Published:Updated:

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

Published:Updated:

வரும் 18, 19 தேதிகளில் சந்தை அதிக ஏற்ற   இறக்கத்துடன்  இருக்கும்.

தங்கம்!

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நடப்பு நிதியாண்டின் கடந்த காலாண்டில் தங்கத்தின் உபயோகம் 868.5 டன்னாக இருந்தது. இதுவே, கடந்தாண்டு இதேகாலத்தில் 1,101.4 டன்னாக இருந்தது என்று உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது.

அமெரிக்கா, ஒவ்வொரு மாதமும் வழங்கும் கடன் பத்திரத்தின் அளவு குறைக்கப்படலாம் என்கிற காரணத்தினாலேயே, கடந்த பத்து வாரங்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்தது.

வரும் டிசம்பர் 17-18 தேதிகளில் நடக்கவிருக்கும் அமெரிக்க ஃபெடரல் மானிட்டரி பாலிசி கூட்டத்தில் பாண்டு பையிங் திட்டத்தை நிறுத்தலாம் என ப்ளூம்பெர்க் டிசம்பர்-6ல் எடுத்த சர்வேயில் 34 சதவிகித பொருளாதார நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர். இதுவே, கடந்த நவம்பர்-8ல் எடுக்கப்பட்ட சர்வேயில் 17 சத விகிதமாக இருந்தது.

வரும் வாரத்தில்  18, 19-ம் தேதிகளில் அதிக ஏற்றஇறக்கம் இருக்கும் எனவே, வர்த்தகர்கள் அதிக கவனத்துடன் டிரேட் செய்யவேண்டும்.  

மேலும், இந்த வாரத்தில் 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.29,635 தாண்டினால் மட்டுமே வாங்கலாம். அடுத்த ரெசிஸ்டன்ஸ் லெவல் ரூ. 30,275 ஆகும். சப்போர்ட் லெவல்

ரூ. 28,720, 28,029.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

அடிப்படை உலோகங்கள்!

காப்பர்: ரூபாயின் மதிப்பு சுமார் 62 வரை சரிவடைந் ததாலும், அதேசமயம் டாலரின் மதிப்பு வலுவடைந்து உள்ளதாலும் காப்பரின் விலை கடந்த வாரம் சரிந்தது. ஆனால், சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் உலோகங்கள் பிரித்தெடுக்கப்படும் பணி, இந்தோனேஷியாவின் ஏற்றுமதி தடையால் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் அதிகப்படியாக விலை குறைவது தடுக்கப்பட்டது. மேலும், கடந்த பிப்ரவரி மாதம் முதல் காப்பரின் இருப்பு குறைவாகவே இருந்து வருகிறது. ஆக, வரும்

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

வாரத்தில் காப்பரின் விலை உயர வாய்ப்புகள் அதிகம்.

லெட்:  அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளில் மோட்டார் விற்பனை வலுவடைந்துள்ளது. இது விலையேற்றத்துக்கு வழிவகுக்கலாம்.

ஜிங்க்: ஜிங்க் இருப்பு குறைந்து இருப்பதாலும், அதேசமயம் சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஜிங்கின் அளவும் குறைவாகவே உள்ளது.  

நிக்கல்: அதிகப்படியான நிக்கல் இருப்பு காரணமாக விலை குறைய வாய்ப்புகள் அதிகம். இந்தோனேஷியாவில் இருந்து ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளதால் அதிக விலையிறக்கத்தைத் தடுக்கலாம்.

கச்சா எண்ணெய்!

டாலரின் மதிப்பு அதிகரிப்பும், அதேசமயம் அமெரிக்க மானிட்டரி கொள்கையில் மாற்றம் இருக்கலாம் என்ற அச்சத்தாலேயும் கடந்த வாரம் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்தது. எனினும், அமெரிக்காவின் சில்லறை விற்பனை குறியீடு அதிகளவு விலையிறக்கத்தைத் தடுத்தது.

மேலும், டிசம்பர் 17-18-ல் நடக்கும் அமெரிக்க மானிட்டரி கொள்கையில்  மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர, கடல் வழியாகச் செல்லும் இரட்டை பைப்லைனில் 4,50,000 பேரல்கள் செல்வது 2014-வது ஆண்டின் இரண்டாவது காலாண்டிலிருந்து ஆரம்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், லிபியாவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் மூன்று  துறைமுகங்கள் மறுபடியும் திறக்கப்படவுள்ளதால், அந்த நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்கும். வரும் வாரத்தில் ரூபாயின் மதிப்பும் விலையில் பிரதிபலிக்கும்.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

இயற்கை எரிவாயு!

அமெரிக்காவில் அதிகப்படியான குளிர் காரணமாக விலையில் ஏற்றம் இருந்தது.

அமெரிக்காவின் இன்வென்டரியில் எதிர்பார்க்கப் பட்டபடி, 81 பில்லியன் கியூபிக் ஃபீட் இருப்பு குறைந்துள்ளது.

வரும் வாரத்தில் இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் ரூபாயின் சரிவு மேலும் விலையேற்றத்துக்கு வழி வகுக்கலாம்.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்
கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

- சே.புகழரசி,
படம்: ஜெ.வேங்கடராஜ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism