தொலைபேசியில் கார்டு எண்ணை சொல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்.

கிரெடிட் கார்டு என்பது ப்ளாஸ்டிக் வடிவில் இருக்கும் பணம். அதைத் தவறவிடுவது நிறைய பணத்தை இழப்பதற்கு சமம். கிரெடிட் கார்டுகளை எப்படி உஷாராக வைத்திருப்பது என்று சென்னையிலுள்ள திஷா நிதி ஆலோசனை மையத்தின் முதன்மை ஆலோசகர் எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்!

1. கடன் அட்டையின் CVV எண்ணை தொலைபேசி மூலமாகவோ இ-மெயில் மூலமாகவோ யாருக்கும் தெரிவிக்கக் கூடாது. ரயில் / விமான டிக்கெட்கள் பதிவு செய்ய, அதன் ஏஜென்சிகள் CVV எண்ணைக் கேட்டால் தெரிவிக்கக் கூடாது.

2. கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்போது, அதாவது ஸ்வைப் செய்யும்போது உடன் இருந்து கண்காணிக்கவேண்டும். ஒருதடவை ஸ்வைப் செய்கிறார்களா அல்லது அதற்குமேல் ஸ்வைப் செய்கிறார்களா எனவும், வங்கியின் ஸ்வைப் மெஷின் தவிர, வேறு மெஷினில் ஸ்வைப் செய்கிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

3. கடைகளில் உபயோகிக்கும் போது முடிந்தவரை உங்கள் கண்ணெதிரிலேயே பயன்படுத்தப்படுகிறதா என்று கவனிக்கவும். உபயோகித் தவுடன் கார்டை திரும்பப் பெற்றுக்கொள்ளவும். கார்டு தங்களுடையதுதானா என்று சரி பார்த்துக்கொள்ளவும்.

4. தொலைபேசியில் கார்டு எண்ணை சொல்லும்போது எச்சரிக்கையாக இருங்கள். நிறுவனம் என்றால் எழுத்து மூலம் கேட்கச் சொல்லுங்கள்.

5. உங்களைப் பற்றிய தகவலுக்காக அடையாள அட்டையைக் கோரும்போது கிரெடிட் கார்டை நீட்டாதீர்கள்.

6. உங்கள் கார்டை யார் பயன்படுத்துகிறார்கள் என்று பாருங்கள். உங்கள் குடும்பத்தில் மனைவி, பிள்ளைகள், பெற்றோர்கள், நண்பர்கள் ஆகியோர் உங்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ பயன்படுத்தினால்கூட வாங்கியப் பொருட்களுக்கோ எடுத்த பணத்துக்கோ நீங்களே பொறுப்பேற்க வேண்டும்.

7. கடன் அட்டையை உயர்த்தி, ப்ளாட்டினம் கார்டாக மாற்றித்தருகிறோம் என தொலைபேசி மூலமாகவோ, இ-மெயில் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வந்து கடன் அட்டையின் விவரங்கள் அனைத்தையும் கேட்டாலோ அல்லது கடன் அட்டையைக் கேட்டாலோ, எந்தக் காரணத்தைக் கொண்டும் கொடுக்கக்கூடாது. இதனால் நிச்சயம் கடன் அட்டை பயனாளருக்கு பிரச்னைதான். எந்த ஒரு வங்கியும் இப்படி ஆட்களை அனுப்பி விவரங்களைக் கேட்க மாட்டார்கள்.

8. கடன் அட்டை வழங்கும் வங்கிகள், கடன் அட்டையோடு இன்ஷூரன்ஸ் பாலிசியையும் எடுக்க வற்புறுத்தலாம். அதேசமயம், நமக்கு அது தேவையா, அதன் விதிமுறைகள் என்னென்ன, பிற்பாடு ப்ரீமியம் கட்டவேண்டி இருக்குமா என்று தெரிந்துகொள்வது அவசியம். பாலிசி ப்ரீமியம் தொகையை கடன் அட்டையில் பற்றுவைத்து செலுத்துவதாக இருந்தால் அந்த வசதியைத் தவிர்ப்பது நல்லது.

தொகுப்பு: செ.கார்த்திகேயன்.

படம்: எம்.உசேன்.

மோசடிகளைத் தவிர்க்க..!

மோசடிகளைத் தவிர்க்க சில தனியார் வங்கிகள் கிரெடிட் கார்டுகளில் சிப் மற்றும் எல்இடி திரை போன்ற பாதுகாப்பு அம்சங்களை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கின்றன. இந்த எல்இடி திரை கொண்ட கார்டுகள் 'கார்பன் கார்டுகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த கார்டில் எலெக்ட்ரானிக் கீபோர்டு பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் கிரெடிட் கார்டு பயனாளர்கள் அவர்களாகவே ஒன்டைம் செக்யூரிட்டி பாஸ்வேர்டுகளை உருவாக்கிக்கொள்ள முடியும். இதேபோல, ஒவ்வொருமுறையும் கிரெடிட் கார்டுகளை ஷாப்பிங் மற்றும் இதர தேவைகளுக்குப் பயன்படுத்தும்போது செக்யூரிட்டி எண்களை மாற்றிக்கொள்ளலாம். இந்தவகை கார்டுகள் தொலைந்துபோனால் அதை மாற்ற வழக்கமான கார்டுகளுக்கு இருக்கும் நடைமுறைகளே பொருந்தும். இந்தவகை கார்டுகள் அதிக பாதுகாப்புடன் விளங்குவதால் கிரெடிட் கார்டு பயனாளர்கள் மோசடி நபர்களால் ஏமாற்றப்படாமல் தப்பிக்கலாம்.