Published:Updated:

எடக்கு மடக்கு

வங்கிகளுக்கு கஷ்டகாலம்!

##~##

வங்கிகளின் வாராக்கடன் பிரச்னை நம்ம பொருளாதாரத்தையே பயமுறுத்திக்கிட்டிருக்கு!

ல்லாருக்கும் ஏகாம்பரத்தோட பணிவான வணக்கத்தையும் புத்தாண்டு வாழ்த்துகளையும்  மொதல்ல சொல்லிக்கிறேன். இந்த வருஷம் தொடக்கத்துலயே எனக்கு ஒரு ஷாக் குடுத்திருச்சுங்க ரிசர்வ் பேங்கு. அந்த பேங்கு வெளியிட்ட 'ஃபைனான்ஷியல் ஸ்டெபிலிட்டி ரிப்போர்ட்டை’  பத்தி வர்ற செய்திகள், ரிசர்வ் வங்கி வெளியிட்ட வாராக்கடன் குறித்த டிஸ்கஷன் பேப்பர்ல இருக்கிற தகவல்களை எல்லாம் படிச்சுட்டு, பயந்துபோயி உக்கார்ந்திருக்கேங்க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வங்கிகளிடம் கடன் வாங்கியிருக்கிற கம்பெனிகள்ல பெரிய குரூப் ஏதாவது ஒண்ணு, 100 சதவிகிதம் திருப்பிக் கட்டறதுல ஃபெயில் ஆச்சுன்னா(!), வங்கிகளோட கேப்பிட்டல்ல 60 சதவிகிதம் காலியாயிடுமாம்.

சில வங்கிகளிலே ஒரேஒரு கடனாளிக்கு கடனா தந்திருக்கிற தொகையோட அளவு அந்த வங்கியோட மொத்த மூலதனத்தில் (கேப்பிட்டலில்) 25 சதவிகிதம் அளவுக்கு இருக்கலாமாம். ஒரு குரூப்புக்கு தந்த கடன் 25 சதவிகிதம் இருக்கலாமாம்.

வேகமா வளர்ற ஒரு பொருளாதாரத்துல இதெல்லாம் சகஜமுன்னு சொல்றாங்க. பொருளாதார வளர்ச்சியும், நாட்டுல எத்தனை குரூப்புகள் பிசினஸில இருக்குதுங்கிறதையும் வச்சுதான் இந்த அளவை நிர்ணயிக்க முடியும். வங்கிகளோட எண்ணிக்கையும், கேப்பிட்டலோட அளவும், தொழில் பண்ற குரூப்புகளோட எண்ணிக்கையும்தான் இந்த விகிதாசாரங்களை தீர்மானிக்குதுங் கிறாங்க! இப்படி எல்லாம் விளக்கம் தந்தாலும் இந்த விகிதாசாரங்கள் ரொம்ப பயமுறுத்துற மாதிரிதானே இருக்குது!  

இதையெல்லாம் பாக்குறப்ப நம்ம நாட்டுல வங்கிகளோட செயல்பாடு களை மாத்தவேண்டியிருக்குமோன்னு தோணுதுங்க. நம்மளை மாதிரியே நிலப்பரப்பையும் மக்கள்தொகையையும் அதிகமாக கொண்டதுவும், வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கண்டதுவுமான சீனாவை வங்கித் துறையிலே நம்மோட ஒப்பிட்டுப் பார்த்தா, நாம எங்கேயோ இருக்கோம், அவங்க எங்கேயோ இருக்காங்கன்னு தெளிவாத் தெரியுதுங்க.

எடக்கு மடக்கு

இந்தியாவுல ஆயிரம் கி.மீ. தூரத்துக்குள்ள கிட்டத்தட்ட 30 பேங்கு பிராஞ்சும் 25 ஏடிஎம்மும் இருக்குது. இதே தூரத்துக்கு சீனாவுல 1,428 பேங்கு பிராஞ்சும்,  2,975 ஏடிஎம்மும் இருக்குதாம். இந்தியாவுல ஒரு லட்சம் பேருக்கு கிட்டத்தட்ட 10 பேங்க் பிராஞ்சும் 9 ஏடிஎம்மும் இருக்குது. ஆனா, சீனாவுல இதே லட்சம் பேருக்கு 24 பேங்க் பிராஞ்சும், 49 ஏடிஎம்மும் இருக்குது.

'டேட்டா ஓவராப்போகுதே’ங்கிறீங்களா? இன்னும் ஒண்ணே ஒன்ணை சொல்லிமுடிச்சுடறேன். இந்தியாவுல வங்கியில இருக்கிற டெபாசிட்டை ஜிடிபியோட ஒப்பீடு செஞ்சா, அது ஜிடிபியில 68 சதவிகிதமும், கடன் தந்த அளவை ஒப்பீடு செஞ்சா, அது 51 சதவிகிதமும் இருக்குது. இதுவே சீனாவுல, டெபாசிட் ஜிடிபி மாதிரி 434 சதவிகிதமும், கடன் 288 சதவிகிதமும் இருக்குது.

இன்னும் நிறையவே நம்ம வங்கிக வளரணுமுன்னு நீங்க பெருமூச்சு விடுறது எனக்குக் கேட்குது. வங்கிகளும் வளரணும், வங்கிகளோட எண்ணிக்கையும் வளரணும். இத்தனை மக்கள் இருக்கற இந்த நாட்டுல பேங்குகளோட எண்ணிக்கை அதிகரிக்கணுமுன்னா நிறைய முதலீடு தேவைப்படும். பெரிய பெரிய கார்ப்பரேட் குழுக்கள்கிட்டதான் அந்த அளவு கேப்பிட்டல் இருக்குது. ஆனா, பெரிய நிறுவனங்களும் புதிய வங்கிக்கு லைசென்ஸ் வாங்க ஆர்வம்காட்ட மாட்டேங்குறாங்க.

இன்றைய லெவல்ல வங்கிகளோட மொத்தக் கடனுல 70 சதவிகித கடன் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் தந்ததாத்தான் இருக்குது. சமீபத்துல ரிசர்வ் பேங்க் சொன்ன மற்றும் ஆலோசனை கேட்ட சில விஷயங்களைப் பார்த்தா, வங்கிகள் வருமுன் காப்போமுன்னு வாராக்கடனை முன்னாடியே தெரிஞ்சு நடவடிக்கை எடுக்கறதுக்கான சட்டதிட்டங்களும் ஏமாத்த நினைக்கிற கடனாளிங்களுக்கு கஷ்டகாலமும் வரப்போற மாதிரி தெரியுதுங்க. எழுபது சதவிகித கடனை நிர்வகிக்கிறதுக்கு உண்டான திறனும், கூட்டமாப்போய் ஒரே செக்டாருல சிக்காம இருக்கறதுக்கு உண்டான புத்தியும், தைரியமும்தாங்க பப்ளிக் செக்டார் பேங்குகளுக்கு ரொம்பவே தேவைப்படறாப்போல தெரியுது.

இந்த இரண்டையும்  இன்றைக்கு இருக்கிற சூழல்ல சட்டம்போட்டும், திட்டம்போட்டும் கொண்டுவர முடியாது. பேங்குல முக்கிய பொறுப்புல இருக்கிறவங்க உணர்ந்து நடந்துக்கணும். ஏன்னா வங்கிகள்தானேங்க பொருளாதாரத்தோட மூச்சுக்காத்து! என்ன, நான் சொல்றது சரிதானே?