Published:Updated:

உனக்கும் மேலே நீ!

இளைஞர்களே சிந்தியுங்கள், செயல்படுங்கள்!

உனக்கும் மேலே நீ!
##~##

நம்முடைய இலக்குகள் தெளிவாக இருந்தால் வெற்றிக்கனியை  சுலபமாக நாம் எட்டிப்பறிக்க முடியும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வாழ்க்கைத் தீர்மானங்கள்!

ல புது இலக்குகள், புது மாற்றங்கள், புதுத் தீர்மானங்களோடு புத்தாண்டை தொடங்கியிருப்பீங்க. ஒவ்வொரு வருடமும் ஆரம்பத்திலேயே சில தீர்மானங்களைப்போட்டு வாழ்க்கையை ஆரம்பிச்சா, கண்டிப்பா கொஞ்சமாவது நல்லது நடக்கும் என்பது என் அனுபவம்.

'அட, என்ன வாழ்க்கைப் போங்க!’ - இப்படி சலிச்சுக்கிற பலபேரை பார்த்து நான் ஆச்சர்யப்பட்டுப் போயிருக்கேன். 'அப்படி என்னங்க சலிப்பு?’ன்னு நான் அவங்களை சலிச்சுக்குவேன். 'சார், பால் பாக்கெட் கிடைக்கலை. நான் பஸ்ஸை பிடிக்கிறதுக்குள்ள போயிடுச்சு. பொண்டாட்டி கோவிச்சுகிட்டா. குழாய்ல தண்ணி வரலை’ - இப்படி பல காரணங்களைச் சொல்வாங்க. 'இதெல்லாம் இன்றைக்கு ஒருநாளைக்கு நடந்த விஷயங்கள்தானே! நாளைக்கும் இதேமாதிரி நடக்காதே! பிறகு ஏன் இவ்வளவு சலிச்சுக்கிறீங்க’ன்னு கேட்டா, சரியா பதில் சொல்ல முடியாம தவிப்பாங்க.

உனக்கும் மேலே நீ!

வாழ்க்கையில கொஞ்சம்கூட சலிச்சுக்காம உற்சாகமா வாழ்றதுக்கு சில வழிகளைச் சொல்றேன். இந்த வழிகளை வாழ்க்கைத் தீர்மானங்களா ஏத்துகிட்டீங்கன்னா, நிச்சயமா இனி நீங்க சலிச்சுக்கமாட்டீங்க.

1. உங்க அன்றாட வாழ்க்கையை சுயபரிசோதனை பண்ணிப்பாருங்க. வீணடித்த நிமிஷங்களை எண்ணிப் பாருங்க. ஒரு நிமிஷத்துக்குள்ள ஒண்ணும் பண்ண முடியாதுன்னு  நெனைச்சுகிட்டு பல நிமிஷங்களை நாம் தினமும் வீணடிக்கிறோம். ஒரு நிமிஷத்துல ஒரு டம்ளர் தண்ணி குடிக்கலாம்; ஷூ லேஸ் போடலாம்; ரெண்டு பாத்திரம்  கழுவலாம். இப்படி ஒவ்வொரு வேலையையும் சோர்வில்லாம செஞ்சா, நீங்க எந்த விஷயத்துக்காகவும் சலிச்சுக்க வேண்டிய அவசியமே இருக்காது!  

2. சிலருக்கு எப்பப் பார்த்தாலும் தூக்கம்தான். நேரம் காலம் தெரியாம தூங்கற கூட்டத்துல நீங்களும் ஒருவரா..? முதல்ல, அதை மாத்துங்க. சரியான நேரத்தில் படுத்து, சரியான நேரத்தில் எழப் பழகுங்க. சராசரியா 6 மணி நேரம் நல்லா தூங்கினா போதும்.

3. வாழ்க்கையை 'பாசிட்டிவ்’வா பாருங்க. நம் மனம் ஒரு கண்ணாடி. நீங்க என்ன செய்றீங்களோ, அதுதான் பிரதிபலிக்கும்!

4. உங்களைச் சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கோங்க. அக்கம்பக்கம் இருக்கிறவங்களோட நல்லா பழகுங்க. அப்டேட்டா இருப்பீங்க. எது எப்படிப்போனா எனக்கென்னன்னு நீங்க தனியா நின்னா, உலகம் ஒதுக்கிவச்சிடும்.  

5. வாழ்க்கையை அனுபவியுங்க. ஆனா, சந்தோஷத்துக்கும் ஒரு வரைமுறை வச்சுக்குங்க. மகிழ்ச்சியா இருக்கிறது வேற; மது அருந்தினாதான் சந்தோஷமா இருக்கமுடியும்னு நினைக்கிறது வேற. எது உண்மையான சந்தோஷம்னு தெரிஞ்சுக்குங்க.  

6. 'இம்ப்ரஸிவ்’வா டிரெஸ் பண்ணுங்க. உங்களை முதல் மதிப்பீடு செய்யும் புற விஷயங்களில் உடைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காலத்தில் வாழ்கிறோம் என்பதை மறக்காதீங்க.

7. உங்க பர்ஸ்ல எவ்ளோ காசு இருக்குங்கறது உங்களுக்குத் தெரியணும். நிறைய பேருக்கு இந்த சின்ன விஷயம் தெரியலை. இதனாலேயே அவங்க நிறைய பணம் செலவு பண்றாங்க. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு நம்ப 'கன்ட்ரோல்’ல இருந்தா சந்தோஷம். இல்லன்னா, பணத்தோட கன்ட்ரோல்ல நாம போயிடுவோம்.

8. இன்றைய முதல் செலவு சேமிப்பா இருக்கட்டும்னு நினைங்க. பத்து ரூபாய் கையில இருந்தா 1 ரூபாய் சேமிப்புக்கு ஒதுக்குங்க. 100 ரூபாய் இருந்தா, 10 ரூபாய் சேமியுங்க. 1,000 ரூபாய் இருந்தா 100 ரூபாய் சேமியுங்க.

9. உறவுகளோட பலத்தைப் புரிஞ்சுக்கோங்க. எல்லாருடனும், சகஜமா பேசற பழக்கத்தை ஏற்படுத்திக்குங்க. சிலபேர் ஓர் இடத்துக்கு வந்தா... அந்த இடமே நல்ல சந்தோஷத்தைக் கொடுக்கும். சிலபேர் அந்த இடத்தை விட்டுட்டு போனாதான் அடுத்தவங்களுக்கு சந்தோஷமே வரும். இதுல நீங்க எந்த ரகம்னு பார்த்துக்குங்க.

10. ஈடுபடும் காரியத்தில் 100 சதவிகிதம் உங்க கவனம் இருக்கட்டும். வீட்ல இருக்குறப்ப ஆபீஸைப் பற்றி நினைக்காதீங்க. அதேமாதிரி ஆபீஸ்ல இருக்குறப்ப வீட்டு ஞாபகம் வேண்டவே வேண்டாம்.  

11. எப்பவும், ஏதாவது புதுசா கத்துக்கணுங்கிற மனப்பக்குவத்தை வளர்த்துக்குங்க. கத்துக்கணும்னு நாம முடிவு பண்ணிட்டா, குழந்தைக்கிட்டகூட கத்துக்கலாம்.

12. நடந்ததைப் பற்றியே நினைக்காம, நடக்கப் போறதைப் பற்றி பயப்படாம, நடந்துகிட்டு இருக்கறதை நல்ல எண்ணத்தோட செய்து உங்க முழுஆர்வத்தையும் காண்பிச்சா, அந்தக் காரியம் வெற்றி பெறுவதோடு, உங்கள் வாழ்க்கையும் ஜொலிக்கும்.

13. உங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஏதாவது ஒரு விஷயத்தை ஒரு பத்து நிமிஷமாவது தினமும் செய்யுங்க. அது நல்ல அதிர்வுகளை உங்களுக்குள்ளே உருவாக்கும்.

இதையெல்லாம் நீங்க தொடர்ந்து செஞ்சுகிட்டே வாங்க, பிறகு வாழ்க்கையிலாவது, சலிப்பு ஏற்பட்றதாவது!

(மேலே செல்வோம்)

பதவி விலகும் வினிதா!

பிரிட்டானியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநனராக இருந்த வினிதா பாலி வருகிற மார்ச் மாதத்தில் பதவியிலிருந்து விலக உள்ளார். இவரது பதவிக் காலம் 2016-ல் முடிவடைய உள்ள நிலையில், உயர்ந்த பதவிகளுக்கு புதியவர்கள் வரவேண்டும் என்கிற நோக்கத்தில்தான் இந்த பதவியிலிருந்து விலக நினைக்கிறாராம். இந்தப் பதவியிலிருந்து விலகியபின்னர் லாபநோக்கம் இல்லாத தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்பட விரும்புகிறாராம் வினிதா. சபாஷ் மேடம்!