கல்விதான் மூலதனம்!

'2007-ல் ஒரு யூத் கான்ஃப்ரன்ஸ். அதுல என்னோட சேர்ந்து ஐந்து பேர் பேச வந்திருந்தாங்க. என்னை பேச அழைச்சப்ப, நான் படிச்சிருந்த அத்தனை டிகிரிகளையும் சொல்லி அழைக்க, உட்கார்ந்திருந்த மாணவர்கள் எல்லாரும் கைதட்டி ஆர்ப்பரித்தார்கள். 'நாம ரொம்ப நிறைய படிச்சிட்டோம்போல இருக்கே. இனிமே படிக்கவேணாம்னு’ அப்ப தோணிச்சு.

'கேரியர் சக்ஸஸ்’ங்கிற தலைப்பில பேசினேன். நான் பேசி முடிச்சவுடனே, என் பேச்சை கேட்ட ஒருவர், 'எக்ஸலன்ட்’ என்று பாராட்டினார். 'அட!’ என்று என்னை நானே பெருமைபட்டுக்கொண்டேன். 'என்னைப் பற்றி பேசறீங்களே, உங்களைப் பற்றி சொல்லுங்க’ன்னு சொன்னேன். 'நான் ஒரு சாதாரண பேராசிரியர்’ என்று அவர் தன்னை பற்றி சொல்ல, உடனே இடைமறித்த பிரின்சிபல், 'இவர் 27 கோர்ஸ் முடிச்சிருக்காரு. பல டிப்ளமோ, டிகிரிஸ், போஸ்ட் கிராஜுவேட் டிகிரிஸ், சர்ட்டிஃபிகேட்’ இன்னும் என்னமோ’ என்று சொல்ல, நான்தான் அதிகம் படிச்சவன்னு எனக்குள்ள இருந்த ஈகோ தவிடுபொடியாயிடுச்சு. அன்றைக்கு திரும்பவும் படிக்க ஆரம்பிச்சேன். இன்றைக்குவரை விடாம படிச்சுகிட்டே இருக்கேன்.

இந்தக் காலத்து பசங்க படிக்கறதுன்னாலே அய்யோன்னு அழுறாங்க. டிவியே கதின்னு கிடக்குறாங்க. ஆனா, புத்தகம் படிக்கிறதுல ஒரு லயிப்பு வந்துடுச்சுன்னா, அதை யாராலயும் எப்பவும் நிறுத்தவே முடியாது.

நீண்டநாளா தொடர்ந்து படிக்கிறவன் என்கிற முறையில நீங்களும் சளைக்காம படிக்க சில விஷயங்களைச் சொல்றேன். நீங்க எதை படிச்சாலும் அதைப் புரிஞ்சுகிட்டு படிச்சீங்கன்னா, போரே அடிக்காது. ஒரு விஷயத்தைப் புரிஞ்சு படிக்கிறது, கம்ப்யூட்டர்ல ஒரு ஃபைலை முழுக்க டவுன்லோடு பண்ணி, சுத்தபத்தமா அதை சேவ் பண்ணி வச்சுக்கிற மாதிரி! நமக்கு எப்பல்லாம் அந்த ஃபைல் தேவைப்படுதோ, அப்பல்லாம் அதை எடுத்து படிக்கலாம். புரிஞ்சுக்காம படிக்கிற விஷயங்கள் 'ஸ்பர்ம்’ மெயில்கள்போல, வந்ததும் போனதும் தெரியாமல் மறைந்து போய்விடும்.

இந்தக் காலத்து பெற்றோர்கள் தங்களோட குழந்தைகளை படி, படின்னு சொல்லிகிட்டே இருக்காங்க. ஆனா, எதை படிக்கறதுன்னு அவங்க சொல்லித்தர்றதில்லை. படிப்பு விஷயத்துல ஒவ்வொருத்தரோட தேவையும் ஒவ்வொருமாதிரி இருக்குது.

ஆனா, இன்றைய இளைஞர்கள் தங்களுடைய 'கேரியர்’ சம்பந்தமாக படிக்கிறது கட்டாயம். காரணம், படிப்பதே வேலைக்கு செல்வதற்குதான். அந்த வேலை பெறுவதற்கு நம்மை எப்படியெல்லாம் செம்மைபடுத்திக்கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

படிப்புக்கு எல்லையே கிடையாது. படிக்கணும்னு ஆசைப்பட்டுட்டா படிச்சுகிட்டே இருக்கலாம். இந்த 'டிகிரி’ வரைக்கும் படிச்சு முடிச்சிட்டா, நான் எல்லாத்தையும் முடிச்சுட்டேன்னு நம்மால மார்தட்டிக்க முடியாது. குறிப்பா, இந்தியாவைப் பொறுத்தவரையில், கல்வி ஒரு கடலாகவே இருக்கிறது. மதங்கள், அவை சார்ந்த நூல்கள், பல்வேறு காலகட்டத்தில் தோன்றிய மகான்களின் கருத்துகள். காலப்போக்கிற்கேற்ப வளர்ந்த இலக்கிய இலக்கணங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள், இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம். அத்தனையும் படிக்க நமக்கு வயது போதாது. எவ்வளவுதான் நாம் படித்தாலும், கற்றது கையளவாகத்தான் இருக்கப்போகிறது!

படிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி நான் உங்களிடம் இத்தனை தூரம் எடுத்துச் சொன்னபின்பு, உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். 'என்ன சார், படிக்காத மேதைகள் எவ்வளவோ பேர் இருக்காங்க? அவங்கல்லாம் சாதனை பண்ணலையா? காமராஜர் என்ன படிச்சாரு? நம்ம தோனி என்னத்தைப் பெரிசா படிச்சாரு? இன்றைக்கு படிச்சவங்கள்லாம் அவங்க பின்னாடிதான் போறாங்க’ன்னு நீங்க கேக்கலாம்.

கல்லூரியில் படித்து, பட்டம் வாங்குவது மட்டும் கல்வியல்ல. அனுபவமும் ஒரு கல்விதான். காமராஜர் கற்ற அனுபவங்களே அவருக்கு ஒரு பாடமாக அமைந்தது. அவர் பள்ளி சென்று படிக்கவில்லை என்றாலும், மெத்தப் படித்தவர் களை தன்னைச் சுற்றி வைத்திருந்தார். பலருடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இதனால்தான் தமிழகத்தில் பலருக்கும் கல்விக்கண் திறக்க காரணமாக இருந்தார்.

இன்றைக்கு சமூகத்தில் அனைவருக்கும் கல்வி என்பது மிக முக்கியம். கல்விதான், தகுந்த வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, பாதுகாப்பான நல்ல வசதியான வாழ்க்கையைத் தரும். கல்விதான், உங்களுடைய பொறுப்புகளை எப்படி கையாளவேண்டும் என்று சொல்லித்தரும்.

கல்விதான், நீங்கள் சொல்லும் வார்த்தைகளை மற்றவர்கள் கேட்டு, மதித்து நடக்க வைக்கும். கல்விதான், ஒரு விஷயத்தை வித்தியாசமான கோணத்தில் அணுகி, மற்றவர்களிடமிருந்து உங்களை உயர்ந்தவன் என்று வித்தியாசப்படுத்திக்காட்டும்.கல்விதான், உங்கள் திறமைகளை உங்களுக்கே அடையாளம் காட்டும்.

கல்விதான், நீங்கள் நினைத்ததைவிட அதிகமாக சாதிக்கத் தூண்டும். கல்விதான், புதிய நண்பர்களை உங்களுக்கு அடையாளம் காட்டும்.

கல்விதான், நடைமுறை யதார்த்தங்களையும், உலகம் அன்றாடம் எதிர்நோக்கும் வளர்ச்சிகளையும் புரிந்து கொள்ள உதவும். கல்விதான், உங்கள் தவறுகளை உணர்த்தும். மற்றவர்கள் தவறு செய்வதையும் கண்டுகொண்டு, அவர்களைத் திருத்தவும், நீங்கள் அதைச் செய்யாமலும் தடுக்கும்.

கல்விதான், தனிப்பட்ட வாழ்க்கையையும், பொதுவான வாழ்க்கையையும் நேர்மையாகவும், பிறர் மதிக்கும்படியாகவும் வாழ கற்று தரும்.

கல்வி என்பது தனிமனிதச் சொத்து அல்ல. அது பொதுச் சொத்து. விளக்கைப் பொத்தி பொத்தி வைத்தால், அதனால் எந்த பயனும் இல்லை.

அதுமாதிரி நாம் கற்ற கல்வியை எல்லோருக்கும் பயன்படுகிற மாதிரி ஆக்கவேண்டும். இல்லாவிட்டால் நாம் பெற்ற கல்வி வீண்தான். கல்வி கற்பதிலே தற்போது 'சர்வ சிக்ஷ£ அபியான்’னு ஒரு புதுமுறை வந்திருக்கு. அதன் கூடவே நாமும் பயணிச்சா, வெற்றி நிச்சயம்தான்.

(மேலே செல்வோம்)

படங்கள்: ர.சதானந்த்

டாடா - டெஸ்கோ கூட்டணி!

பிரிட்டனைச் சேர்ந்த டெஸ்கோ நிறுவனம் டாடா நிறுவனத்துடன் இணைந்து சில்லறை வர்த்தகத் தொழிலில் இறங்கப் போகிறது. இதற்காக டாடாவுக்கு சொந்தமான ட்ரெண்ட் ஹைபர்-மார்க்கெட் லிமிடெட் நிறுவனத்தின் 50 சதவிகித பங்குகளை சுமார் 620 கோடி ரூபாய் தந்து வாங்கியிருக்கிறது டெஸ்கோ நிறுவனம். ட்ரெண்ட் ஹைபர்-மார்க்கெட் நிறுவனம் மும்பை, பெங்களூரு, அஹமதாபாத், சென்னை உள்பட நான்கு நகரங்களில் மொத்தம் 16 இடங்களில் சூப்பர் மார்க்கெட்களை நடத்தி வருகிறது.