Published:Updated:

பணம் கொட்டும் தொழில்கள்!

பணம் கொட்டும் தொழில்கள்!

##~##

உணவுப் பொருள் தயாரிப்புகளில் எப்போதுமே பேக்கரி தொழிலுக்கும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டே இருக்கிறது.

 உணவுப் பொருட்கள் தயாரிப்புத் துறையில் எத்தனை போட்டிகள் வந்தாலும் பேக்கரியின் இடத்தை அசைக்க முடியாது. ஒரு லட்சம் முதல் ஒரு கோடி வரை முதலீட்டிலும் ஆரம்பிக்கலாம் என்பது இந்தத் தொழிலின் தனிச் சிறப்பு. சந்தையின் தேவையைப் பொறுத்து அல்லது மக்களின் கவனத்தை ஈர்க்க பெரிய முதலீட்டில் ஆரம்பிக்கலாம். இன்று நவீன இயந்திரங்கள் மூலம் சுத்தமாக தயாரிக்கும்முறைகள் வந்துவிட்டன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பேக்கரி தொழிலை தொழில்முனைவு அடிப்படையில் பெரிய அளவில் செய்வதுகுறித்து பார்ப்போம்.

என்னென்ன தயாரிக்கலாம்?

மைதா, கோதுமையில்  ரொட்டிகள், பன், பப்ஸ், ரஸ்க், வர்க்கி, விதவிதமான சுவைகளில் கேக். இவைதவிர, பர்கர், பீட்சா, சாண்ட்விச் போன்ற உணவு வகைகளையும் தயார் செய்யலாம்.  

தேவையான இயந்திரங்கள்!

ஓவன்
மாவு பிசையும் இயந்திரம்
சர்க்கரை தூள் செய்யும் இயந்திரம்
கேக் மிக்ஸர்
மாவு கலக்கும் இயந்திரம்
ரொட்டி ஸ்லைஸ் செய்யும் இயந்திரம்
தராசு

பணம் கொட்டும் தொழில்கள்!

இடவசதி!

500 - 1,000 சதுர அடி வரை தேவைப்படும்

மூலப்பொருட்கள்:

மைதா மாவு, சர்க்கரை, டால்டா, முட்டை, ஐஸிங் சுகர், வெண்ணெய், தேவைக்கேற்ப உலர் பழவகைகள், எஸென்ஸ் மற்றும் ஜிஎம்எஸ் என பலவகை உற்பத்தி செய்யும் பொருளுக்கேற்ப மாறுபடும். இந்தப் பொருட்கள் எல்லா ஊர்களிலும் சுலபமாகக் கிடைக்கும்.

இந்தத் தொழிலுக்கு மிக முக்கிய நபர், பேக்கரி மாஸ்டர் மற்றும் திறமையான தொழிலாளர்கள். சிறிது கவனம் சிதறினாலும் தரம் போய்விடும் என்பதால் இந்த விஷயத்தில் சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.  

நாள் ஒன்றுக்கு 150 கிலோ மைதாவில் ரொட்டி முதல் வர்க்கி வரை பலதரப்பட்ட பேக்கரி பொருட்களை விற்பனைக்கு ஏற்ப தயார் செய்யலாம். தொடக்கத்தில் தினமும் 10 கிலோ மைதா மாவில் கேக் தயாரிக்கத் திட்டமிடலாம்.

திட்ட அறிக்கை:

இடம்    :      வாடகைத் தொகை

இயந்திரம் வகை :

பணம் கொட்டும் தொழில்கள்!

10 லட்சம்

ஜெனரேட்டர் :  

பணம் கொட்டும் தொழில்கள்!

2 லட்சம்

மின்சார உபகரணம் :

பணம் கொட்டும் தொழில்கள்!

1.50 லட்சம்

மற்றவை     :  

பணம் கொட்டும் தொழில்கள்!

1 லட்சம்

நடைமுறை மூலதனம் : 

பணம் கொட்டும் தொழில்கள்!

2 லட்சம் 
                                                 ________________
மொத்தம்:                             

பணம் கொட்டும் தொழில்கள்!

16.50 லட்சம்
                                                  _______________

பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் அல்லது உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் மானிய திட்டம், மாநில அரசின் 'நீட்ஸ்’ திட்டம் ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ்

நமது பங்கு 5% :

பணம் கொட்டும் தொழில்கள்!

82,500

பணம் கொட்டும் தொழில்கள்!

மானியம்

(இயந்திரம்) 25% :

பணம் கொட்டும் தொழில்கள்!

3,37,500
வங்கிக் கடன் :

பணம் கொட்டும் தொழில்கள்!

12,30,000

 ஒருநாள் உற்பத்தி!

ஒருநாளைக்கு 150 - 200 கிலோ மைதாவில் ரொட்டி, பிஸ்கட், ரஸ்க் என தயாரிக்கலாம். மேலும், 10 கிலோ கேக் தயாரிக்கலாம். 350 கிராம் ரொட்டி தயார் செய்தால் அதை

பணம் கொட்டும் தொழில்கள்!

20-க்கு விற்பனை செய்ய முடியும். மற்ற பொருட்களும் இதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 350 கிராம் - மூலப்பொருள் - 12 முதல் 13 ரூபாய்க்குள் அடங்கும். நாம் 13 ரூபாய் என்று கணக்கு வைத்துக்கொள்வோம்.

150 கிலோ மைதாவில் - 428 ரொட்டி தயார் செய்யலாம்.

இதன் மூலப்பொருள் 428 ஜ் 13 = 5,564

கேக் தயார் செய்ய ஒரு கிலோ மைதா, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் இதரப் பொருட்கள் தேவை. இதற்கு ஆகும் செலவு

பணம் கொட்டும் தொழில்கள்!

300.

10 கிலோ கேக் தயாரிக்க - 3,000 ரூபாய் தேவை.

அனைத்து மூலப்பொருட்களுக்கும் செலவு ஒரு நாளைக்கு 5,564 + 3,000 = 8,564 ரூபாய். ஆக, 25 நாளைக்கு 2,14,100 ரூபாய் தேவை.

 பேக்கரி பொருட்களின் விற்பனை வரவு

கேக் - 600 ஜ்

பணம் கொட்டும் தொழில்கள்!

10 =  

பணம் கொட்டும் தொழில்கள்!

6,000

ரொட்டி - 428 ஜ்

பணம் கொட்டும் தொழில்கள்!

20 =

பணம் கொட்டும் தொழில்கள்!

8,560
                                        _________
ஒருநாள் வரவு         

பணம் கொட்டும் தொழில்கள்!

14,560
                                        _________

மாதம் 25 வேலை நாட்கள் என்று கணக்கிட்டால் மாத வரவு :  

பணம் கொட்டும் தொழில்கள்!

3,64,000

பணம் கொட்டும் தொழில்கள்!

பணியாளர்கள் தேவை மற்றும் சம்பளம்!

மேற்பார்வையாளர் - 1 ஜ்

பணம் கொட்டும் தொழில்கள்!

8,000 =

பணம் கொட்டும் தொழில்கள்!

8,000

பேக்கரி மாஸ்டர் - 1 ஜ்

பணம் கொட்டும் தொழில்கள்!

8,000 =  

பணம் கொட்டும் தொழில்கள்!

8,000

4 வேலையாட்கள் - 4 ஜ்

பணம் கொட்டும் தொழில்கள்!

4,000 =

பணம் கொட்டும் தொழில்கள்!

16,000

விற்பனையாளர் - 1 ஜ்

பணம் கொட்டும் தொழில்கள்!

7,000 =  

பணம் கொட்டும் தொழில்கள்!

7,000
                                                                     _________
பணியாளர்கள் மாதச் சம்பளம்     

பணம் கொட்டும் தொழில்கள்!

39,000
                                                                     _________

 மொத்த செலவு!

மூலப்பொருள் :

பணம் கொட்டும் தொழில்கள்!

2,14,100
வாடகை :

பணம் கொட்டும் தொழில்கள்!

8,000
மின்சாரம் :

பணம் கொட்டும் தொழில்கள்!

10,000
சம்பளம் :

பணம் கொட்டும் தொழில்கள்!

39,000
கடன் வட்டி :

பணம் கொட்டும் தொழில்கள்!

12,000
கடன் தவணை (72 பாகம்) :

பணம் கொட்டும் தொழில்கள்!

17,100
இயந்திர பராமரிப்பு :

பணம் கொட்டும் தொழில்கள்!

3,000
விற்பனை செலவு :

பணம் கொட்டும் தொழில்கள்!

3,000
மேலாண்மை செலவு :

பணம் கொட்டும் தொழில்கள்!

3,000
தேய்மானம் - 15% :

பணம் கொட்டும் தொழில்கள்!

15,000
                                                   ___________
மொத்தம்                                

பணம் கொட்டும் தொழில்கள்!

3,24,200
                                                   ___________

மொத்த வரவு

பணம் கொட்டும் தொழில்கள்!

3,64,000

மொத்த செலவு

பணம் கொட்டும் தொழில்கள்!

3,24,200
                    ___________
லாபம்        

பணம் கொட்டும் தொழில்கள்!

39,800
                    ___________

மூலப்பொருட்கள் மொத்த விலையில் வாங்கவேண்டும். உணவு வகையில் புதுப்புது வெரைட்டிகளைப் புகுத்தினால்தான் போட்டிகளைச் சமாளித்து தாக்குப்பிடிக்க முடியும்.

தொகுப்பு : நீரை.மகேந்திரன்,

(திட்ட விவரங்கள் உதவி: ராமசாமி தேசாய், திட்ட மேலாளர், தொழில்முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்.)

 தேடிவரும் வாடிக்கையாளர்கள்!

ஜூலியட் வளர்மதி, மிக்கேலஸ் கேக்ஸ் அண்டு பேக்ஸ், திருச்சி.

பணம் கொட்டும் தொழில்கள்!

''ஏதாவது தொழில் தொடங்கலாம் என்கிற எண்ணம்தான் முதலில் இருந்தது. பின்பு கணவர் மற்றும் தொழிற்துறையினர் ஆலோசனைப்படி, இந்தத் தொழிலில் இறங்கினேன். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால், போகப்போகச் சரியாகிவிட்டது. பேக்கரி வேலைகளில் பெரும்பாலும் பெண்கள் ஈடுபடு வதில்லை. ஆனால், எனது ஆர்வத்தை மதித்து வங்கிக் கடன் மற்றும் இதர வழிகாட்டுதல்கள் கிடைத்தது.

ஒரு கட்டத்தில் இதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை நம்பி எனது கணவர் தனது வேலையை உதறிவிட்டு, இப்போது என்னோடு பேக்கரி தொழிலிலேயே ஈடுபடுகிறார். இருபது லட்சம் ரூபாய் முதலீட்டுக்குத் திட்டமிட்டேன். 15 லட்சம் வங்கிக் கடன், ஐந்து லட்சம் மானியத்தைப் பயன்படுத்திக் கொண்டேன். தற்போது செலவுகள் போக மாதம் 30 ஆயிரம் வரை வருமானம் வருகிறது. சுவையாகவும், வித்தியாசமாகவும் கொடுத்தால் வாடிக்கையாளர்கள் நம்மை தேடி வருவார்கள்.''

   படங்கள்: என்.ஜி. மணிகண்டன், கே.குணசீலன்,
வீ.சிவக்குமார், பா.காளிமுத்து.