Published:Updated:

பிட்காயின்: எப்ப தடை வரும்?

பிட்காயின்: எப்ப தடை வரும்?

பிரீமியம் ஸ்டோரி

ஃபாலோ-அப்!

##~##

பிட்காயின் பரபரப்பு இந்தியாவையும் தொற்றிக்கொண்டுவிட்டது. பெங்களூரில் அதுதொடர்பான ஒரு மாநாடு நடக்கப்போவதாக தகவல் வரவே, இந்த பரபரப்பு இன்னும் சூடுபிடித்திருக்கிறது!

 இங்கு பிட்காயின்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்கிற அறிவிப்புகள் சில இணையதளங்களில் வெளியானாலும், இந்தியாவைப் பொறுத்தவரை பிட்காயின்களால் எந்தப் பயனும் இல்லை. இன்றைய தேதியில் நமது அரசின் அங்கீகாரம் அதற்கு இல்லாததால், அது ஒரு செல்லாக் காசுதான்.

உங்களிடம் இருக்கும் பத்து ரூபாயை எடுத்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று பாருங்கள். 'ஐ ப்ராமிஸ் டு பே த பியரர் ஏ சம் ஆஃப் ருபீஸ்’ என்ற வாசகமும், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்தும் இருக்கும். அதாவது, இந்த ரூபாய் நோட்டை கொண்டுவருபவருக்கு இதில் அச்சடிக்கப்பட்டிருக்கும் ரூபாய் தரப்படும் என்று அர்த்தம். இதை சாவரின் கேரன்டி என்பார்கள்.  இந்த கேரன்டி தரப்படாத எந்த விஷயமும் நம் நாட்டில் சட்டப்படி செல்லுபடி ஆகாது.

பிட்காயின்: எப்ப தடை வரும்?

ஒரு நாட்டின் கரன்சியே அந்த நாட்டின் லீகல் டெண்டர் எனப்படும். அதாவது, நீங்கள் தரவேண்டிய மதிப்புக்கு ஈடாக ரூபாய் நோட்டை மட்டுமே தரலாம். வேறு ஏதாவது தந்தால் அது லீகல் டெண்டர் ஆகாது. உதாரணமாக, நீங்கள் தரவேண்டிய பத்து ரூபாய்க்குப் பதிலாக உங்கள் ஆபீஸ் கேன்டீனில் தரும் பத்து ரூபாய் டீ டோக்கனைத் தந்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. பிட்காயினும் இந்த டீ டோக்கன் மாதிரியான ஒரு விஷயம்தான்.

பிட்காயின் என்பது பண்டமாற்றுக்கு வழிவகுக்கும் ஒரு ஸ்பெகுலேட்டிவ் மோகப் பொருள். இதை கையால் தொடவோ, கண்ணால் பார்க்கவோ,  சட்டரீதியாகப் பயன்படுத்தவோ  முடியாது. தங்கம்/வைரம்போல் உலகளாவிய ஏற்பும் கிடையாது. எனவேதான், சீன அரசாங்கம் இதற்கு உடனடியாக தடை விதித்திருக்கிறது.

நம்மூர் பாமரர்கள் இதை வாங்கி ஏமாறும் முன்பே, இதை யாரும் பயன்படுத்தக்கூடாது என ரிசர்வ் வங்கி அறிவித்தால் மட்டுமே, கஷ்டப்பட்டு மக்கள் சேர்த்த பணம் தப்பும்!            

- வேலாயுதம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு