ஓர் அழைப்பு மணி செய்யத் தேவையான உதிரிபாகங்கள் ரூ.50-க்குள் வாங்கிவிடலாம்.

அழைப்பு மணி என்பது இன்றைக்குச் சாதாரண வீடுகளில்கூட அவசியமான ஒரு பொருளாகிவிட்டது என்பதால், இதைச் சந்தைப்படுத்துவதில் சிக்கல் இல்லை. எலெக்ட்ரானிக்ஸ் படித்தவர்கள் மட்டும்தான் இந்தத் தொழிலை செய்யமுடியும் என்பதில்லை. பயிற்சியும் அனுபவமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் இதை வெற்றிகரமாகச் செய்யலாம்.

இதில் உள்ள இன்னொரு சிறப்பு, இதே யூனிட்டை வைத்து பல்வேறு எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் செய்யமுடியும். இதற்கான மூலப்பொருட்கள் ரெடிமேடாகக் கிடைத்துவிடுகிறது. நம் வேலை, அதை அசெம்பிளிங் செய்து தருவது மட்டுமே.

இயந்திர வகைகள்!

அதிக முதலீடு தேவையில்லை. பணியாளர்களுக்கு இருக்கை, பணியிட மேசைகள், விளக்குகள் என உள்கட்டமைப்பு வேலைகளைச் செய்துகொள்வதுடன், எலெக்ட்ரானிக் மீட்டர்கள், பத்தவைப்புக் கருவி

(soldering iron) மற்றும் பேக்கிங் கருவிகள் வாங்குவதற்கான முதலீடு 3-5 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும்.

மூலப்பொருட்கள்!

இந்தத் தொழிலுக்கு நடைமுறை மூலதனம்தான் முக்கியம். விற்பனை அதிகரிக்க அதிகரிக்க நடைமுறை மூலதனத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம். சர்க்யூட்கள், கேஸஸ், பல்புகள் என அனைத்து உதிரிபாகப் பொருட்களும் தனித்தனியாகக் கிடைக்கும். இவற்றை வாங்கி ஓர் அழைப்பு மணி செய்ய மொத்த உதிரிபாகங்களையும் ரூ.50-க்குள் வாங்கிவிடலாம். பணியாளர்களுக்குப் பயிற்சி தந்துவிட்டால் சேதாரத்தைத் தவிர்க்கலாம்.

திட்ட அறிக்கை!

இடம் : வாடகை
மின்சாரம் : 3 ஹெச்பி
உள்கட்டமைப்பு வேலைகள் : ரூ.5 லட்சம்

இந்தத் தொழில், நேரடி உற்பத்தி சார்ந்த தொழில் இல்லையென்பதால் மானியம் கிடைக்காது. திட்ட அறிக்கை அடிப்படையில் வங்கிக் கடன் பெறலாம். தவிர, நடைமுறை மூலதனத்துக்கான வங்கிக் கடனும் கிடைக்கும்.

தொழிலை விரிவுபடுத்தி சோலார் பொருட்கள் வரை உற்பத்தி செய்கிறபட்சத்தில் அதற்கு மானியம் பெறமுடியும்.

முதலீடு : ரூ.5 லட்சம்.
நம் பங்கு : 20% (ரூ.1 லட்சம்)
வங்கிக் கடன் : 80% (ரூ.4 லட்சம்)

நடைமுறை மூலதனம் : ரூ.4 லட்சம் (இதற்குத் தனியாக வங்கிக் கடன் கிடைக்கும்).

திட்ட அனுமானங்கள்!

தினசரி 200 அழைப்பு மணிவரை செய்ய முடியும். ஒரே பணியாளர் மொத்த வேலைகளையும் செய்வதைவிட, ஒவ்வொருவரும் ஒரு வேலையில் ஸ்பெஷலிஸ்ட் என்கிற அடிப்படையில் வேலைகளைப் பிரித்துத் தரவேண்டும். டேமேஜ் மற்றும் கழிவுகளுக்கு வாய்ப்புகள் கிடையாது.

தொழில்முனைவோரே நேரடியாகத் தரக் கண்காணிப்பு மற்றும் மார்க்கெட்டிங் மேற்பார்வை செய்வது நல்லது. வழக்கமாகச் சில்லறை விற்பனையாளர்கள் தவிரக் கட்டுமான நிறுவனங்கள், அலுவலகங்களை நேரடியாக அணுகுவது போன்ற மார்க்கெட்டிங் நடைமுறைகளை யோசித்து விற்பனையை அதிகரிக்கலாம். அழைப்பு மணி தவிர, இதே பணியாளர்களையும், யூனிட்டையும் வைத்து, எல்இடி பல்புகள், எலெக்ட்ரிக் சர்க்யூட்டுகளையும் தயாரிக்கலாம்.

பணியாளர்கள் சம்பளம்! (

தர மேற்பார்வையாளர் : 1 X10,000 = 10,000
திறன் பணியாளர்கள் : 7 X 8,000 = 56,000
பேக்கிங் பணியாளர்கள் : 1 X 6000 = 6000
விற்பனையாளர்கள் : 1 X 10,000 = 10,000
மொத்தம் : 82,000

மொத்த விற்பனை!

ஓர் அழைப்பு மணியை அதிகபட்சமாக ரூ.100 வரை விற்பனை செய்யலாம். நாம் ரூ.90 என்கிற விலையில் விற்பனையை மதிப்பிட்டுள்ளோம். இதன் அடிப்படையில் ஒருநாள் வரவு ரூ.18,000 (200ஙீ90 = ரூ.18,000). மாதத்துக்கு 25 வேலைநாட்கள் என வைத்துக்கொண்டால், மாத வருமானம்: ரூ.4,50,000.

செலவுகள்!

ஓர் அழைப்பு மணிக்கான உதிரிபாகங்கள் ரூ.50-க்குள் வாங்கிவிட முடியும். தினசரி 200 அழைப்பு மணிக்கான உதிரிபாகங்கள் = ரூ.10,000. மாதத்துக்கு 25 வேலை நாட்கள் எனக் கணக்கிட்டால், உதிரிபாகங்களுக்கான மொத்தச் செலவு ரூ.2,50,000 (25 ஙீ ரூ.10,000 = ரூ.2,50,000).

பேக்கிங் செலவு!

ஓர் அழைப்பு மணியைத் தனியாகப் பேக்கிங் செய்வதற்கான பெட்டி ரூ.1.50 வரை ஆகும். இந்தத் தனித்தனி பெட்டிகளை நமது ஆர்டர்களுக்கேற்ப பார்சல் செய்வதற்கான அட்டைப் பெட்டிகளையும் சேர்த்துக் கணக்கிட்டால் ஓர் அழைப்பு மணிக்கான பார்சல் செலவு ரூ. 2 வரை ஆகும். அதாவது, 200 அழைப்பு மணிகளுக்கான பார்சல் செலவு ரூ.400. (ரூ.200ஙீ2 = ரூ.400) ஒரு மாதத்துக்கு ரூ.10,000 (25ஙீ400 = ரூ.10,000).ஆர்டர்களுக்கேற்ப பொருளை அனுப்பிவைக்கப் போக்குவரத்துச் செலவு மாதத்துக்குத் தோராயமாக ரூ.5,000.

மொத்தச் செலவுகள்! (

மூலப்பொருட்கள் : 2,50,000
பேக்கிங் : 10,000
போக்குவரத்து : 5,000
மின்சாரம் : 10,000
வேலையாட்கள் : 82,000
விற்பனைச் செலவு : 5,000
மேலாண்மைச் செலவு : 5,000
பராமரிப்பு : 5,000
வங்கிக் கடன் வட்டி : 4,166
தவணை (60 மாதம்) : 6,666
நடைமுறை மூலதன வட்டி : 4,166
மொத்தச் செலவு : 3,86,998
மொத்த விற்பனை வரவு : 4,50,000
மொத்தச் செலவு : 3,87, 000
லாபம்: 63,000 (இடத்துக்கான வாடகையைத் தவிர்த்து)

புதிய தொழிலை துடிப்பாக மார்க்கெட்டிங் செய்து முன்னேறத் துடிப்பவர்களுக்கு இது ஏற்ற தொழில்.

(திட்டவிவரங்கள் உதவி: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டு நிறுவனம் (MSME Development Institute) சென்னை.