Published:Updated:

விவசாயத்துக்கு மானியம் தரக் கூடாதா?

விவசாயத்துக்கு மானியம் தரக் கூடாதா?

விவசாயத்துக்கு மானியம் தரக் கூடாதா?

விவசாயத்துக்கு மானியம் தரக் கூடாதா?

Published:Updated:

இந்தியாவின் குரலை உலக நாடுகள் வரவேற்றன.

##~##

உலக நாடுகளின் கவனமெல்லாம் மீண்டுமொருமுறை இந்தியாவின் மீது குவிந்தது சில வாரங்களுக்கு முன்பு. உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப்பட இருந்த சில விதிமுறைகளுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததே இதற்கு காரணம். ஏறக்குறைய 159 நாடுகளின் வர்த்தகத் துறை அமைச்சர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், இந்தியா தனது  கருத்தை ஆணித்தரமாக முன்வைத்ததன் விளைவாக, சில முக்கிய விஷயங்கள் பற்றி அடுத்த சில ஆண்டுகளுக்கு எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை உலக வர்த்தக அமைப்புக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சில ஆண்டுகளுக்குமுன்பு பல நாடுகள் உலக வர்த்தக அமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டபோது, சில முக்கிய நிபந்தனைகளை விதித்தது. அதில் முக்கியமானது, உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு மானியம் தரக்கூடாது. இறக்குமதி செய்யப்படும் பொருளுக்கு கட்டுப்பாடுகள்  விதிக்கக் கூடாது.

இந்த இரண்டு நிபந்தனை களில் முதலாவது நிபந்தனைக்கு இந்தியா இப்போது கடும் ஆட்சேபம் தெரிவித்தது.   இந்த ஆட்சேபத்துக்கு என்ன காரணம் என சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இராம.சீனுவாசனுடன் பேசினோம்.

''உலக வர்த்தக அமைப்பின் நிபந்தனைகளின்படி, வர்த்தகம் செய்யப்படுகிற பொருட்களுக்கான உள்நாட்டு மானியம் 10 சதவிகிதத்துக்கு மேல் தரக்கூடாது என்று சொல்கிறது. ஆனால், இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால், 10 சதவிகிதத்துக்கும்  அதிகமாகவே மானியம் வழங்கவேண்டி யிருக்கும்.

விவசாயத்துக்கு மானியம் தரக் கூடாதா?

உலக வர்த்தக அமைப்பு சொல்கிறபடி, இந்த மானியத்தைக் குறைத்தால், அது அரசியல்ரீதியாக எதிரொலிக்கும். எனவே, இதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்தியா சார்பில் சொல்லப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த எதிர்ப்புக்கு பிரேசில், சீனா போன்ற பல நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பொதுவாக, உலக வர்த்தக அமைப்பின் மாநாடுகளில் வளர்ந்த நாடுகளின் குரல்கள்தான் ஓங்கி ஒலிக்கும்.  அந்த நாடுகள் சொல்வதை வேறு வழியில்லாமல் வளரும் நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும்.

ஆனால், இந்தமுறை இந்தியா போன்ற வளரும் நாடுகள் காட்டிய எதிர்ப்பின் காரணமாக வளர்ந்த நாடுகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்கிற நிலை உருவாகியுள்ளது'' என்றார் அவர்.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா சார்பில் முன்வைக்கப்பட்ட முடிவுகளை எப்படி பார்க்கிறீர்கள் என மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ், உதவி பேராசிரியர் விஜயபாஸ்கரிடம் கேட்டோம்.

''இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு கொள்கையானது, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் பொருளாதார நிலைமைகளை கருத்தில்கொண்டது. மக்கள் நலத் திட்டங்கள், மானியங்கள் எல்லாம் இதன் அடிப்படையில் தான் வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயத்துக்கு மானியம் தரக் கூடாதா?

ஆனால், உலக வர்த்தக அமைப்பின் நிபந்தனைகளை கடந்தகாலத்தில்  ஏற்றுக் கொண்ட பிறகு, உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவதைக் கடந்த சில ஆண்டுகளாக நேரடியாக பார்த்து வருகிறோம். ஒவ்வொரு நலத் திட்டங்களையும் அரசு கைவிட்டு வருகிறது.  

ஆனால், இந்தமுறை இந்தியாவின் சார்பில் கடும் எதிர்ப்பு காட்டியதற்கு காரணம், உணவுப் பாதுகாப்பு மசோதாவை தங்களது கனவு திட்டமாக காங்கிரஸ் அரசாங்கம் நினைப்பதால்தான். இந்தியா மாதிரியான பல வளரும் நாடுகளிலும் இந்தப் பிரச்னை இருப்பதால், இதைத் தற்காலிகமாக ஒத்திபோட முடிவு செய்துள்ளது உலக வர்த்தக அமைப்பு.

இந்த சமரசம் இறுதி முடிவல்ல. இனிவரும் காலத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கவே செய்யும். அப்போது, இந்தியா என்ன முடிவு செய்யும் என்பதே  முக்கியம்'' என்றார் அவர்.

நமது அரசு இப்போது எடுத்த முடிவை நாம் வரவேற்றாலும், எதிர்காலத்தில் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்கிற கேள்வியில்தான் நம் விவசாயிகளின் எதிர்காலம் இருக்கிறது!

- நீரை.மகேந்திரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism