Published:Updated:

ஸ்டூடன்ட் பிசினஸ்மேன்

இசைப் பள்ளியே என் இலக்கு! கட்டுரை, படங்கள்: லோ.இந்து

##~##

மாதம் 3,000 ரூபாய் வரை வருமானம் வருகிறது. இதிலிருந்து என் செலவுகள்போக மாதம் 1,000 ரூபாய்ச் சேமிக்கிறேன்!''

மாலை ஆறு மணிக்கு அந்த வீட்டை நெருங்கினால் ஒரே இசைமயமாக இருக்கிறது. அந்த ரம்மியமான சூழலில் நான்கைந்து மாணவர்கள் அழகாக கீபோர்டு கற்றுக்கொள்கிறார்கள். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டே பகுதி நேரமாக மாணவர்களுக்கு கீபோர்டு க்ளாஸ் எடுக்கிறார் பிலிப் தேவதாஸ் பாண்டியன். அவருடன் பேச ஆரம்பித்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'எங்க வீட்டுல எல்லாருக்குமே மியூசிக்ல ரொம்பவே இன்ட்ரெஸ்ட். சின்ன வயசுலருந்தே எப்பவும் எங்க வீட்டுல வெஸ்டர்ன் ஸாங்க்ஸ் ஓடிக்கிட்டே இருக்கும். என்னோட அண்ணன் பிரின்ஸ்தான் எனக்கு மியூசிக் மேல ரொம்ப இன்ட்ரெஸ்ட் வர முக்கியக் காரணம். நான் ரெண்டாவது படிக்கிறது முதல் எட்டாவது படிக்கிறது வரை கீபோர்டு மேல இன்ட்ரெஸ்ட் எடுத்துத் தனியா கத்துக்கிட்டேன். அதுக்கப்புறம் சர்ச், ஸ்கூல்னு கொஞ்சம் கொஞ்சமா கீபோர்டு வாசிச்சு நிறைய கத்துக்கிட்டேன். நான் காலேஜ் செகண்டு இயர் படிக்கும்போது எங்க அம்மா தவறிட்டாங்க. அதுக்கப்புறம் எனக்கும், என்னுடைய எல்லா விஷயங்களுக்கும் ரொம்ப சப்போர்ட் பண்றது எங்க அப்பாதான்.

அம்மா இல்லாம நான் கஷ்டப்படுறதைப் பார்த்து என் மனசை திசைதிருப்புறதுக்காக என்னோட அக்கா ரோஸ்லின் மீனா கொடுத்த ஐடியாதான் இந்த கீபோர்டு க்ளாஸ். அவங்க எடுக்குற ட்யூஷனுக்குப் படிக்கவர்ற பசங்களுக்கு என்னை கீபோர்டு க்ளாஸ் எடுக்கச் சொல்லி வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தாங்க. முதல்ல காசு வாங்காம சும்மா ஒரு பொழுதுபோக்காகத்தான் க்ளாஸ் நடத்திட்டு இருந்தேன். அதுக்கப்புறம் இதையே நாம ஏன் ஒரு பிசினஸ் மாதிரி பண்ணக்கூடாதுன்னு தோணுச்சு. கீபோர்டு க்ளாஸுக்கு வர்ற ஒரு ஸ்டூடன்ட்கிட்ட 500 ரூபாய் ஃபீஸ் வாங்குறேன். இப்ப என்கிட்ட ஆறு பசங்க படிக்கிறாங்க. அவங்களும் ஆர்வமா கத்துக்கறதால இன்னும் அவங்களுக்கு நெறைய கத்துத் தரணும்னு ஆர்வம் எனக்குள்ள அதிகமாயிட்டே இருக்கு'' என்றார்.

ஸ்டூடன்ட் பிசினஸ்மேன்

இவர், இவரிடம் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி அல்லது கல்லூரி விடுமுறை இருக்கும் சமயத்தில் கீபோர்டு பற்றிப் பாடம் எடுக்கிறார். சனி, ஞாயிறு என்று ஒரு மாதத்துக்கு எட்டு வகுப்புகள் எடுக்கிறார் பாண்டியன்.

''இந்த கீபோர்டு க்ளாஸ் எடுக்குறதுனால ஹாலிடேஸ்ல ஃப்ரெண்ட்ஸ்கூடப் படத்துக்கும், வெளியே வேற இடங்களுக்குப் போய் அவ்வளவா என்ஜாய் பண்ண முடியாதுன்னாலும், பசங்களுக்குக் கீபோர்டு க்ளாஸ் எடுக்குறதும் மியூசிக் தர்ற சந்தோஷமும் அலாதிதான்.

இப்ப ஒரு மாசத்துக்கு 3,000 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கிறதுனால என்னோட செலவை நானே பார்த்துக்குறேன். அதோட இல்லாம நாங்க வச்சு நடத்துற 'குட்ஈவ்னிங்’ ஆண்களுக்கான துணியகத்தையும்

நானும் என் அண்ணனும் சேர்ந்து பார்த்துக்குறோம். அங்க வர்ற கஸ்டமர்ஸ் எல்லாம் அவங்க பசங்களுக்கும் கீபோர்டு க்ளாஸஸ் எடுக்கச் சொல்லி என்கிட்டக் கேட்டுட்டே இருக்காங்க. அதனால இந்த கீபோர்டு க்ளாஸ்ஸ அப்படியே விட்டுடாம இதை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தும் முயற்சியில இருக்கேன்.

ஸ்டூடன்ட் பிசினஸ்மேன்

இதுவரைக்கும் இந்த கீபோர்டு க்ளாஸ் மூலமா நான் சேர்த்து வச்ச பணத்தோட கொஞ்சம் பணம் சேர்த்து முதலீடா போட்டு அதன் மூலமா இன்னும் பெரிசா ஒரு மியூசிக் ஸ்கூல் ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். எனக்கு ஏ.ஆர். ரஹ்மான்தான் ரோல்மாடல். அவர் மாதிரி பெரிய இசையமைப்பாளரா வரணும்னு ஆசை.

நாங்க ஆரம்பிக்கிற ஸ்கூல்ல மியூசிக் மட்டும் இல்லாம போட்டோகிராஃபி, இங்கிலீஷ் ஸ்கில்ஸ்னு இன்னும் நிறையவே சொல்லித்தரப் போறோம்'' என்றவர், பார்ட் டைமாக கீபோர்டு சொல்லித் தருவதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து தன் செலவுகளைத் தானே செய்துகொள்கிறார். தனக்குக் கிடைக்கும் 3,000 ரூபாய் வருமானத் திலிருந்து செல்போன், பஸ் பாஸ், கல்லூரிக் கட்டண செலவுகள் மற்றும் சர்ச்சு காணிக்கை போக, 1,000 ரூபாய் சேமிக்கிறார் பாண்டியன். அட என்று அவரை மனதாரப் பாராட்டிவிட்டு கிளம்பினோம்.

ஸ்டூடன்ட் பிசினஸ்மேன்