Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

அக்ரி கமாடிட்டி!

அக்ரி கமாடிட்டி!

அக்ரி கமாடிட்டி!

Published:Updated:
##~##

இந்த வாரம் கொண்டைக்கடலையின் விலைப்போக்கைப் பற்றி விரிவாகச் சொல்கிறார் ஜே.ஆர்.ஜி நிறுவனத்தின் தென்மண்டல மேலாளர் முருகேஷ்குமார்.

கொண்டைக்கடலை! (Chana)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''கொண்டைக்கடலை விலை முக்கிய ஸ்பாட் சந்தைகளில் அதிகளவு ஏற்றஇறக்கம் இல்லாமல்,  குவிண்டாலுக்கு ரூ.2,800 - 3,150  வரை வர்த்தகமாகி வந்தது. கொண்டைக்கடலை உற்பத்தி செய்யும் மாநிலங்களிலிருந்து  அக்டோபர் - நவம்பர் வரையிலான வரத்து கடந்த வருட வரத்தைவிட அதிகமாக உள்ளது.  மத்தியப்பிரதேசத்தில் அதேகாலத்தில், வரத்து 3.5 - 4 மடங்கு அதிகம் இருந்தது.

கொண்டைக்கடலையின் குறைந்தபட்ச விலையை அரசாங்கம் ரூ.3,100-ஆக   நிர்ணயித்திருப்பதால், கையிலிருக்கும் கேரி ஓவர் ஸ்டாக்குகளை விவசாயிகள் விற்க முற்படுவதால்,  விலை சிறிது குறையலாம். ரெசிஸ்டன்ஸ்: ரூ.3,190, 3,250; சப்போர்ட்: ரூ.3,060, 3,000.''

அக்ரி கமாடிட்டி!

கொத்துமல்லி! (Coriander )

முக்கிய ஸ்பாட் சந்தை களில் வரத்து அதிகமாக இருந்ததால், கடந்த வாரம் கொத்துமல்லி விலை குறைந்தே வர்த்தகமானது. ராஜஸ்தானில் நடப்பு ராபி பருவத்தில் நல்ல மழை காரணமாக விதைப்பு 5-10% குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பைஸஸ் போர்டு ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஏப்ரல் - செப்டம்பர் மாதத்தில் கொத்துமல்லி ஏற்றுமதி 21,300 டன்னாக அதிகரித்துள்ளது. இதுவே, கடந்த வருடம் இதே காலத்தில் 15,246 டன்னாக இருந்தது.

வரும் வாரத்தில் வரத்து குறைந்து தேவை அதிகமானால் மட்டுமே விலை அதிகரிக்கும். இல்லையெனில், விலையில் ஏதும் மாற்றம் இருக்காது.

அக்ரி கமாடிட்டி!

 மஞ்சள்! (Turmeric)

மஞ்சள் விலை, கடந்த வாரத் தொடக்கத்தில் அதிகமாகி, வார இறுதியில் விலை சரிந்தது. மேலும், மஞ்சளின் தரம் குறைந்து காணப்படுவதால் மஞ்சள் வியாபாரிகள் தரம் மிகுந்த புதிய மஞ்சள் சாகுபடிக்காக காத்திருக்கின்றனர்.

அக்ரி கமாடிட்டி!

என்சிடிஇஎக்ஸ் மஞ்சள் சேமிப்புக் கிடங்கில் சேகரித்து வைக்கும் மஞ்சளின் சேமிப்பு காலம் ஜனவரி 5 அன்று காலாவதியாக இருப்பதால், மஞ்சள் விலை மேலும் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்,  ஈரோடு மற்றும் நிஜாமாபாத் சந்தைகளில் வரத்து முறையே 2,300 பைகள் மற்றும் 800 பைகளாக (1 பை என்பது 70 கிலோ) உள்ளது.

ஆந்திராவில் உற்பத்தி குறைவு மற்றும் ஏற்றுமதி ஆர்டர்களினால் விலை ஏறினாலும், தரமில்லாத வரத்து மற்றும் அதிக கையிருப்பு விலை ஏற்றத்தைத் தடுக்கும்.

 ஏலக்காய்! (Cardamom)

முக்கிய ஸ்பாட் சந்தைகளில் அதிக இருப்பு காரணமாக ஏலக்காய் விலை கடந்த வாரம் குறைந்தே வர்த்தகமானது.

இதனைத் தொடர்ந்து, விலை மேலும் குறையலாம் என ஏலக்காய் வியாபாரிகள் எதிர்பார்ப்பதால் ஏலக்காயை வாங்காமலே இருக்கின்றனர்.

ஏலக்காய் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும்  கவுதமாலாவில் தற்போதுதான்  அறுவடை தொடங்கியுள்ளது. விளைச்சலும் கடந்த ஆண்டை போலவே இருக்கும்.

அக்ரி கமாடிட்டி!

கடந்த வியாழக்கிழமை தின வரத்தாக 93 டன்கள் இருந்தது. மேலும், ஸ்பாட் சந்தைகளில் சராசரி விலை கிலோ குறைந்தபட்சம் 553 ரூபாயும், அதிகபட்சமாக  718 ரூபாயாகவும் வர்த்தகமானது.

வரும் வாரத்தில் ஏற்றுமதி அல்லது உள்நாட்டுத் தேவை அதிகரித்தால் மட்டுமே ஏலக்காய் விலை அதிகரிக்கும்.

- சே.புகழரசி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism