இசையும், இலக்கியமும்...

''ஒரே மனநிலையில் நம்மால் எப்போதும் இருக்க முடிவதில்லை. நாம் சில முடிவுகளை எடுப்போம்; சூழல், சில முடிவுகளை நம்மை எடுக்க வைக்கும். எடுத்துள்ள முடிவு நடைமுறையில் என்ன விளைவைத் தரும் என்கிற யோசனை எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும். தொழிலின் ஒவ்வொருநாள் நிலைமையும் சவால் நிறைந்ததாகவே இருக்கும். இத்தனை ஆர்ப்பாட்டங்களில் இருந்தும் என்னை ஆசுவாசப்படுத்துவது புத்தகங்களும், இசையும்தான்.

ஒவ்வொரு நாளும் அலுவலகத்துக்கு கிளம்பும்போது பல வேலைகளைக் குறித்து வைத்துக்கொண்டு போவேன். வீடு திரும்பும்போது சில வேலைகள் முடிக்கப்படாமலே இருக்கும். இந்த மனநிலையிலிருந்து என்னை முற்றிலுமாக மாற்றிவிடும் சக்தி இசை, இலக்கியத்துக்கு உண்டு.

சிறு வயது முதலே புத்தகங்களை ஆர்வமாகப் படிப்பேன். அது இப்போதும் தொடர்கிறது. சங்க இலக்கிய நூல்கள் இப்போதும் என்னை வசீகரிக்கின்றன. கண்ணதாசன் என் மனம் கவர்ந்த எழுத்தாளர். சுஜாதா படைப்புகளை என்னை மறந்து படிப்பேன்.

என்னை இலகுவாக்கும் இன்னொரு விஷயம், இசை. புத்தகம் படிக்கும்போதுகூட பின்னணியில் மெலிதான இசை ஒலிப்பதை விரும்புவேன். பழைய தமிழ் பாடல்கள், இந்தி பாடல்கள் இன்றும் என் இனிய தேர்வாக உள்ளது. காரில் தனிமையில் பயணிக்கும்போதுகூட மெல்லிய இசை ஒலித்துக்கொண்டிருந்தால் ஆசுவாசமாக உணர்வேன்.

இசையும், இலக்கியமும் எனக்குள் இருக்கும் பரபரப்பை அடக்கி, என்னை அமைதியடையச் செய்துவிடுவதால் வேறுமாதிரியான எந்தவகை ரிலாக்ஸேஷனையும் நான் விரும்புவதில்லை. நல்ல இசை கேட்டு, நல்ல இலக்கியம் படிக்க எனக்கு இன்னொரு ஜென்மம் வேண்டும்!

- நீரை.மகேந்திரன்,
படம்: தே.தீட்ஷித்.