பிரீமியம் ஸ்டோரி
##~##

 இந்த வாரம் ஏலக்காய் விலைப்போக்கைப் பற்றி விரிவாகச் சொல்கிறார் ஜே.ஆர்.ஜி நிறுவனத்தின் தென்மண்டல மேலாளர் முருகேஷ்குமார்.

ஏலக்காய்! (Cardamom)

''கடந்த வாரம் தேவை குறைவின் காரணமாகவும், ஸ்பாட் சந்தைகளில் வரத்து அதிகரித்ததன் காரணமாகவும் விலை குறைந்தே வர்த்தகமானது. மேலும், சந்தை தகவல்களின்படி, ஏலக்காய் விலை மேலும் விலை வீழ்ச்சி அடையலாம் என வாங்குவோர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

கடந்த வெள்ளியன்று தினவரத்தாக சுமார் 79.5 டன்கள் இருந்தது. ஸ்பாட் சந்தைகளில் விலை சராசரியாக கிலோ ரூ.580-க்கும், அதிகபட்சம் கிலோ ஒன்றுக்கு ரூ.700 வரை வர்த்தகமானது.

நடப்பாண்டில் நல்ல வானிலை காரணமாக உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், கடந்த ஆண்டு இருப்பு வைத்திருந்த விவசாயிகள் தற்போது அதை சந்தைகளுக்கு கொண்டுவர ஆரம்பித்துள்ளனர். இதனால் தினவரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அக்ரி கமாடிட்டி!
அக்ரி கமாடிட்டி!

இதுவரை 14,000 டன் ஏலக்காய் விற்பனையாகியுள்ளதாக சந்தை வட்டாரங்கள் சொல்கின்றன. நல்ல வானிலை காரணமாக இந்த வருடம் ஏப்ரல், மே வரைகூட வரத்து இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, வரும் வாரத்தில் தேவை அதிகரிக்கா விட்டால் விலை இறங்கலாம்!''

ஜீரகம்! (Jeera)

ஜீரகத்தின் விலை சாதகமான வானிலை காரணமாகவும், அதிக விளைச்சலாலும் கடந்த வாரம் குறைந்தே வர்த்தகமானது. போதுமான ஜீரக இருப்பு, விலையைத் தீர்மானிப்பதில் பங்கு வகிக்கலாம். சமீபத்திய இந்திய வானிலை அறிக்கைபடி, வடமாநிலங்களில் பல இடங்களில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸுக்கு கீழே உள்ளது.

மேலும், நவம்பர் 25-ம் தேதிபடி, குஜராத்தில் ஜீரகம் பயிரிடப்படும் ஏக்கரின் பரப்பளவு கடந்த வருடத்தைவிட 7% அதிகரித்து 1,67,700 ஹெக்டேராக உள்ளது. வரும் வாரத்தில் ஜீரகத்தின் விலையில் ஏற்றம் இருக்காது.

அக்ரி கமாடிட்டி!

மஞ்சள்! (Turmeric)

உள்நாட்டு தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக கடந்த வாரம் மஞ்சள் விலை சற்று அதிகரித்தது. சந்தை அறிக்கையின்படி, ஸ்பாட் மார்க்கெட்டுக்கு எதிர்பார்த்ததை விட வரத்து குறைவாகவே இருந்தது.கடந்த வியாழக்கிழமையன்று ஈரோடு மஞ்சள் சந்தைக்கு வரத்து 4,500 பைகளாக (1 பை - 70 கிலோ) இருந்தது. மேலும், ஏப்ரல் - செப்டம்பர் ஏற்றுமதி 2%  அதிகரித்துள்ளது. உள்நாட்டு தேவை அதிகரித்தால் மட்டுமே விலையில் மாற்றம் இருக்கும்.

அக்ரி கமாடிட்டி!

மிளகாய்! (Chilli)

உள்நாட்டு சந்தைகளில் வரத்து அதிகரித்ததன் காரணமாக கடந்த வாரம் மிளகாய் விலை குறைந்தே வர்த்தகமானது. மேலும், மிளகாய் உற்பத்தி இரண்டாவது இடத்தில் உள்ள மத்தியப்பிரதேச மாநிலத்தில் விளைச்சல் பாதித்துள்ளதாகத் தெரிகிறது.

அதேசமயம், நல்ல ஏற்றுமதி தேவை காரணமாக, விலையிறக்கம் தடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சந்தை தகவல்களின்படி, எல்.சி.ஏ 334 (லிசிகி334) மிளகாயின் தரம் அடிக்கடி பாதிக்கப்படுவதால் என்.சி.டி.இ.எக்ஸ்-ல் எல்.சி.ஏ 334 ரக மிளகாய்க்குப் பதிலாக தேஜா மிளகாயை 2014-ல் வர்த்தகத்துக்கு கொண்டுவரலாம் என்று தெரிகிறது. மேலும், தற்போது

எக்ஸ்சேஞ்சில் டிசம்பர் மாத கான்ட்ராக்ட் மட்டுமே உள்ளது. வரும் வாரத்தில் விலையிறக்கத்துக்கான வாய்ப்புகள் அதிகம்.

   - சே.புகழரசி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு