Published:Updated:

எளிதாக கற்கலாம்... ஏராளமாக சம்பாதிக்கலாம்..!

இலவச பயிற்சிகள் 1,300வாருங்கள்... வழிகாட்டுகிறோம்! பிசினஸ் கேள்வி பதில்

எளிதாக கற்கலாம்... ஏராளமாக சம்பாதிக்கலாம்..!

இலவச பயிற்சிகள் 1,300வாருங்கள்... வழிகாட்டுகிறோம்! பிசினஸ் கேள்வி பதில்

Published:Updated:
##~##

 சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது. இங்கே உங்கள் கேள்விகளுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் சி.ராமசாமி தேசாய் பதில் அளிக்கிறார்.

''வீட்டிலிருந்தபடியே சிறுதொழில் செய்து சம்பாதிக்கலாம் என எண்ணுகிறேன். ஆனால், அதிக பணம் கொடுத்து எந்த தொழிலையும் கற்றுக்கொள்ளும் அளவுக்கு எனக்கு வசதியில்லை. எங்கள் பகுதியில் இலவச தொழிற்பயிற்சி மையம் ஏதாவது இருந்தால் தெரியப்படுத்துங்கள். தையல், அழகுக்கலை, ஃபேஷன் ஜுவல்லரி மற்றும் வீட்டிலேயே செய்து சம்பாதிக்கக் கூடிய தொழில்களாக வழிகாட்டுங்கள்..''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- பி.சுதா, மூலக்கடை, சென்னை

''உங்களின் ஆர்வத்துக்குப் பாராட்டுக்கள். நீங்கள் மட்டுமல்ல... 'அவள் விகடன்' இதழ் மூலமாக நிறைய சகோதரிகள் வீட்டில் இருந்தபடி சம்பாதிக்கக்கூடிய சிறுதொழில்களைப் பற்றி கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இத்தகையோரின் முன்னேற்றத்துக்காகவும், சுயமாக சம்பாதிப்பதற்காகவும் பலதரப்பட்ட பயிற்சிகள் இலவசமாகவே கொட்டிக் கிடக்கின்றன. அதைப் பற்றியெல்லாம் இங்கே கோடிட்டு காட்டுகிறேன். நீங்களே உங்களுக்கு ஏற்ற தொழிலை முடிவு செய்து கொள்ளுங்கள்.

20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், அதிக மக்கள்தொகை ஒரு நாட்டின் பாரமாக கருதப்பட்டது. இன்று இதுவே நாட்டின் வளமாக மாறி, மனிதனை வளமிக்க ஒரு சொத்தாக (Human Resource) மாற்றிவிட்டது. இந்த மனித வளத்தை மேலும் வளமாக்க, நமது அரசுகள் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளன. இளைஞர்களின் திறன் வளர்ச்சிக்காகவே, தேசிய திறன் மேம்பாட்டு கழகம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக... திறன் பயிற்சி (Skill development), தொழில்முனைவு பயிற்சி (Entrepreneurship Development Programme), திறன் மற்றும் தொழில்முனைவு பயிற்சி (Entrepreneurship and Skill Development Programme), மேலாண்மை பயிற்சி (Management Development Programme) என பல பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

எளிதாக கற்கலாம்... ஏராளமாக சம்பாதிக்கலாம்..!

மத்திய அரசின் வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், மனிதவளம், குறு - சிறு மற்றும் மத்திய தொழில்துறை, ரயில்வே, சாலைப் போக்குவரத்து, ஜவுளி, சுற்றுலா, தொழில், கிராம வளர்ச்சி, உணவு, சீர்மரபினர், மலைவாழ் மக்கள் முன்னேற்றம், இளைஞர் நலம், பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாடு, மரபுசார்ந்த எரிபொருள் துறை, தொழிலாளர் மற்றும் பயிற்சி, சமூகநீதி, விஞ்ஞான தொழில்நுட்பம் என  பல துறைகளும் மற்றும் அவை சார்ந்த பல்வேறு துறைகளும் நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் பல்வேறு திறன் பயிற்சிகளை இலவசமாக அளிக்கின்றன. இவை தவிர, முக்கியமான நிறுவனங்களும் பயிற்சி மையங்களின் மூலமாக பயிற்சிகளை அளிக்கின்றன.

தமிழக அரசு, திறன் பயிற்சிக்கு உள்ள முக்கியத்துவத்தைக் கருதி, 'தமிழ்நாடு திறன் மேம்பாடு செயலாக்கம்' (Tamil Nadu Skill Development Mission) என்ற திட்டத்தின் கீழ் இளைஞர்கள், பெண்கள் என பலதரப்பட்டவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறது. படித்தவர்கள், பாதியில் படிப்பை நிறுத்தியவர்கள் என அனைத்து இளைஞர்களும் இந்த திட்டத்தில் இணையலாம். இரண்டு வாரங்கள் முதல் இரண்டு மாதங்கள் வரையிலான திறன் பயிற்சிகளும் இதில் உண்டு.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஐந்து மண்டலங்களில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மண்டல இணை இயக்குநர் (JRD - Joint Regional Director) அலுவலகங்கள் மூலம், பல்வேறு பயிற்சி நிறுவனங்களை இணைத்து, தொண்டு நிறுவனங்கள் வாயிலாக அழகுக்கலை, ஃபேஷன் ஜுவல்லரி, உணவு பதப்படுத்தல், கணினி பயிற்சி உள்ளிட்ட 1,300 வகையான தொழில்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அனைத்தும் இலவச பயிற்சி என்பதோடு, மத்திய அரசின் என்.சி.வி.டி. (NCVT) சான்றிதழும் வழங்கப்படும். இதற்கான தேர்வுக் கட்டணத்தை தமிழக அரசே செலுத்துகிறது. கூடவே ஆங்கிலப் பேச்சு திறன் வளர்ச்சி பயிற்சியையும் பெற்று, உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.

சென்னையில், எந்த நிறுவனம் என்னென்ன பயிற்சிகளை அளிக்கிறது என்று அறிந்து கொள்ள... தமிழக அரசின், 'வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032’ என்ற முகவரியை அணுகவும்.

பயிற்சிக்குப் பிறகு தொழில் தொடங்க ஆசைப்படுபவர்கள் மற்றும் ஏற்கெனவே பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு மத்திய - மாநில அரசுகளின் கடன் கிடைக்கும். இதற்கு, யு.ஒய்.இ.ஜி.பி. (UYEGP), பி.எம்இ.ஜி.பி. (PMEGP), மற்றும் நீட்ஸ் (NEEDS) போன்ற திட்டங்களில் கடன்பெற முடியும்.

மகளிர் தொழில்முனைவு பயிற்சி 'டபுள்யு.இ.டி.பி.' (WEDP), மகளிர் தொழில்முனைவு மற்றும் திறன் பயிற்சி மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்பயிற்சி 'டபுள்யு.இ.எஸ்.டி.பி.' (WESDP) போன்ற நான்கு வார, ஆறு வார மற்றும் 25 நாட்கள் பயிற்சிகளும் உண்டு. இந்த பயிற்சிகளின் முடிவில் சான்றிதழ் தரப்படுவதுடன், தொழில் துவங்க வங்கிக் கடன் பெறுவதற்கான உதவியும் செய்யப்படும். இதற்கான விவரங்களையும் இடம் நேரம் அனைத்தையும் அறிய... 'தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’ (EDI), திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரியை அணுகவும்.''

வெற்றிக் கோட்டை தொடுவதற்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி...
'வாருங்கள்... வழிகாட்டுகிறோம்’, கேள்வி - பதில் பகுதி, அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism