Published:Updated:

ஸ்டூடன்ட் பிசினஸ்மேன்!

பட்டையைக் கிளப்பும் பட்டணத்து பசங்க!

ஸ்டுடியோ மூலம் கிடைக்கும் பணத்தை, ஸ்டுடியோ வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்!

##~##

'படிக்கிற காலத்துல நாங்களே உழைச்சு நாலுகாசு பாக்குறோம்ல' என்று சொல்லி காலரைத் தூக்கி விடுகிறார்கள் சென்னை லயோலா கல்லூரியில் இறுதி ஆண்டு விஷுவல் கம்யூனிகேஷன் பயிலும் மாணவர்கள். அது எப்படி சாத்தியமானது என்று அவர்களையே கேட்டோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கார்த்திக் என்பவர் பேசும்போது, ''எட்டு நண்பர்கள் இணைந்து இந்த பிசினஸை ஆரம்பித்து நடத்தி வருகிறோம். மீடியா  மாணவர்களாகிய எங்களுக்கு அந்தத் துறை சார்ந்து ஏதேனும் உருப்படியாக செய்யவேண்டும் என்ற எண்ணம் உருவானபோது தான், ஸ்டுடியோ ஐடியா தோன்றியது.  ஒரு ஸ்டுடியோ தொடங்கி அதில் ஃபேஷன் போட்டோகிராஃபி, வெட்டிங் போட்டோகிராஃபி, ஆல்பம் வடிவமைத்தல், அனிமேஷன், எடிட்டிங் போன்ற விஷயங்களை மேற்கொண்டு பணம் சம்பாதிக்க முடிவு செய்தோம். அட நல்ல ஐடியாவா இருக்கேன்னு எல்லோரும் பாராட்டினார்கள். அதன் விளைவால் உருவானதுதான் இந்த 'தி எரொர் ஸ்டுடியோ.  

இந்த ஸ்டுடியோவை தொடங்கியதின் வேறொரு நோக்கம் தொழில் அனுபவத்தை வளர்த்துக் கொள்வதுதான். அது எங்களது தரத்தை உயர்த்தி நல்லதோர் மேடையை அமைத்துத் தரும் என்ற நம்பிக்கை யில்தான் தொடங்கினோம். படிப்பை முடித்து கலூரியைவிட்டு வெளியில் வரும்போது, படித்து முடித்ததற்கான சான்றிதழ்கள் மட்டும் இல்லாமல் தொழிலில் எங்களுக்கென்று தனி அங்கீகாரம் கிடைத்திருக்கும். அதை வைத்து இன்னும்இன்னும் எங்களை உயர்த்திக்கொண்டு முன்னேற்ற பாதையில் பயணிக்க முடியும்.

ஸ்டூடன்ட் பிசினஸ்மேன்!

படிக்கும் காலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து பார்க், பீச் என்று பொழுதை வீணாகக் கழிக்காமல் எங்களின் நேரத்தையும், திறமையையும் பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவதால் பலரும் ஊக்கப்படுத்துகிறார்கள். அதோடு எங்கள் உழைப்பின் மூலம் கிடைக்கும் லாபத்தை மிகப் பெரிய சொத்தாக நினைக்கிறோம்.

ஸ்டூடன்ட் பிசினஸ்மேன்!

அதனால், ஸ்டுடியோ மூலம் கிடைத்த பணத்தை, எங்கள் தனித் தேவைகளுக்காகச் செலவிடுவதில்லை. இப்போதைக்கு ஸ்டுடியோ பெயரில் அக்கவுன்ட் ஆரம்பித்து அதில் போட்டு வைத்திருக்கிறோம். அந்தப் பணத்தை ஸ்டுடியோ வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்'' என்றார் அவர்.

''தி எரொர் ஸ்டுடியோவை ஆரம்பிக்க பெரிய அளவில் நாங்கள் முதலீடு செய்யவில்லை. தொழிலை ஆரம்பிக்க முடிவு செய்ததும் முதலில் ஸ்டுடியோவின் பெயருடன் தொலைபேசி எண்ணை போட்டு விசிட்டிங் கார்டுகள் அடித்தோம். இதற்கான செலவுகளை நாங்களே கவனித்துக்கொண்டோம். எங்களின் பெற்றோர்கள் நாங்கள் தொடங்கி இருக்கும் இந்தத் தொழிலுக்கு சிறப்பாக ஆதரவு தந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆர்டர்களுக்கு தகுந்தாற்போல நல்ல வருமானமும் கிடைத்து வருகிறது. நாங்கள் பத்திரிகை வடிவமைத்தல், விசிட்டிங் கார்டு, போஸ்டர்ஸ்,  வெட்டிங் போட்டோகிராஃபி என தொழிலில் வளர்ந்து வருகிறோம்.  இப்போது கானா பாலாவின் பாடல் வீடியோவுக்காகவும் வேலை செய்து வருகிறோம்'' என்றார் டேவிட்.  

தங்களது படிப்பையும் ஸ்டுடியோவையும் சரிசமமாக நடத்தும் இந்தக் குழுவுக்கு தங்கள் வகுப்பின் லாஸ்ட் பெஞ்சே அலுவலகம். எனவே, ஸ்டுடியோவுக்காக ஓர் அலுவலகத்தை அமைப்பதையே தங்களது அடுத்தகட்ட நடவடிக்கையாக வைத்துள்ளனர் இந்த இளம் பிசினஸ்மேன்கள்!

-  அ.பார்வதி,

படம்: ஸ்டீவ்ஸ் சு.ராட்ரிக்ஸ்.

ஸ்டூடன்ட் பிசினஸ்மேன்!