Published:Updated:

பணப்பெட்டியை நிறைக்கும்... ‘பொட்டிக்’ பிசினஸ்

இந்துலேகா.சி, படங்கள்: ஆ.முத்துக்குமார்

பணப்பெட்டியை நிறைக்கும்... ‘பொட்டிக்’ பிசினஸ்

இந்துலேகா.சி, படங்கள்: ஆ.முத்துக்குமார்

Published:Updated:
##~##

 ''ஒரு பொண்ணோட மனசு... இன்னொரு பொண்ணுக்குதான் தெரியும்ங்கிற வார்த் தையை சரியா உள்வாங்கிட்டு செயல்பட்டா... வாழ்க்கையில மட்டுமில்ல, பிசினஸ்லயும் கொடிகட்டி பறக்கலாம்'' என்று சிரிக்கிற யாமினி, சென்னையில் பெண்களுக்கென்றே பிரத்யேகமாக இயங்கும் 'சாயாஸ் பொட்டிக்’ கடையின் உரிமையாளர்.

''சென்னை, எம்.ஓ.பி. வைஷ்ணவ் கல்லூரி யில பி.எஸ்சி., எலெக்ட்ரானிக் மீடியா. ஒரு வருஷம் கேட்டரிங் படிப்பு. பிறகு, எம்.பி.ஏ படிச்சுட்டு இருக்கும்போதே கல்யாணம். நான் வேலைக்குப் போறதுல கணவருக்கு இஷ்டமில்ல. சும்மாவே வீட்ல உட்கார்ந்துட்டு இருக்கிறதுல எனக்கு விருப்பமில்ல. அதனால, படிப்பு முடிஞ்சதும், லேடீஸ் டிரெஸ் வாங்கி வீட்டுல இருந்தபடியே விற்கலாமேனு தோணுச்சு. ஸ்கூல் ஃப்ரெண்ட் ராஜீவ், ஹோல்சேல் டிரெஸ் டீலர் மகேந்திரன்கிட்ட கூட்டிட்டு போனார். அவர்கிட்ட இருந்து லேடீஸுக்கான ஜீன்ஸ், டாப்ஸ், ஸ்கர்ட்ஸ் மாதிரியான மார்டர்ன் டிரெஸ் எல்லாம் வாங்கிட்டு வந்து, வீட்ல வெச்சு சேல் பண்ண ஆரம்பிச்சேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை’னு என்னோட அப்பா, கணவர் எல் லாரும் பேச ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா, என்னோட நாத்தனாருக்கு, என் கலெக்ஷன்ஸ் பிடிக்கவும் என்கிட்ட நிறைய பர்ச்சேஸ் பண்ணினதோட, தன் ஃப்ரெண்ட்ஸ்களுக்கும் அறிமுகப்படுத்தினாங்க'' என்பவர், 2010-ம் ஆண்டு, சென்னை, கே.கே நகரில் தன் னுடைய 'சாயாஸ் பொட்டிக்’ பிசினஸை ஆரம்பித்திருக்கிறார்.

''பொட்டிக்னா... சின்னதா இருநூறு சதுர அடி இடத்துல இருந்தாலே போதும்; யுனிக் கலெக்ஷன்ஸா வைக்கணும்; லைட்டிங்ஸ்... மைல்டா இருக்கணும்... இப்படிப்பட்ட பல பிசினஸ் நுணுக்கங்களை என் ஃப்ரெண்ட் ஹரிஷ்குமார்தான் கத்துக்கொடுத்தார். அதுக் கப்புறம்தான் ஒவ்வொரு டிரெஸ் மெட்டீ ரியல், அதோட பிரத்யேக குணம், கரன்ட் டிரெஸ் டிரெண்ட் அப்டேட் பத்தி எல்லாம் ஆன்லைன்ல தேடித் தேடி தெரிஞ்சுகிட் டேன். பார்த்துப் பார்த்து மெட்டீரியல்ஸை பர்ச்சேஸ் பண்ணினேன்.

பணப்பெட்டியை நிறைக்கும்... ‘பொட்டிக்’ பிசினஸ்

'எல்லாம் சரி, ரெகுலர் கஸ்டமரான நாத் தனார்... அவங்க ஃப்ரெண்ட்ஸ் தவிர்த்து மத்தவங்ககிட்டயும் எப்படி கொண்டு போய் சேர்க்கறது?'னு யோசிச்சப்ப... ஃபேஸ்புக் கைகொடுத்துச்சு. என்னோட பேஜ்லயே டிரெஸ் மெட்டீரியல்ஸ், என்னோட ஷாப் பத்தி சூப்பர் போட்டோஸ் வித் டீடெய்ல் ஸோட தகவல்களை அப்டேட் பண்ணி னேன். அதை பார்த்துட்டு நிறைய கஸ்ட மர்ஸ் வர ஆரம்பிச்சாங்க. அது தந்த ஊக் கத்துல 'சாயாஸ் பொட்டிக்’ பேர்லேயே ஃபேஸ்புக் பேஜ் கிரியேட் பண்ணினேன். அதுலயும் செம ரெஸ்பான்ஸ்.

அடுத்தகட்டமா, எங்க ஏரியாவுல எனக் குப் பழக்கமான லேடி டெய்லர் மீனாகிட்ட என்னோட கலெக்ஷன்ஸை கொடுத்து, கமி ஷன் அடிப்படையில வித்து தர சொன் னேன். அதிர்ஷ்டக் காத்து அடிக்க ஆரம் பிச்சுது. மீனா, எல்லாத்தையும் வித்து கொடுத்ததுல நல்ல வருமானம். அவங்களுக் கும் பிசினஸில் லாபம். அதனால, நாங்க திக் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்'' என்ற யாமினி, அடுத்துச் சொன்னது பிசினஸ் சூட்சமம்!

''கடை, கலெக்ஷன்ஸ் எல்லாமும் பர்ஃபெக்டா இருந்தாலும்... பர்ச்சேஸ் பண்ண வர்றவங்க மனசை படிக்கிறதுதான் பெஸ்ட் சீக்ரெட். கடைக்கு வர்ற கஸ்ட மர்ஸ் சிலர், வந்த வேகத்திலேயே செலக்ட் பண்ணிட்டு போயிடுவாங்க. சிலர் தயங்கி நின்னு என்கிட்ட ஐடியா கேட்பாங்க. நூறு சதவிகிதம் அவங்களுக்குப் பொருத்த மானதை மட்டும் சொல்வேன். இன்னும் சிலர் பார்த்துட்டே இருப்பாங்க. பக்கத்துல வந்து மென்மையா அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுவேன். அவங்களுக்குப் பொருத்த மான கலர், டிசைன், விலைனு எல்லாத்தை யும் தேர்ந்தெடுத்து கொடுப்பேன். இது மாதிரியான அப்ரோச்... அவங்களுக்கெல்லாம் ரொம்ப புடிச்சு போய், ரெகுலர் கஸ்ட மர் ஆகிடுவாங்க'' என்று சொல்லிச் சிரித்தார்.

நிறைவாக பேசிய யாமினி, ''வரவு, செலவு, லாபம் எல்லாத்தையும் ஆரம்பத்துல இருந்தே கவனமா கணக்கெடுக்கணும். ஏன்னா... ஒரு தடவை லாபம் கிடைச்சதும், அந்த பணத்தையெல்லாம் வீட்டுத் தேவைக்காக செலவு பண்ற பழக்கம் பலர்கிட்டயும் இருக்குது. குறைஞ்சது ஏழு மாசம் வரைக்கும் கிடைக்கற லாபத்தையெல்லாம் பிசினஸ்ல போட்டு, கவனமா கண்காணிச்சா... சூப்பர் லாபம் ஈட்டலாம். உதாரணத்துக்கு, ஆரம்பத்துல குறைந்தபட்சம் 2 லட்ச ரூபாய் போட்டு ஆரம்பிச்சா, எட்டு மாசம் கழிச்சு மாசம் ஐம்பதாயிரம் வருமானம் கண்டிப்பா கிடைக்கும்'' என்றார் உத்தரவாதமான வார்த்தைகளில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism