Published:Updated:

அதிகரிக்கும் ஓய்வுக்கால செலவுகள்...

அசத்தல் முதலீட்டு ஆலோசனைகள்! வேலை பார்க்கும்போதே சொந்தமாக ஒரு வீடு வாங்கிவிடுவது பாதுகாப்பானது.

அதிகரிக்கும் ஓய்வுக்கால செலவுகள்...

அசத்தல் முதலீட்டு ஆலோசனைகள்! வேலை பார்க்கும்போதே சொந்தமாக ஒரு வீடு வாங்கிவிடுவது பாதுகாப்பானது.

Published:Updated:
##~##

இன்றைய பொருளாதாரச் சூழலில் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும்போதே குடும்ப பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் திணறும்போது, ஓய்வுக்காலத்தை எப்படி நிம்மதியாக கழிக்க முடியும் என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாகவே இருக்கும் என்கிற  அதிர்ச்சிகரமான  உண்மைகளை வெளியிட்டிருக்கிறது ஏர்னஸ்ட் யங் நிறுவனம்.

தற்போதைய நிலையில் வேலை பார்க்கிறவர்களில் 30 சதவிகிதத்தினருக்குதான் பென்சன், பி.எஃப் மூலம் கிடைக்கும் பணத்தைக்கொண்டு ஓய்வுக்காலத்துக்கான செலவை ஓரளவுக்கு சமாளிக்கிறமாதிரி இருக்கும். மீதியுள்ள 70 சதவிகிதம் பேர், வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் அதிகரித்துவரும் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திண்டாடவே செய்வார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தற்சமயம், ஓய்வுக் காலத்துக்காக நாம் சேமிக்கும் பணம், எட்டு வருட ஓய்வுக் காலத்துக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். ஆனால், வேலையிலிருந்து ஓய்வு பெற்றபிறகு ஏறக்குறைய 16 ஆண்டுகள் ஒருவருடைய ஆயுள் நீளும். இப்படி நீளும் கூடுதல் ஆயுளுக்கும் சேர்த்து சேமிக்கவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் என்கிறது இந்த ரிப்போர்ட்.  

அதிகரித்துவரும் செலவுகளை சமாளிக்கிற மாதிரி ஒளிமயமான ஓய்வுக்காலத்துக்கு எப்படி திட்டமிடவேண்டும், எந்த விஷயத்தில் எல்லாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சென்னையின் முன்னணி நிதி ஆலோசகர் வி.சங்கரிடம் கேட்டோம்.

அதிகரிக்கும் ஓய்வுக்கால செலவுகள்...

''நம் குடும்பங்களைப் பொறுத்தவரை 'எண்ணிச் சுட்ட பணியாரம்’ என்பதுபோல்தான் நிலைமை இருக்கிறது. எனக்கு தெரிந்து பெரும்பாலும் எந்த குடும்பத் தலைவனும் தனது மாத பட்ஜெட்டில் ஓய்வுக் காலத்துக்கென எந்தத் தொகையையும் தனியாக ஒதுக்கி வைப்பதில்லை. இப்போதைய விலைவாசி ஏற்றம் அப்படியே தொடரும்பட்சத்தில் பணி ஓய்வுபெற்றபின் சௌகரியமாக வாழ்க்கையை ஓட்ட வேண்டுமெனில், தற்போது செய்துவரும் பல (தேவை இல்லாத) செலவுகளை குறைக்க வேண்டியது அவசியம். இல்லையெனில், அன்றாட செலவுகளுக்கு, மருத்துவச் செலவுகள், பயணச் செலவுகள் என எல்லாவற்றுக்கும் பிள்ளைகளை எதிர்பார்த்து நிற்கவேண்டியிருக்கும்.  

வீண் கௌரவத்துக்காக  பிள்ளைகளின் கல்யாணத்தை தடபுடலாக நடத்துவதற்காக எல்லாப் பணத்தையும்  செலவழித்துவிட்டு, கடைசியில் பிள்ளைகளின் கையை எதிர்பார்த்து நிற்கிற பெற்றோர்கள் பலர். உறவினர்கள் அப்படி செய்தார்கள், நண்பர்கள் அப்படி செய்தார்கள் என்று ஜம்பத்துக்கு செலவு செய்வதை விட்டுவிட்டு, நம் தகுதிக்கேற்ப நம்  வருமானத்துக்குள் செலவுகளை செய்யவேண்டும்'' என்றவர், ஓய்வுக்காலத் திட்டமிடலில் நம்மில் அதிகம்பேர் செய்யும் தவறை சுட்டிக்காட்டினார்.

அதிகரிக்கும் ஓய்வுக்கால செலவுகள்...

''நம்மில் பலர், கல்யாணம் போன்ற குடும்ப விழாக்களுக்கு ஓய்வுக்காலத்துக்கான பி.எஃப் பணத்தை எடுத்து செலவு செய்கிறார்கள். இந்தக் கடனை திரும்பக் கட்டுவதில்லை என்பதால், வேலையிலிருந்து ஓய்வுபெறும்போது சொற்ப தொகையே கைக்கு கிடைக்கிறது. இதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து அன்றாட செலவுகளை செய்ய முடியாமல் பலரும் திண்டாடுகிறார்கள். பி.எஃப் தொகையை எடுத்து மனை வாங்கிக்போட்டவர்கள், வீடு வாங்கியவர்கள், அதிக வருமானம் தரும் திட்டங்களில் மறுமுதலீடு செய்தவர்கள் புத்திசாலிகள். அதாவது, பி.எஃப் பணத்தை நிச்சயமாக 9 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் தருகிற ஈக்விட்டி ஃபண்டுகளில் நீண்டகாலத்தில் முதலீடு செய்யலாம்.

ஆனால், பி.எஃப் தொகையைக்கொண்டு ஆடம்பரச் செலவோ,  வெட்டிச் செலவோ செய்யக் கூடாது. ஒருவர் தனக்காக, தன் குடும்பத்துக்காகத்தான் வாழவேண்டுமே தவிர,  உறவினர்கள் என்ன நினைப்பார்கள், ஊர் என்ன நினைக்கும் என்பதற்காக தேவையில்லாமல் பல லட்சம் ரூபாயை வீணாக்கக் கூடாது'' என்றவரிடம், ஓய்வுக்காலத்துக்கு எப்படி முதலீடு செய்யவேண்டும் என்று

அதிகரிக்கும் ஓய்வுக்கால செலவுகள்...

கேட்டோம்.

''முதலில், பி.எஃப் பணத்தை பணி ஓய்வு பெறுகிற வரை தொடவே கூடாது. முடிந்தால் வாலன்டரி ப்ராவிடெண்ட் ஃபண்டு மூலம் கூடுதலாக பி.எஃப் முதலீட்டை அதிகரிக்கலாம். மத்திய அரசின் புதிய பென்சன் திட்டத்தின் மூலம் ஓய்வுக்காலத்துக்கு முதலீடு செய்யலாம். மியூச்சுவல் ஃபண்டு (ஈக்விட்டி ஃபண்டுகள் மற்றும் கடன் ஃபண்டுகள்) மூலமும் முதலீட்டை மேற்கொள்ளலாம். மியூச்சுவல் ஃபண்டில் ஃபண்டு நிர்வாகக் கட்டணம், 2-2.5%தான். இது புதிய பென்சன் திட்டத்தில் 0.5%.  

ஓய்வுக்கால முதலீட்டில் இருக்கும் ரிஸ்க்கை பரவலாக்க நினைக்கிறவர்கள், பி.எஃப், புதிய பென்சன் திட்டம், மியூச்சுவல் ஃபண்டு என முதலீட்டை பிரித்து மேற்கொள்ளலாம். ஆனால், இந்த முதலீட்டை எக்காரணம் கொண்டும் ஓய்வுக்காலம் வரை திரும்ப எடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்.  நம்மில் பலர் ஓய்வுக்காலத்துக்கு முதலீடு செய்யவேண்டும் என்பதை 50 வயதில்தான் யோசிக்கிறார்கள். 30 வயது இருக்கும்போது, ஓய்வுக்காலத்துக்குதான் இன்னும் 30 வருஷம் இருக்கே என்று நினைத்து அசட்டையாக இருந்துவிடுகிறார்கள். இது தவறு. சிறிய தொகையானாலும் அதனை சிறுவயது முதலே சரியான முதலீட்டில் போட்டுவருவது நல்லது'' என்றார்.

அதிகரிக்கும் ஓய்வுக்கால செலவுகள்...

'ஓய்வுக்காலத்துக்கு முன்கூட்டியே திட்டமிடவில்லை. இப்போது என்ன செய்வது?’ என்கிற கேள்வியைக் கேட்டோம். அந்தக் கேள்விக்கும் அவர் விளக்கமான பதில் தந்தார்.  

''கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் சில விஷயங்களை கண்டிப்பாகச் செய்யவேண்டி இருக்கும். நகரத்தில் உள்ள உங்கள் சொந்த வீட்டின் மூலம் மாதம் 30,000 ரூபாய் வாடகை கிடைக்கிறது எனில்,  அதனை வாடகைக்கு விட்டுவிட்டு, நகரத்துக்கு வெளியே 5,000 ரூபாய்க்கு வாடகை வீட்டுக்குச் செல்வதன் மூலம் செலவை சமாளிக்க முடியும். தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்த்த நிலை மாறி, அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

ஓய்வுக்காலத்தை நிம்மதியாக கழிக்க எந்தவகையிலும் தயாராகாதவர்கள், எல்லா விஷயங்களுக்கும் தங்கள் பிள்ளைகளையே எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். அவர்களால் செலவு செய்ய முடியவில்லை எனில், அதற்காக வருத்தமும் படவேண்டி இருக்கும். பிள்ளைகளின் வருமானத்தில் கிடைக்கும் பணம் கல்விக் கடனை அடைக்க, வீட்டுக் கடனைக் கட்ட, அவர்களின் குடும்பத்தைக் கவனிக்கவே சரியாக இருக்கும் என்கிறபோது, உங்கள் வருத்தம் நியாயமில்லாததாகப் போய்விடலாம். அல்லது உங்களை கவனிக்க உங்கள் குழந்தைகள் திண்டாட்டம்தான் போடவேண்டியிருக்கும்.

அதிகரிக்கும் ஓய்வுக்கால செலவுகள்...

என் மகன் கடைசிகாலத்தில் என்னை கவனிக்கவில்லை என்று புலம்புவதை விட்டுவிட்டு, எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்று இப்போதே தயாராகி, எந்தத் தேவைக்கும் யாரையும் எதிர்பார்க்காமல் உங்கள் சொந்தக் காலில் நிற்கிற மாதிரி இன்றே பணத்தைச் சேமிக்கத் தொடங்குங்கள்'' என்று முடித்தார் சங்கர்.

இதுநாள்வரை ஓய்வுக்காலத்துக்காக சேமிக்காத வர்கள் இனியாவது சேமிக்கலாமே!            

  - சி.சரவணன்,
 படங்கள்: தே.தீட்ஷித்,
எ.கிரேசன் எபினேசர்.

 சில அதிர்ச்சித் தகவல்கள்..

* வரும் 2030 ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 12 சதவிகிதம் பேர், அதாவது 18 கோடி பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள். இவர்களில் கணிசமானவர்கள் ஓய்வு காலத்துக்கான சேமிப்பை இன்னும் தொடங்கவில்லை.

*    * பெண்களில் சுமார் 70% பேரும், ஆண்களில் 50% பேரும் தங்கள் பிள்ளைகளை நம்பி இருக்கிறார்கள்.  

* * * வேலைக்குச் சேர்ந்த ஐந்து ஆண்டுகளில் ஓய்வுக் காலத்துக்கான முதலீட்டை ஆரம்பிப்பவர்கள் 10 சதவிகித பேரும், 10 ஆண்டுகளில் தொடங்குபவர்கள் 20 சதவிகிதம் பேரும் உள்ளனர்!  

 நிம்மதியான ஓய்வுக்காலம்!

சில ஆலோசனைகள்!

* ஓய்வுக்காலத்துக்காக, அசையும் மற்றும் அசையா சொத்துகளில் கலந்து முதலீடு செய்தால்  ரிஸ்க் குறைவதோடு, நம் தேவையையும் எளிதில் ஈடு செய்ய முடியும்.  

* நீண்டகால நோக்கில் மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பங்குகளில் முதலீடு செய்யலாம். புறநகர்களில், வளர்ச்சிக்கான வாய்ப்பு இருக்கக்கூடிய பகுதியில் மனை வாங்கிப்போடலாம். தங்கத்தில் சிறிதளவு முதலீடு செய்துவைக்கலாம்.  

அதிகரிக்கும் ஓய்வுக்கால செலவுகள்...

* மாதச் சம்பளக்காரர்கள் மட்டுமின்றி, சுயதொழில் செய்பவர்களும் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை வருமானச் வரிச் சலுகை  கிடைக்கும் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

* இந்தியர்களின் சராசரி ஆயுள் அதிகரித்துள்ள நிலையில், நீரிழிவு, இருதயம் தொடர்புடைய நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, நீண்டகால ஹெல்த் பாலிசி எடுத்தால் மட்டுமே வயதான காலத்தில் அதிக ப்ரீமியம் கட்டுவதிலிருந்து தப்பிக்க முடியும்.  இல்லாவிட்டால், மூத்தகுடிமக்களுக்கு என இருக்கும் பாலிசியைத் தனியாக எடுக்கலாம்.

* வேலை பார்க்கும்போதே சொந்தமாக ஒரு வீடு வாங்கிவிட்டால், அந்த வீட்டை (ரிவர்ஸ் மார்ட்கேஜ் திட்டத்தில்) அடமானமாக வைத்து வீட்டின் மதிப்பில் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஆயுளுக்கும் பெறலாம். இந்தத் தொகைக்கு வருமான வரி கிடையாது. இந்தத் திட்டம் பல முன்னணி வங்கிகளில் இருக்கிறது!

அதிகரிக்கும் ஓய்வுக்கால செலவுகள்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism