Published:Updated:

அசத்தல் முதலீட்டு திட்டங்கள்!

60 வயது மேலானவர்களுக்கு...

சீனியர் சிட்டிஸன்கள் ரேட்டிங் இல்லாத கார்ப்பரேட் டெபாசிட்களில் முதலீடு செய்யவேண்டாம்!

##~##

றுபது வயது வரைக்குமான முதலீட்டுத் திட்டங்களைப் பற்றி அடிக்கடி நாணயம் விகடன் வாசகர்களுக்குச் சொல்லியிருக்கிறோம். பணி ஓய்வுபெற்று அறுபது வயதைத் தாண்டியவர்கள்  முதலீட்டுத் திட்டங்களை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ரிஸ்க் இல்லாத முதலீடுகள்!

பொதுவாக, இந்த வயதில் நிரந்தர வருமானம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். அந்த நிரந்தர வருமானத்தைத் தரக்கூடியது ஃபிக்ஸட் டெபாசிட்கள் மற்றும் பிற கடன் பத்திரங்கள் சார்ந்த உபகரணங்களாகும். வருமான வரி வரம்புக்குள் வராதவர்கள், தங்களின் மாதாந்திர அத்தியாவசியத் தேவைகளுக்கான தொகையை ஈட்டுவதற்கு கீழ்க்கண்ட உபகரணங்களில் முதலீடு செய்யலாம்:

1. வங்கி டெபாசிட்கள்.

2. AA மற்றும் அதற்குமேல் ரேட்டிங் கொண்ட கார்ப்பரேட் டெபாசிட்கள்.

3. AA மற்றும் அதற்குமேல் ரேட்டிங் கொண்ட என்சிடி-கள் (NCD – Non Convertible Debentures).

இந்தவகையான முதலீட்டாளர் களுக்கு ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு  குறைவாக இருப்பதால், மூலத்தில் வரிப் பிடித்தம் செய்வதை 15பி விண்ணப்பம் கொடுத்து, பிடிக்காமல் இருக்கச் செய்யலாம். இந்தவகையான விண்ணப்பத்தை வங்கிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் என்சிடி வெளியிடும் நிறுவனங்களிடம் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும். பல சிறிய வங்கிகள் சீனியர் சிட்டிஸனுக்கு கவர்ச்சியான வட்டி விகிதத்தைக் கொடுக்கின்றன. கீழே அட்டவணையில் கண்ட கார்ப்பரேட் டெபாசிட்களில் தங்களின் ஒருபகுதி முதலீட்டை சீனியர் சிட்டிஸன்ஸ் வைத்துக்கொள்ளலாம்.

அசத்தல் முதலீட்டு திட்டங்கள்!

ரேட்டிங் இல்லாத நிறுவனங்களில் முதலீடு செய்யவேண்டாம். அவ்வாறு செய்தால், யோசித்து முடிவெடுங்கள். பொதுவாக, நமது ரிசர்வ் பேங்க் மேற்பார்வைக்கு கீழ்வரும் நிறுவனங் களில் முதலீடு செய்வது நல்லது.

வருமான வரி செலுத்துபவர்களுக்கு வரி செலுத்தத் தேவையில்லாத அல்லது மிகவும் குறைவான வரி செலுத்தக்கூடிய பலவகையான கடன் திட்டங்கள் உள்ளன. அவற்றில் முதலீடு செய்யலாம். தற்போது சந்தையில் பல வகையான டாக்ஸ் ஃப்ரீ (Tax Free) பாண்டுகள் உள்ளன. இவை ஏறக்குறைய ஆண்டுக்கு 9% வரியில்லா வட்டியை வழங்குகின்றன. இந்த பாண்டுகளில் உள்ள ஒரே அசௌகரியம் – 10, 15, அல்லது 20 ஆண்டுகள் இதன் முதிர்வு காலமாகும். ஆனால், வட்டி வருடாவருடம் வழங்கப்படும்.

அசத்தல் முதலீட்டு திட்டங்கள்!
அசத்தல் முதலீட்டு திட்டங்கள்!

ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு நிகரான குறுகியகால முதலீட்டையும், அதேசமயத்தில் வரும் வருமானத்துக்கு குறைவான வருமான வரியையும் செலுத்த விரும்புபவர்கள் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் வெளியிடும் எஃப்.எம்.பி (FMP – Fixed Maturity Plans) திட்டங்களில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டங்கள் 12, 18, 24, 36 மாதங்களுக்கு வெளியிடப்படுகின்றன. ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு நிகரான வருமானத்தைத் தருகின்றன. அதேசமயத்தில், பணவீக்கத்தைக் கழித்து வருமானம் பார்க்கப்படுவதால், வருமான வரி மிகவும் குறைவாக அல்லது சில சமயங்களில் இல்லாமல்கூட இருக்கிறது.

எப்பொழுதும் தேவைப்படும் பணம்:

அறுபது வயதுக்கு மேல் உள்ளவர்கள் தங்களுக்கு திடீரென்று பணம் தேவைப்பட்டால் என்ன செய்வது என்று எப்பொழுதும் ஒரு கணிசமான தொகையை தங்களது வங்கி சேவிங்க்ஸ் கணக்கில் வைத்திருப்பார்கள். சேவிங்க்ஸ் கணக்குக்கு வருட வட்டி 4% ஆகும். மேலும், அதிகமான தொகை உங்களது சேவிங்க்ஸ் கணக்கில் இருப்பதைப் பார்த்துவிட்டு, பல வங்கிகள் உங்களை இன்ஷூரன்ஸ் திட்டங்களில் முதலீடு செய்யச் சொல்லி தொந்தரவு செய்வார்கள். அதற்கும் மேல் ஆன்லைன் மூலமாக திருட்டு ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு ஏற்பட்டால், இந்தியாவில் வங்கிகள் பொறுப்பு ஏற்றுக்கொள்வதில்லை.

ஆகவே, இந்தப் பிரச்னைகளை எல்லாம் தவிர்ப்பதற்கும், அதிக வருவாயை ஈட்டுவதற்கும், தேவைக்கு அதிகமாக இருக்கும் பணத்தை மியூச்சுவல் ஃபண்டுகள் நடத்தும் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் (Ultra Short Term Funds) முதலீடு செய்துகொள்ளுங்கள். இந்தத் திட்டங்கள் ஆண்டுக்கு தற்போது 8-9% வருவாயைத் தந்துகொண்டிருக்கின்றன. தேவைப்படுகிறபோது முழுவது மாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ எடுத்துக்கொள்ளலாம். எந்தவிதமான அபராதத் தொகையும் கிடையாது. வேண்டும் என்கிறபோது, வார நாட்களில், ஒரேநாளில் உங்கள் வங்கிக் கணக்குக்கு பணம் வந்துவிடும். முதலீட்டுக்கு உகந்த சில திட்டங்களை  முன்பக்கத்தில் கொடுத்துள்ளேன்.

அசத்தல் முதலீட்டு திட்டங்கள்!

ரிஸ்க் உள்ள முதலீடுகள்:

ரிஸ்க் எடுக்க முடிந்தவர்கள் மற்றும் நிலையான வருமானத்தை எதிர்பார்க்காதவர்கள், டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் (டிவிடெண்ட் ஆப்ஷனில்) முதலீடு செய்யலாம். சில நல்ல பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து டிவிடெண்டை வழங்கி வருகின்றன. ஃபிக்ஸட் டெபாசிட் வருமானத்துக்கு சமமாக இந்த டிவிடெண்ட் வருமானம் உள்ளது. அதுதவிர, உங்கள் முதலீடும், பங்குச் சந்தை வளர்ச்சியைப் பொறுத்து, ஓரளவு வளர்ந்துகொண்டிருக்கும்.

அசத்தல் முதலீட்டு திட்டங்கள்!

இதில் பெரிய கவர்ச்சி என்னவென்றால், வரும் டிவிடெண்ட்  டாக்ஸ் ஃப்ரீ ஆகும். ஒரு பைசாகூட வருமான வரி கட்டத் தேவையில்லை. ஆனால், இந்த டிவிடெண்டுக்கு எந்த ஃபண்டு நிறுவனமும் கேரன்டி தருவதில்லை. சட்டப்படி செய்யவும் கூடாது. மேலே சில நல்ல டிவிடெண்ட்  வருமானம் தொடர்ந்து தந்துகொண்டிருக்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை கொடுத்துள்ளேன். உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து முதலீடு செய்துகொள்ளுங்கள். அதேபோல், மாதந்தோறும் ஒரு சிறிய தொகை உங்கள் செலவுகள்போக மீதமாகும் என்றால், எஸ்ஐபி (SIP–Systematic Investment Plan) முறையில் இந்த ஃபண்டுகளில் மாதாமாதம் முதலீடு செய்துகொள்ளலாம்.

அசத்தல் முதலீட்டு திட்டங்கள்!

இந்தத் திட்டங்கள் ஒரு முடிவல்ல. நீங்கள் அலசினால் இன்னும் பல நல்ல திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கும். தேடி ஆராய்ந்து முதலீடு செய்யவும்.

செய்யக்கூடாத முதலீடுகள்:

மேற்சொன்ன இந்தத் திட்டங்களைத் தவிர, குறுகியகாலத்தில் பணத்தை இரட்டிப்பாகத்தரும் பொன்ஸி திட்டங்களில் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் தயவுசெய்து முதலீடு செய்யவேண்டாம். குறுகிய காலநோக்கில் செய்யப்படும் பங்குச் சந்தை முதலீடுகள் இவர்களுக்கு ஒத்துவராது என்பதால் அந்த ஆஃப்ஷனை நாடவேண்டாம். எஃப் அண்டு ஓ, கமாடிட்டி போன்றவற்றை பொழுதுபோக்காக நினைத்துக்கொண்டு இந்தப் பிரிவைச் சேர்ந்த சிலர் செய்து வருகிறார்கள். இதனால் உங்களது பலநாள் உழைப்பு போகிற இடம் தெரியாமல் மறைந்துவிடும், ஜாக்கிரதை! அதேபோல, அறுபது வயதுக்குமேல் இருப்பவர்களுக்கு ரியல் எஸ்டேட் முதலீடும் கூடாது!

அசத்தல் முதலீட்டு திட்டங்கள்!

60+ போர்ட்ஃபோலியோ:

உங்களின் போர்ட்ஃபோலியோவில் கடன் சார்ந்த, ரிஸ்க் இல்லாத நிரந்தர வருமானம் தரக்கூடிய திட்டங்கள் அதிக சதவிகிதத்தில் இருக்கட்டும். (உங்களிடம் பணம் நிறைய இருக்கிறது என்றால், நீங்கள் தாராளமாக ரிஸ்க் உள்ள முதலீடுகளில் அதிகமாக முதலீடு செய்யலாம்.) சார்ட்டில் கொடுக்கப்பட்டுள்ள வகையில் உங்கள் முதலீடுகளை வைத்துக்கொள்ளலாம்.

படம்: தே.தீட்ஷித்

சுற்றுலா!

உங்களது இளமைக்காலத்தில் ஓடிக்கொண்டிருந்திருப்பீர்கள். சுற்றுலா செல்ல உங்களுக்கு நேரமிருந்திருக்காது. ஆனால், இப்போதோ உங்களிடம் நேரத்துக்குப் பஞ்சமிருக்காது. உங்களின் குழந்தைகளைப் பார்க்கச் செல்வது, ஆன்மிக ஸ்தலங்களுக்குச் செல்வது, திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செல்வது என அடிக்கடி டூர் செல்லவேண்டியிருக்கும்.

இதற்காக உங்களுக்கு ஆகும் வருடாந்திர செலவை உத்தேசித்து, அதை 12ஆல் வகுத்து நாம் மேலே கூறிய அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் முதலீடு செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு வேண்டும்போது எடுத்து செலவு செய்துகொள்ளலாம்.