Published:Updated:

பாதுகாப்பைப் பலப்படுத்தணும்!

ஃபைனான்ஷியல் ஹெல்த் செக் - அப்!

கடன் இல்லை என்பது ப்ளஸ்தான்; ஆனால் இன்ஷூரன்ஸ் பாலிசி, முதலீடுகள் இல்லை என்பது மைனஸ்!

##~##

விருதுநகரைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 27), அவரது மனைவியின் பெயர் தமிழரசி. பாண்டியராஜன் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஜூனியர் எக்ஸிக்யூட்டிவாக பணிபுரிகிறார். பிடித்தம்போக, மாதம் கைக்குக் கிடைப்பது 27,000 ரூபாய். மாதாந்திர செலவு 12,000 ரூபாய். இவரால் 15,000 ரூபாய் வரை சேமிக்க முடியும் என்கிறார். 30,000 ரூபாய் கடன் உள்ளது. அது இன்னும் இரண்டு மாதத்தில் முடிந்துவிடும். தமிழரசி இன்னும் ஓரிரு வருடங்களில் ஆசிரியர் வேலைக்குப் போகப் போகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பொதுவான கருத்து ஒன்று என்னவென்றால், கிராமங்களிலும், சிறு நகரங்களிலிருந்தும் வந்தவர்கள் பணத்தின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்து அதற்கேற்றாற்போல செலவு செய்கிறார்கள். நகரங்களிலும், வேலைவாய்ப்புக்காக அயல்நாடு சென்றவர்களும், பணத்தைத் தாறுமாறாக செலவு செய்கிறார்கள் என்பது வருந்தத்தக்க உண்மை. பாண்டியராஜன் அவராகவே இதுவரை மிக அழகாக தன்னுடைய ஃபைனான்ஷியல் விஷயங்களை ப்ளான் செய்து வந்துள்ளார். தேவையற்ற எதையும் செய்யவில்லை. இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கலாம். எல்லோரையும்போல வரும் சந்ததிக்கு சொத்து சேர்க்கிறேன் என்று நிறைய வீடு, மனை என முதலீடு செய்யவில்லை. அதேபோல, சொந்த ஊரில் வீடு உள்ளதால், தான் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமித்து  தொழிலதிபர் ஆகவேண்டும், நாலுபேருக்கு வேலை தரவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது அவருக்கு.

இதுவரை பாண்டியராஜனுக்கு பெரிய அளவில் எந்த கடனும் இல்லை. அதேபோல, இவர் எந்தவிதமான இன்ஷூரன்ஸ் பாலிசியோ அல்லது முதலீடோ செய்யவும் இல்லை. இவருக்கு விருதுநகரில் ஒரு ரெடிமேடு ஷோரூம் மற்றும் ஏற்றுமதியிலும் ஈடுபடவேண்டும் என்ற எண்ணமும் உள்ளது. அதற்கு நான்கு முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை இன்னும் ஐந்து வருடங்களில் அவருக்கு தேவைப்படுகிறது.

பாதுகாப்பைப் பலப்படுத்தணும்!
பாதுகாப்பைப் பலப்படுத்தணும்!

எதிர்காலத் தேவைகள்!

• குழந்தையின் கல்விக்கு இப்போதே ஒரு தொகையை ஒதுக்கவேண்டும்.

•  60 வயதில் ஓய்வுபெற வேண்டும்.

• சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும்.

ஃபைனான்ஷியல் ஹெல்த் செக்-அப் செய்துகொள்ள வந்திருக்கும் பாண்டியராஜனுக்குள் திருமணமாவதற்கு முன்பிருந்தே திருமணத்துக்குப்பின் வாழப்போகும் வாழ்க்கையைப் பற்றிய திட்டமிடல் இருந்ததை  நம்மால் தெள்ளத்தெளிவாக உணர முடிகிறது. இப்போதுதான் திருமணமாகி உள்ளது. எனவே, 19 ஆண்டுகள் குழந்தையின் கல்விக்காக எடுத்துக்கொள்ளலாம். டைவர்சிஃபைட்  மியூச்சுவல் ஃபண்டின் மூலம் மாதம் 2,000 சேமித்தால், 19 வருட முடிவில் 15% கூட்டு வட்டியில் 25.57 லட்சம் ரூபாய் கிடைக்கும், அது கண்டிப்பாக ஓரளவுக்குப் போதுமானதாக இருக்கும். அவர் சொந்தமாக தொழில் ஆரம்பிக்க டைவர்சிஃபைட்  மியூச்சுவல் ஃபண்டின் மூலம் மாதம் 8,000 சேமித்தால், ஐந்து ஆண்டுகளில் அவரால் ஏழு லட்சம் ரூபாய் சேர்க்க முடியும். அந்தப் பணம் அவருடைய தொழிலுக்கு முன்பணமாக எடுத்துக்கொள்ள முடியும்.

பாதுகாப்பைப் பலப்படுத்தணும்!
பாதுகாப்பைப் பலப்படுத்தணும்!

ஓய்வுக்காலத்துக்கு!

பாண்டியராஜன் இன்னும் 33 வருட முடிவில் ஓய்வுபெற நினைக்கிறார். அதற்கென அவர் டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டின் மூலம் மாதம் 2,000 சேமித்தால், அது 2.17 கோடி ரூபாய். இன்றைய நிலவரப்படி ஒருவரது ஆயுட்காலம் 80 என எடுத்துக்கொண்டால், அந்தப் பணம் இன்னும் 20 வருடம் தாக்குபிடிக்க வேண்டும். இவர் விருதுநகரில் செட்டில் ஆவதால், அந்தப் பணத்தைக்கொண்டு அவரால் அடுத்த 20 வருடத்தை ஓட்ட முடியும்.

மேலும், எல்லா பணமும் உடனடியாக தேவைப்படப் போவதில்லை. அதனால், 50% பணத்தை மியூச்சுவல் ஃபண்டு பேலன்ஸ்டு திட்டத்தில் போட்டால் அது அடுத்த 6 வருடங்களில் இருமடங்காக ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். பின்பு அதிலிருந்து பாதுகாப்பான முதலீட்டுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொள்ளலாம்.

பாதுகாப்பைப் பலப்படுத்தணும்!

தேவை இன்ஷூரன்ஸ்!

இவர் உடனடியாக டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கவேண்டும். அவருடைய தற்போதுள்ள சம்பாத்தியத்தைப் பார்க்கும்போது அவர் 50 லட்சத்துக்கு உடனடியாக டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கவேண்டும். அதற்கு மாதம் 600 ரூபாய், அதாவது வருடத்துக்கு 7,200 ரூபாய் ப்ரீமியம் கட்டவேண்டி இருக்கும். ஹெல்த் இன்ஷூரன்ஸ் குறைந்தது 3 லட்சம் ரூபாய்க்காவது எடுக்கவேண்டும். அதற்கு வருடம் 5,300 ரூபாய் ப்ரீமியம் கட்டவேண்டி இருக்கும்.

பாதுகாப்பைப் பலப்படுத்தணும்!

கைகொடுக்கும் மனைவி!

தமிழரசி ஆசிரியர் வேலைக்குச் சென்றால், குறைந்தபட்சம் 10,000 ரூபாய் கிடைக்கும். இந்தப் பணம், எதிர்காலத்தில் குழந்தையைப் பராமரிக்கவும், பாண்டியராஜனின் சொந்தத் தொழிலுக்கும் மிகவும் உதவியாகும். இந்த வருமானம் கிடைத்தால் பொருளாதார ரீதியாக பாண்டியராஜன் மிகவும் பாதுகாப்பான நிலையை உணருவார்.

பாதுகாப்பைப் பலப்படுத்தணும்!

ஃபைன். ஹெல்த் செக்-அப் ரிப்போர்ட்!

1. தேவை அறிந்து பொருட்களை வாங்குவது.

2. எல்லா செலவுகளையும் ஒரு சாஃப்ட்வேரில் குறித்துக்கொள்வதால்,  எதற்காக செலவு செய்கிறோம் என்பது எளிதாக தெரிந்துகொள்ள முடிகிறது. அதைவைத்து தேவையற்ற செலவுகளையும் தவிர்க்கிறார்.

3. மிகப் பெரிய விஷயம், கடன் இல்லாமல் இருப்பது. சென்னையில் செட்டிலாகப்போவதில்லை என்று தீர்மானித்திருப்பதால், வீட்டை வாங்கி இஎம்ஐ கட்டும் எண்ணத்தைத் தவிர்த்திருக்கிறார்.

4. இதுவரை கைக்கும் வாய்க்கும் சரியாக இருந்ததால், அவரால் எந்த ஒரு சேமிப்பையும் தொடரமுடியவில்லை. இப்போது திருமணம் ஆகிவிட்டதால் அதை உடனடியாக செய்யவேண்டும்.

5. தன்னுடைய சம்பாத்தியத்தில் 50% சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் மிகப் பெரிய விஷயம்.

பாதுகாப்பைப் பலப்படுத்தணும்!

ஃபைன். ஹெல்த் செக்- அப் ரேட்டிங்!

கட்டுப்பாடான செலவுகள், சரியான இன்ஷூரன்ஸ் பாலிசி, பரவலான முதலீடு, அடையக்கூடிய இலக்குகள், தற்போதுள்ள முதலீட்டுக் குணங்கள் அதன் செயல்பாடு, ரெகுலராக முதலீடு செய்யும் பண்பு முதலியவற்றைவைத்து இவருக்கு 75% மார்க் தரலாம்.

தொகுப்பு: - செ.கார்த்திகேயன்,

படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்.

பாதுகாப்பைப் பலப்படுத்தணும்!