் வரும் என்பதை அறிந்து அந்தத் தொழிலில் வரும் வருமானத்தைக் கட்டாயமாக்கிக்கொள்ளும் தேவைகள் எதையும் அதிகரித்துக்கொள்ளக் கூடாது. முதல் ரவுண்டிலேயே இறக்கம் வந்தால் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒருமுறை சரிபார்க்க வேண்டும். எல்லாம் சரியாகவும் இருந்து பெரிதாக லாபம் பார்க்க முடியவில்லை எனில்,  பெரிதாக கையைக் கடிக்காதபட்சத்தில் (எப்படிக் கையைக் கடிக்கும் - நாம்தான் தீர ஆராய்ந்து எவ்வளவு இழக்கத் தயாராக இருக்கிறோம் என்ற அளவையும் அறிந்தபின்னர்தானே இறங்கினோம்!) ஏற்றம் வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கவேண்டும்.

நினைவிருக்கட்டும், எல்லாத் தொழிலிலும் விற்பனையின் அளவே லாபத்தை நிர்ணயிக்கிறது. எனவே, விற்பனையின் அளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ள தொழிலை தேர்ந்தெடுப்பதில் நீங்கள் செய்யும் யூகத்தின் வெற்றிதான் உங்களுக்குப் பணத்தைக் கொண்டுவந்து சேர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கும்.

(கற்றுத் தேர்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism