கிரெடிட் கார்டில் பலவிதமான வசதிகள் உண்டு என்றாலும், ரிவார்டு பாயின்ட் மற்றும் கேஷ்பேக் ஆஃபர்கள்தான் அதில் மிக முக்கியமானவை. இவற்றை சரியாக பயன்படுத்துவது எப்படி, இதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன என்பது குறித்து ப்ரீமியம் இதழின் ஆசிரியர் கே.நித்ய கல்யாணியிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

ரிவார்டு பாயின்ட்!

''பெரும்பாலான கிரெடிட் கார்டுகளில் ரிவார்டு பாயின்ட் என்பது கட்டாயம் இருக்கும். கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்போது இந்த ரிவார்டு பாயின்ட் கிடைக்கும். இதைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம். ரிவார்டு பாயின்ட் என்பது வாங்கும் பொருட்கள், ப்ராண்டு, வாங்கும் கடையைப் பொறுத்து வித்தியாசப்படும். அதாவது, குறிப்பிட்ட சில கடைகளில் குறிப்பிட்ட ப்ராண்டை வாங்கும்போது ரிவார்டு சில நேரத்தில் அதிகமாக இருக்கும். கிரெடிட் கார்டு நிறுவனங்கள் பரிந்துரைக்கும் கடைகளில் பொருட்களை வாங்கும்போது இப்படி நடப்பதற்கு வாய்ப்புள்ளது.

உதாரணமாக, 1,000 ரூபாய்க்கு கிரெடிட் கார்டு மூலமாக பொருட்கள் வாங்கும்போது 20 ரிவார்டு பாயின்ட் கிடைக்கும் என வைத்துக்கொள்வோம். அதே கார்டு நிறுவனம் பரிந்துரைக்கும் கடையில் வாங்கும்போது 40 பாயின்ட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இப்படி ஒவ்வொருமுறையும் பொருட்கள் வாங்கும்போதும் பாயின்ட்கள் உங்கள் கணக்கில் சேரும்'' என்றவர், இந்த பாயின்ட்களை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பது குறித்து அவரே தொடர்ந்து விளக்கினார்.

''இப்படி சேரும் பாயின்ட்களை குறிப்பிட்ட காலத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும் என விதிமுறை இருக்கும். அதற்குள் அந்த பாயின்ட்களை பயன்படுத்தி கிரெடிட் கார்டு நிறுவனத்தின் வெப்சைட்டில் கிடைக்கும் ஆஃபர்களில் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் அல்லது கிரெடிட் கார்டு நிறுவனம் சொல்லும் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த பாயின்ட்களை பணமாக மாற்ற முடியாது என்பது முக்கியமான விஷயம். பொதுவாக, ஒரு ரிவார்டு பாயின்ட் என்பது ஒரு ரூபாய்க்கு சமம் என்று கார்டு நிறுவனங்கள் சொல்லும். ஆனால், அதை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்போது ஒரு பாயின்ட்-க்கு ஒரு ரூபாய் தரமாட்டார்கள். அதற்கு பதிலாக 60 பைசா அல்லது 50 பைசாதான் கிடைக்கும் என சொல்வார்கள். ஒரு ரூபாய் என்பது ஒருசில கடைகளில் மட்டும்தான் கிடைக்கும். பிற கடைகளிளெல்லாம் குறைவான மதிப்புக்குதான் பொருட்கள் வாங்க முடியும். இதுதான் இதில் உள்ள பெரிய சிக்கல்.

இந்த பாயின்ட்களுக்கான மதிப்பை எப்போது வேண்டுமா னாலும் கிரெடிட் கார்டு நிறுவனம் கூட்டும் அல்லது குறைக்கும். இதை எதிர்த்து எந்தக் கேள்வியையும் யாரும் கேட்க முடியாது. ஏனெனில், இது ஒருவகையான கிஃப்ட்தான். இதை நீங்கள் காசு கொடுத்து வாங்கவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும், கிரெடிட் கார்டு நிறுவனம் கொடுக்கும் ஆஃபர் களில் நீங்கள் பொருட்கள் வாங்கத் தயாராக இல்லை. ஆனால், பெரிய ப்ராண்டு கடைகளில் வாங்கத் தயாராக இருந்தால், அதை உங்களின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவுக்கு தெரிவித்து அதற்கேற்ப கூப்பன்களை வாங்கிக் கொள்ளலாம். அதேபோல, அடிக்கடி விமானத்தில் பயணம் செய்பவர்கள் உங்கள் ரிவார்டு பாயின்ட்கள் முழுமையாக விமான டிக்கெட் வாங்குவதற்கு பயன்படுத்தும் வகையில் (மைல்களாக) மாற்றிக் கொள்ளலாம்.

கேஷ்பேக் ஆஃபர்!

கேஷ்பேக் ஆஃபர் என்பதில் ஒரு பொருளை விலை கொடுத்து வாங்கும்போது, அந்த விலையில் குறிப்பிட்ட சதவிகித தொகை நமக்கு திரும்பக் கிடைக்கும். பெரும்பாலும் பண்டிகைக் காலங்களில் மட்டும்தான் இந்தச் சலுகை கிடைக்கும்.

உதாரணமாக, 10,000 ரூபாய் மதிப்புள்ள பொருளை வாங்கும்போது அதில் 10% கேஷ்பேக் ஆஃபர் எனில், உங்களுக்கு 1,000 ரூபாய் திரும்பக் கிடைக்கும். அதேபோல, குறிப்பிட்ட கடைகளில் பொருட்கள் வாங்கும்போது சில பொருட்களுக்கு கேஷ் பேக் ஆஃபர் இருக்கும். ஆனால், கேஷ்பேக் ஆஃபரில் அதிகபட்சம் இவ்வளவு தொகைதான் என கட்டுப்பாடும் வைத்திருப்பார்கள். அதாவது, 20 சதவிகித கேஷ்பேக் ஆஃபரில் ஒரு லட்சம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொண்டால், உங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் ஆஃபர் கிடைக்கும்.

ஆனால், இதில் அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய்தான் கேஷ்பேக் ஆஃபர் என சொல்லி இருப்பார்கள். இப்படி கேஷ்பேக் ஆஃபரில் பொருட்கள் வாங்கும்போதும் ரிவார்டு பாயின்ட்கள் கிடைக்கும்'' என்றார்.

இந்த இரண்டுமே கூடுதல் வசதிகள்தான். தேவைக்கு பயன்படுத்தி லாபம் பார்ப்பது நம் புத்திசாலித்தனம்!

- இரா.ரூபாவதி,

படங்கள்: ர.சதானந்த்.

அதிகரித்த கடத்தல் தங்கம்!

நடப்புக் கணக்கு பற்றாக்குறை காரணமாக தங்கம் இறக்குமதி செய்வதற்கான வரியை இருமுறை மத்திய அரசாங்கம் உயர்த்தியது. இதனால், தங்கம் கடத்தல் பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது.

நடப்பு ஆண்டில் ஏப்ரல் - நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 73 கடத்தல் சம்பவங்களில் 125.71 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை வருவாய் புலனாய்வு துறை (DRI) கைப்பற்றியது. ஆனால், கடந்த வருடம் இதேகாலத்தில் 40 கடத்தல்களில் 44.80 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை மட்டுமே இந்தத் துறை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.