Published:Updated:

லிக்விட் பீஸ் Vs லிக்விட் ஃபண்டு

எவ்வளவு வருமானம்?

பிரீமியம் ஸ்டோரி
##~##

எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும் என்கிற பணத்தை லிக்விட் பீஸில் போட்டுவைப்பதன் மூலம் ஓரளவு நல்ல வருமானம் கிடைக்கும்!

ங்கிச் சேமிப்பு கணக்கில் பணத்தை வைத்திருந்தால் வெறும் 4 சதவிகித வட்டி மட்டுமே கிடைக்கும். ஆனால், லிக்விட் பீஸில் வைத்திருந்தால் தேவைப்படும்போது எடுக்க முடிவதுடன்,  ஓரளவுக்கு நல்ல வருமானமும் கிடைக்கும். லிக்விட் பீஸ் என்றால் என்ன? இதில் யார் வேண்டுமானாலும் பணத்தைப் போட்டுவைக்கலாமா என பங்குச் சந்தை நிபுணர் வி. நாகப்பனிடம் கேட்டோம்.

''கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுதான் லிக்விட் பீஸ் (GS Liquid bees). இது என்.எஸ்.இ-ல் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகி வருகிறது. டீமேட் கணக்கு இருக்கும்பட்சத்தில் ஒரு யூனிட்கூட லிக்விட் பீஸ் வாங்க முடியும். ஒரு யூனிட் மதிப்பு சுமார் 1,000 ரூபாய்.

லிக்விட் பீஸ் Vs லிக்விட் ஃபண்டு
லிக்விட் பீஸ் Vs லிக்விட் ஃபண்டு

இந்த லிக்விட் பீஸ் மூலம் திரட்டப்படும் தொகை அரசு பாண்டுகளில் முதலீடு செய்யப்படுவதால் அதிக அளவு ஏற்ற இறக்கம் இருக்காது. பங்குச் சந்தையைப் போல ரிஸ்க் இல்லை. தினசரி டிவிடெண்ட் உண்டு. இந்த டிவிடெண்ட், கட்டாய மறுமுதலீடு மூலம் மீண்டும் ஃபண்டில் சேர்க்கப்படுகிறது. எஸ்.டி.டி கட்டணம் கிடையாது. ஆண்டுக்கு 7 - 8% வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு'' என்றார் அவர்.  

''பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய சரியான வாய்ப்பு கிடைக்காததால், சில லட்சம் ரூபாயை லிக்விட் பீஸ்-ல் போட்டேன். இதன்மூலம் எனக்கு ஆண்டுக்கு சுமார் 7% வருமானம் கிடைத்தது'' என்றார் புதுச்சேரியைச் சேர்ந்த வி.வேல்முருகன்.  

லிக்விட் பீஸ் Vs லிக்விட் ஃபண்டு
லிக்விட் பீஸ் Vs லிக்விட் ஃபண்டு

எது பெஸ்ட்?

''லிக்விட் ஃபண்டுகளில், மியூச்சுவல் ஃபண்டு  நிறுவனம் அல்லது ஏஜென்ட்கள் மூலமாக முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்ய, யூனிட்களை விற்க கட்டணங்கள் இல்லை. ஆனால், லிக்விட் பீஸ்களை பங்குச் சந்தை அல்லது புரோக்கர் மூலம்தான் வாங்க முடியும். வாங்கி விற்பதற்கு புரோக்கரேஜ் கட்டணம் உண்டு.

வருமானத்தைப் பொறுத்தவரையில், லிக்விட் ஃபண்டு லாபகரமாக இருக்கிறது. அதேநேரத்தில், அலைச்சல் இல்லாமல் பணத்தைப் போட்டுவைக்க லிக்விட் பீஸ் பயனுள்ளதாக இருக்கும்'' என்றார் ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் இயக்குநர் சொக்கலிங்கம் பழனியப்பன்.

உங்களின் தேவை மற்றும் வசதியைப் பொறுத்து, லிக்விட் ஃபண்டா அல்லது லிக்விட் பீஸா என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்.

- சே.புகழரசி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு