Published:Updated:

பணம் கொட்டும் தொழில்கள் !

##~##

மணிக்கணக்கில் வேலை பார்த்து, சில ஆயிரங்களை சம்பாதிப்பதைவிட,  சொந்தமாகத் தொழில் தொடங்கினால்தான் நிறைய சம்பாதிக்க முடியும். ஆனால், என்ன தொழிலை செய்வது என்று சொல்லுங்களேன்!

இப்படி பல ஆயிரம் வாசகர்கள் போனிலும், இ-மெயில் மூலமும் வேண்டுகோள்விடுக்க... 9-ம் ஆண்டு சிறப்பிதழிலிருந்தே அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடிவு செய்துவிட்டோம். இனி வாரத்துக்கு ஒரு தொழில் என ஒவ்வொரு வாரமும் ஒரு தொழிலை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.    

இந்த வாரம் இடம்பெறும் தொழில், டிஜிட்டல் ஃப்ளெக்ஸ் பிரிண்டிங்!

டிஜிட்டல் ஃப்ளெக்ஸ் ப்ரின்டிங்!

கல்யாணமா, காதுகுத்தா, குழந்தையின் பிறந்தநாள் விழாவா, அரசியல்கட்சி நிகழ்ச்சியா, கோயில் விசேஷமா... எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, முதலில் ஃப்ளெக்ஸ் ப்ரின்டிங் பேனரை தயார் பண்ணதான் பலரும் துடிக்கிறார்கள். எனவேதான், விளம்பரத்துறையில் இன்றைக்கு தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறது இந்தத் தொழில்நுட்பம்.

இரண்டு அடி முதல் பிரமிக்கவைக்கும் அளவு பேனர்கள் நினைத்த நேரத்தில் நினைத்தவுடன் பிரமிக்கவைக்கும் டிஜிட்டல் ஃப்ளெக்ஸ் ப்ரின்டிங், புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பு.

இதில் முன்பக்க ப்ரின்டிங் (Frontlit), பேக் சைடு ப்ரின்டிங் (Backlit) என இருவகை உள்ளன.   முன்பக்கமாக விளக்குகள் பொருத்தும் வகையும், பின்பக்கம் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு ஒளிரூட்டும் விளம்பரமாகவும் பார்ப்பதுதான் இந்த இருவகை ஃப்ளெக்ஸ்கள்.  

பணம் கொட்டும் தொழில்கள் !

டிஜிட்டல் ப்ரின்டிங் இயந்திரம், கணினி, ப்ரின்டர் மற்றும் சில அடிப்படை உபகரணங்கள் போதுமானது. நன்கு திறமையான வடிவமைப்பு ஆட்கள், ப்ரின்டிங் தொழில் தெரிந்தவர்கள், உதவியாளர்கள் தேவைப்படும். கணினி மூலம் உருவாக்கப்படும் வடிவமைப்பை அப்படியே டிஜிட்டல் இயந்திரத்தில் ப்ரின்டிங் செய்யவேண்டியதுதான். இனி, திட்ட அறிக்கையைப் பார்ப்போம்.  

புராஜக்ட் ரிப்போர்ட்!

தேவையான இடம்: 15X20 மற்றும் 10X10 (அடிக் கணக்கில்).

ப்ரின்டிங் இயந்திரம் : ரூ.10 லட்சம் வரை.

3 கே.வி.ஏ யூ.பி.எஸ்: ரூ.2.10 லட்சம்

கணினி: ரூ.1 லட்சம்

செயல்பாட்டு மூலதனம்: ரூ.4 லட்சம்

இதர செலவுகள்: ரூ.1 லட்சம்

மொத்தம்: ரூ.18.10 லட்சம்

மூலப்பொருட்கள்!

அச்சு மை - ஒரு லிட்டர் மை ரூ.600   அச்சுக்கு ஆகும் செலவு: இரண்டு முறைக்கு-ரூ.0.60, மூன்று முறைக்கு ரூ.0.90, நான்கு முறைக்கு ரூ.1.20, ஐந்து முறைக்கு ரூ.1.50.

இவை அனைத்தும் ஒரு சதுர அடி ப்ரின்டிங்குக்கு ஆகும் செலவு. இதற்கு தேவையான அடிதள விலையும் அதன் தடிமனைப் பொருத்து வேறுபடும்.

இதில் இரண்டுமுறை, மூன்றுமுறை, நான்குமுறை, ஐந்துமுறை என அச்சு ஏற்றுவதில் பலவகை உள்ளன. அச்சு அதிகரிக்கஅதிகரிக்க ப்ரின்டிங் தரமாக இருக்கும். அதன் விலை 7-8 ஷீக்ஷ்  1 சதுர அடி - ரூ.2.75, 10 ஷீக்ஷ் 1  வசதுர அடி - ரூ.3.20, 13 ஷீக்ஷ் 1 சதுர அடி - ரூ.7.00.

பணம் கொட்டும் தொழில்கள் !

இரண்டுவகை ஃப்ளெக்ஸ் ப்ரின்டிங்கில் ஃப்ரன்ட் சைடு ப்ரின்டிங் 80% வேலைகளும், பேக் சைடு ப்ரிண்டிங் 20%  வேலைகளும் சராசரியாக நடக்கும். இதன்படி, கணக்கு வைத்துக்கொண்டு உற்பத்தி மற்றும் விற்பனை செலவுகளைப் பார்ப்போம்.

ஒருநாள் முழுக்கத் தொடர்ந்து ப்ரின்டிங் செய்கிறோம் எனில் அதாவது, முழுஉற்பத்தியில் ஈடுபடுகிறோம் 4,800 சதுர அடி இரண்டு அச்சு (பாஸ்) முறையில் ப்ரின்டிங் செய்ய முடியும். நாம் 50% மட்டும் உற்பத்தித்திறனுடன் (2,400 சதுர அடி) ஒரு மாதத்துக்கு 25 வேலைநாட்கள் என கணக்கிட்டால் மொத்தமாக ஆகும் உற்பத்திச் செலவு ரூ.2,26,400.

பணம் கொட்டும் தொழில்கள் !

விற்பனை!

முன்பக்கம் ப்ரின்டிங் ரூபாய் (சதுர அடிக்கு) ரூ.8.00, பின்பக்கம் ப்ரின்டிங் ரூ.20-க்கு என விற்பனை செய்யலாம். இதன்மூலம் நாளன்றுக்கு ரூ.21,760  கிடைக்கும். ஒரு மாதம் 25 நாள் வேலை பார்த்து விற்பனை செய்கிறோமெனில் மொத்தம் ரூ.5,44,000 கிடைக்கும்.

ஆட்களும் சம்பளக் கணக்கும்!

மேலாளர் 1X10,000 = ரூ.10,000

கணினி வடிவமைப்பாளர் 2X8000 =ரூ. 16,000

இயந்திரம் ஆபரேட்டர் 2X8000 = ரூ.16,000

மார்க்கெட்டிங் பணியாளர்கள் 2X7000 = ரூ.14,000

உதவியாளர் 2X6000 = ரூ.12,000

இதர செலவுகள் = ரூ.7,000

மொத்தம் -       ரூ.75,000

நடைமுறை செலவுகள்!

மின்தேவை 8 ஹெச்.பி.க்கு ரூ.6,000, வாடகை ரூ.12,000 (இடத்தைப் பொறுத்து மாறும்) ஆகும்.

மொத்த செலவு (மாதம்)

பணம் கொட்டும் தொழில்கள் !

மூலப்பொருட்கள் - ரூ.2,26,400
வாடகை, மின்சாரம் - ரூ.18,000
தொழிலாளர் சம்பளம் - ரூ.75,000
கடன் வட்டி (12.5%) - ரூ.13,200
கடன் தவணை - ரூ.21,000
இயந்திர பராமரிப்பு - ரூ.10,000
விற்பனை செலவு - ரூ.10,000
மேலாண்மை செலவு - ரூ.5,000
தேய்மானம் செலவு - ரூ.17,500
மற்றவை -           ரூ.10,000
...........................................................
மொத்தம்  -         ரூ.4,06,100
...........................................................

மொத்த மாத வருவாய்: ரூ. 5,44,000

மொத்த மாத செலவு: ரூ.4,10,000

மாத லாபம்: ரூ.1,34,000

தெளிவான திட்டமிடல், நடைமுறையில் சிறந்த நிர்வாகம் மற்றும் தொய்வில்லாத வேலைகள் இருந்தால் ஃப்ளெக்ஸ் ப்ரின்டிங் தொழில் எப்போதுமே பணம் கொட்டும் சக்ஸஸ் பிசினஸ்தான்.

தொகுப்பு: நீரை.மகேந்திரன்,
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், பா.கார்த்திக்.

 வங்கிக் கடன் எவ்வளவு?

இந்தத் தொழிலை ஆரம்பித்து நடத்த வங்கிக் கடன் கிடைக்கும் என்பது சிறப்பான விஷயம்!

இந்தத் தொழிலுக்கு நம் பங்காக 5% முதலீடு போக, வங்கிக் கடன் மற்றும் பாரத பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் மானியம் கிடைக்கும்.

நமது பங்கு 5% - ரூ.0.90 லட்சம்
மானியம் 25% - ரூ. 4.50 லட்சம்
வங்கிக் கடன் - ரூ. 12.60 லட்சம்