சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது. இங்கே உங்கள் கேள்விகளுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் சி.ராமசாமி தேசாய் பதில் அளிக்கிறார்.

''எனக்கு வயது 33. நானும், என் தோழிகளும் சேர்ந்து ஃபுட் பிராசஸிங் செய்ய ஆர்வமாக உள்ளோம். அதற்கான பயிற்சி, வழிமுறைகள், கடன்கள் பற்றி அறிய விரும்புகிறோம். வழிகாட்டுங்களேன்...''

- கவிதா, மன்னார்குடி

''இந்தியாவில் பெரும்பான்மையானவர்கள், தாங்கள் சம்பாதிக்கும் பணத்தின் பெரும்பகுதியை உணவுக்காக செலவு செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. நகரம், சிறு நக ரங்கள் மற்றும் கிராமங்கள் என வித்தியாசம் இன்றி ருசியான, விதம்விதமான உணவு வகைகளை மக்கள் விரும்புகிறார்கள். இதனால் உணவு மற்றும் பதப்படுத்துதல் துறைக் கான தேவை சிறப்பாக உள்ளது. பெரும் லாபம் தரும், உணவுப் பதப்படுத்தும் தொழி லுக்காகவே மத்திய அரசு, உணவுப் பதப்படுத் தும் தொழில்களின் அமைச்சகத்தை நிறுவி உள்ளது. இதற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் இந்த அமைச்சகம்... இதற்கென உட்கட்டமைப்பு வசதிகள், புதிய உணவு பூங்காக்கள், விவசாயிகள் மற்றும் உணவுப் பதப்படுத்தும் தொழில்முனைவோர் ஒருங்கிணைப்புத் திட்டம், சேமிப்புக் கிடங் குகள், மாமிசங்களைப் பதப்படுத்தும் புதுமை யான கூடங்கள் என பலதரப்பட்ட அமைப்பு களை நாடு முழுவதும் ஏற்படுத்தி வருகிறது.

'தேசிய உணவுப் பதப்படுத்துதல் இயக்கம்' (National Mission for Food Processing) என்ற திட்டத்தின்கீழ், உணவுப் பதப்படுத்தும் தொழில்களுக்கான பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. நீங்கள் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டு பலன் பெறலாம். சென்னையிலுள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அல்லது தமிழக அரசின், விவசாய விற்பனை பிரிவு ஆகியவற்றுக்குக் கடிதம் அனுப்பினால், உங்கள் பகுதியில் நடக்கும் பயிற்சிகள் பற்றித் தகவல் தெரிவிப்பார்கள். தமிழகத்தில் மட்டும் இந்த வருடம் 50 பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

தமிழக அரசு, பெண் தொழில்முனைவோ ருக்காக பல இலவசப் பயிற்சிகளை அளித்து வருகிறது. 'நீட்ஸ்', 'யுஒய்இஜிபி', மற்றும் 'பிஎம் இஜிபி' (NEEDS, UYEGP, PMEGP) போன்ற திட் டங்கள் மூலமாக மானியத்துடன் கூடிய கடன் உதவி உண்டு. உணவுப் பதப்படுத்தும் தொழி லுக்கு எந்திரம் மற்றும் கட்டடம் ஆகியவற்றின் மொத்த மதிப்பில் 25% மானிய உதவியை மத் திய அரசின் உணவுப் பதப்படுத்தும் தொழில் அமைச்சகம் மூலம் பெறலாம். தமிழக அரசு குறுந்தொழில்களுக்கு எந்திர தளவாடங்களின் மதிப்பில் 25% மானியம் அளிக்கிறது. பெண் தொழில்முனைவோர் மற்றும் 25 தொழிலாளர் களுக்கும் அதிகமாக பணிபுரியும் அளவுக்கு தொழில் நடத்துபவர்களுக்கு கூடுதலாக 5% மானியம் கிடைக்கும்.

காய்கறி மற்றும் பழவகை பதப்படுத்துதல், உணவு தானிய மாவு உற்பத்தி, மசாலா உற் பத்தி, பால் பதப்படுத்துதல், பால் பொருட்கள் உற்பத்தி, மாமிசம், முட்டை, மீன், கோழி இறைச்சி ஆகியவற்றைப் பதப்படுத்தி உணவுப் பொருட்கள் உற்பத்தி, பேக்கரி, எண்ணெய் வித்துகள் பதப்படுத்துதல், ஃபாஸ்ட் ஃபுட், குளிர் பானங்கள், மது பானங்கள் உற்பத்தி... என பல தொழில்கள் கொட்டிக் கிடக்கின்றன. இத்தொழில்களுக்கான தொழில்நுட்பங்களை APEDA, MPEDA, CFTRI, Coffee Board, Tea Board, Cashew Board, NRDC, NHB போன்ற நிறுவனங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு ஏற்ற தொழிலைத் தேர்வு செய்து பயிற்சி எடுத் துக் கொண்டு, நீங்களும் தொழிலதிபராக வாழ்த்துக்கள்.

முகவரிகள்:

தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், கிண்டி, சென்னை - 32. தொலைபேசி எண்: 044-22502411/12.

Agricultural Marketing and Agri Business Directrate, Thiruvika Industrial Estate, Chennai - 32. Ph: 044 22253884.

வெற்றிக் கோட்டை தொடுவதற்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி... 'வாருங்கள்... வழிகாட்டுகிறோம்’, கேள்வி - பதில் பகுதி, அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002