''நோயாளிகளை செக்-அப் செய்யும் ஒரு டாக்டரே ஃபைனான்ஷியல் செக்-அப்-க்காக நாணயம் விகடனைத் தேடிவந்தது பாராட்டுதலுக்குரியது!''

டாக்டர் இளஞ்செழியன், அவர் மனைவி ப்ரியா என இருவருமே டாக்டர்தான். இவர்களுக்கு ஒரே மகள் நிவாஷினிக்கு 13 வயது; ஒரே மகன் சர்வேஷ§க்கு 10 வயது. டாக்டர் இளஞ்செழியனின் தேவைகள் என்னென்ன என்று முதலில் பார்த்து விடுவோம்.

தேவைகள்:

1. மகளின் கல்விக்கு 4 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் தேவை.

2. மகளின் திருமணத்துக்கு

9 ஆண்டுகளில் ரூ.25 லட்சம் தேவை.

3. மகனின் கல்விக்கு 7 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் தேவை.

4. மகனின் திருமணத்துக்கு 17 ஆண்டுகளில் ரூ.20 லட்சம் தேவை.

5. ஓய்வூதியத் தேவைக்கு 15 ஆண்டு களுக்குப் பிறகு மாதம் ரூ.25 ஆயிரம் தேவை.

சொத்துகள்!

சொந்த ஊரில் 2,000 சதுர அடியில் மாடி வீடு, 3 காலி மனைகள், 50 பவுன் தங்கம்.

கடன்கள்!

வீட்டுக் கடன் மாதம் 40 ஆயிரம் ரூபாய்; இன்ஷூரன்ஸ் பாலிசி மீதான கடன் ரூ.2 லட்சம்; தங்கத்தின் மீதான கடன் ரூ.3 லட்சம்.

டேர்ம் இன்ஷூரன்ஸ்!

நோய் வந்தபிறகு அதற்கு வைத்தியம் செய்வதைவிட, அது வராமல் தடுப்பது நல்லது. டாக்டர் இளஞ்செழியன் மருத்துவர் என்பதால் போதுமான அளவு இன்ஷூரன்ஸ் காப்பீடு செய்திருப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவரோ தன் பெயரில் வெறும் ரூ.4.25 லட்சத்துக்கும், அவரது மனைவியின் பெயரில் ரூ.11.70 லட்சத்துக்கும் கவரேஜ் கிடைக்கிற மாதிரி இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துவைத்திருந்தார். செழியன் ரூ.75 லட்சத்துக்கும், ப்ரியா ரூ.60 லட்சத்துக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கவேண்டும்.

அதை எடுத்தபின், இவர்களுக்கு பயன்படாத வகையில் நடைமுறையில் இருக்கும் சில பாலிசிகளை சரண்டர் செய்வது நல்லது. தற்போது இவர்களிடம் இருக்கும் தேவையில்லாத பாலிசிகளுக்கு பிரீமியம் கட்ட ஓராண்டுக்கு

1 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. செழியனுக்கு ரூ.75 லட்சம் கவரேஜுக்கு 15 ஆண்டுகளுக்கு ரூ.24 ஆயிரமும், ப்ரியாவுக்கு ரூ.60 லட்சம் கவரேஜுக்கு 25 ஆண்டுகளுக்கு ரூ.12 ஆயிரமும் பிரீமியம் கட்டவேண்டி இருக்கும். இதனால் இவர்களுக்கு நிறைய கவரேஜ் கிடைப்பதோடு, கொஞ்சம் பணமும் மிச்சமாகும். இதைத் தவிர, மெடிக்கல் கவுன்சிலில் அவருக்கு ரூ.15 லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் உள்ளது.

மெடிக்ளைம்

அதேபோல, தன் குடும்பத்தினர் நான்கு பேருக்கும் சேர்த்து மொத்தம் ரூ.5 லட்சத்துக்கு மெடிக்ளைம் பாலிசி எடுத்திருக்கிறார். இது மிகக் குறைவு. குறைந்தது, ரூ.10 லட்சத்துக்கு மெடிக்ளைம் பாலிசி எடுப்பது நல்லது. முதலீடு!

தற்போது தங்கச் சீட்டு முடிந்துள்ளது. அதைத் தொடராமல் அந்த ரூ.5,000-த்துடன் ரூ.1,000 சேர்த்து, ரூ.6,000-மாக மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் நான்கு திட்டத்தில் பிரித்து முதலீடு செய்யலாம். ஏற்கெனவே செய்துவரும் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அந்த ஃபண்டுகள் சரியான வருமானம் தரவில்லை. அந்த ஃபண்டுகளில் முதலீடு செய்துவந்த தொகையுடன் சேர்த்து மொத்தம் ரூ10,000-மாக மேலே சொன்னதுபோல் வருமானம் தரும் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

நகைக் கடனுக்கான வட்டி எவ்வளவு சதவிகிதம் என்று தெரியவில்லை. அது 10 சதவிகிதத்துக்கு கீழிருந்தால் கொஞ்சம்

கொஞ்சமாக அடைத்துக்கொள்ளலாம். அவசரப்பட வேண்டாம். ஏனெனில், வீட்டுக் கடன் முடிய இன்னும் பத்து வருடம் பாக்கி இருக்கிறது. அதனால் அப்படியே செல்லட்டும். கைக்கு மொத்தமாகப் பணம் கிடைக்கும் போது நகைக் கடனை முதலில் அடைத்துவிட்டு, பிறகு வீட்டுக் கடனை அடைக்கலாம்.

கல்வியும் திருமணமும்..!

குழந்தைகளின் கல்வி, திருமணம் பொதுவாக 15 - 20 வருட காலத்துக்கு பின்பே நடக்க இருப்பதால், அதற்காக இப்போது சிறிது சிறிதாக சேமிக்கத் தொடங்கலாம். இதற்கு எஸ்.ஐ.பி மியூச்சுவல் ஃபண்டு சேமிப்புத் திட்டங்களைத் தேர்வு செய்வது நல்லது.

பென்ஷன்!

பென்ஷன் என்பது எல்லோருக்கும் முக்கியம். அதிலும், டாக்டர் போன்ற சுயதொழிலை செய்கிறவர்களுக்கு அது மிக அவசியம். எனவே, டாக்டர்

இளஞ்செழியன் இப்போதிருந்தே அதற்காக சேமிக்கத் தொடங்கினால் தான் ஓய்வுக்காலத்தில் தேவையான அளவு பணம் கிடைக்கும்.

அவசரகால நிதி!

நம்முடைய அன்றாட செலவு களுக்கு, அவசரகால நிதியாக வங்கியில் மூன்று மாத வைப்பு திட்டம் மற்றும் ஆர்.டியில் வருட செலவுக்காகவும் சேர்க்கலாம். இந்த விஷயத்திலும் இவர் பலவீனமாகவே இருக்கிறார். ஜலதோஷம், காய்ச்சலாக மாறுவதற்குள் இந்தச் சேமிப்பை இன்றே ஆரம்பிப்பது உத்தமம்.

ஃபைனான்ஷியல் ஹெல்த் ரிப்போர்ட்!

1. இரண்டு மருத்துவர்களும் சேர்ந்து சம்பாதிக்கும் பணம் மிகவும் குறைவு. தனியாக க்ளினிக் வைத்தால் இன்னும் கொஞ்சம் சம்பாதிக்கலாம்.

2. டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொண்டு, உபயோகமில்லாத பாலிசியை சரண்டர் செய்வதன் மூலம் மாதம் ரூ.4 ஆயிரம் வரை சேமிக்கலாம்.

3. ஒரு காலி மனையை பெண்ணின் படிப்புக்கு வைத்துக்கொள்ளலாம், ஏனெனில், அதற்கு 4 ஆண்டுகளே உள்ளது.

4. 4,000 ரூபாயை எஸ்.ஐ.பி மூலம் சேமித்தால் குறைந்தது ரூ. 11 லட்சத்தை மகனின் மேல்படிப்புக்காகச் சேமிக்கலாம்.

5. ஒரு லட்சம் ரூபாய்க்கான பங்குகளை வாங்கி வைத்திருக்கிறார். அவை நல்ல பங்குகள் என்று எடுத்துக் கொண்டால், அது 13 வருடத்தில் 8 லட்சம் ரூபாய் ஆவதற்கான வாய்ப்பு அதிகம்.

6. ரூ.25,000 ஓய்வூதியத்துக்காக கணக்கிட்டிருப்பது தவறு. இந்தத் தொகை இன்னும் 13 வருடத்தில் மிகக் குறைவு. இன்று அவருடைய மாதச் செலவு, 8% பணவீக்கத்தில் ரூ.41 ஆயிரமாக உயர்ந்துவிடும். இன்று சராசரியாக ஒருவர் உயிர் வாழ்வது இந்தியாவில் 80 வயது வரை. அவருடைய ரிட்டையர்மென்ட் ஃபண்டு 1.21 கோடி இருந்தால் அவரால் 80 வயது வரை நிதி ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.

தொகுப்பு- செ.கார்த்திகேயன்,

படங்கள்: க.தனசேகரன்.

ஃபைனான்ஷியல்

செக்கப் ரேட்டிங்: 65/100

செலவுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல், சரியான இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தல், முதலீடு எல்லாவிதமான வகையிலும் செய்தல், அடையக்கூடிய இலக்குகள், தற்போதுள்ள முதலீட்டு குணங்கள் அதனுடைய செயல்பாடு, ரெகுலராக முதலீடு செய்யும் பண்பு, முதலியவற்றை வைத்து அவருக்கு 65% ரேட்டிங் கொடுக்கலாம்!

உங்கள் நிதி ஆரோக்கியத்தையும் செக் செய்துகொள்ள வேண்டுமா..? உங்கள் முதலீட்டு விவரங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விவரம், மாத வருமானம், செலவுகள், கடன், சொத்து விவரங்கள் மற்றும் எதிர்காலத் தேவைகள் போன்ற தகவல்களை அனுப்ப வேண்டிய முகவரி:

ஃபைனான்ஷியல் ஹெல்த் செக்-அப்,

நாணயம் விகடன்,

757, அண்ணா சாலை,

சென்னை - 600002

தொடர்புக்கு: 044-2851 1616

(2 PM-8PM)

மெயில் முகவரி: navdesk@vikatan.com