Published:Updated:

டாப் -அப் கடன்...வரிவிலக்கு உண்டா?

டாப் -அப் கடன்...வரிவிலக்கு உண்டா?

கேள்வி-பதில்

##~##

 ஹோம் இம்ப்ரூவ்மென்ட் லோன் வாங்கும்போது அதிகபட்சம் 30 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தும் வட்டியில் வரிச் சலுகை கிடைக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

?ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கியுள்ளேன். இப்போது நான் வாங்கவுள்ள டாப்-அப் கடனுக்கு வரிவிலக்கு கிடைக்குமா?

மாணிக்கம், வேலூர். கிருஷ்ணன், ஆடிட்டர்.

''வீட்டை மறுசீரமைப்பு, மறுகட்டுமானம் போன்ற காரணங்களுக்காக ஹோம் இம்ப்ரூவ்மென்ட் லோன் (டாப்-அப் கடன் என்று சில வங்கிகளில் இருக்கும்)  வாங்கும்போது அதிகபட்சம் 30 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தும் வட்டியில் வரிச் சலுகை கிடைக்கும். ஏற்கெனவே உள்ள வீட்டுக் கடனுக்காக வட்டி வரிச் சலுகை, டாப் - அப் கடன் வரிச் சலுகை இரண்டும் சேர்த்து 1,50,000 ரூபாய் வரைதான் வரிவிலக்கு பெற முடியும்.  இந்த வரிச் சலுகை, முதலில் வாங்கிய கடன் முடியும் வரைக்கும்தான் கிடைக்கும். இதர செலவுகளுக்காகப் பெறப்படும் டாப்-அப் கடனுக்கு வரிச் சலுகை கிடையாது.''

டாப் -அப் கடன்...வரிவிலக்கு உண்டா?

?நான் பகுதி நேரமாக இரண்டு நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். இரண்டு நிறுவனத்திலும் பி.எஃப் பிடித்தம் செய்யப்படுகிறது. இதை ஒரே பி.எஃப் கணக்காக மாற்ற முடியுமா?

வைத்தி, மதுரை. இளங்குமரன், ஆடிட்டர்.

''உங்களுடைய இரண்டு பி.எஃப் கணக்கையும் ஒரே கணக்காக மாற்ற விரும்பினால், எந்தக் கணக்கில் மற்றக் கணக்கை சேர்க்க விரும்புகிறீர்களோ, அந்த நிறுவனத்திடம் ஆட்சேபனை இல்லை என்று கடிதம் வாங்கித் தந்தால் இரண்டு கணக்கையும் ஒரே கணக்காக மாற்ற முடியும். ஒருவருக்கு எத்தனை கணக்கு இருந்தாலும் பி.எஃப் தொகைக்கு வருமான வரிப் பிரிவு 80சி-ன் கீழ் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை வரிச் சலுகை கிடைக்கும்.''

? எனக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. கோல்டு இடிஎஃப் திட்டத்தில் மாதம் ஒரு யூனிட் வீதம் ஐந்து வருடங்களுக்குத் தொடர்ந்து முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். இந்த முதலீடு சரியா?

பழனி, தூத்துக்குடி. ஏ.பி. வாசுதேவன், நிதி ஆலோசகர்.

''உங்கள் மகளின் எதிர்காலத் தேவைகளுக்காகத் தங்கத்தில் முதலீடு செய்வதற்காக கோல்டு இடிஎஃப் முதலீட்டை தேர்ந்தெடுத்தது சிறந்தது. ஏனெனில், நீண்டகாலத் தேவைக்காக கோல்டு இடிஎஃப் யூனிட்களை வாங்கும் போது செய்கூலி, சேதாரம் இருக்காது. பாதுகாப்புப் பிரச்னையும் இருக்காது. அதேபோல, எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யும்போது வாங்கும் விலை சராசரியாவதால் அதிக யூனிட்கள் கிடைக்கும் (rupee cost average).

டாப் -அப் கடன்...வரிவிலக்கு உண்டா?

கடந்த 2008 முதல் 2013 வரை  பொருளாதாரம் மந்தநிலையிலிருந்தபோது தங்கத்தின் விலை ஏற்றம் கண்டது. இனி வரும் நாட்களில் இந்த விலை ஏற்றம் தொடரும் என நம்ப முடியாது. ஏனெனில், கடந்த ஒரு வருடத்தில் உ.லக அளவில் தங்கத்தின் விலை 25 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. மேலும், தங்கத்தின் விலையானது டாலரின் மதிப்பைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.''

?குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியில் என் தந்தையின் வயதைத் தவறாகக் தந்துவிட்டேன். இதனால் ஏதாவது பிரச்னை வர வாய்ப்புள்ளதா?

முருகன், ஈரோடு. கிருஷ்ணதாசன், துணைத் தலைவர், நிவேஷ் இந்தியா செக்யூரிட்டீஸ்.

''இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, ஏற்கெனவே தந்த தகவல்களில் ஏதாவது மாற்றம் இருந்தால், அதைச் சரிசெய்து கொள்ளலாம். உங்கள் தந்தையின் வயதில் மாற்றம் இருந்தால், அவரின் வயதுக்கு ஆதாரமாக வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு ஏதாவது இருந்தால் அதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் கொடுத்து வயதை சரி செய்யலாம்.

டாப் -அப் கடன்...வரிவிலக்கு உண்டா?

இன்ஷூரன்ஸில் க்ளைம் சமயத்தில் பாலிசிதாரரின் வயதை நிறுவனம் கட்டாயம் சரிபார்க்கும். அந்தச் சமயத்தில் வயதில் மாற்றம் இருந்தால் க்ளைம் நிராகரிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, உங்கள் தந்தையின் சரியான வயதை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு தெரிவிப்பது நல்லது. தந்தையின் வயது அதிகமாக இருந்தால், ப்ரீமியம் அதிகரிக்கும். குறைவாக இருந்தால், ப்ரீமியம் குறையும். இதனால் குரூப் இன்ஷூரன்ஸ் ப்ரீமியமும் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது.''

?எனக்கு 45 வயதாகிறது. தனியார் நிறுவனத்தில் வேலை. பென்ஷன் கிடையாது. மாதம் 10 ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கும் வகையில் ஏதாவது முதலீட்டுத் திட்டம் உள்ளதா? இதற்காக மாதம் 2,500 ரூபாய் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்.

டாப் -அப் கடன்...வரிவிலக்கு உண்டா?

சுந்தர், கோவை. சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர்.

''உங்களின் ஓய்வுக்காலத்துக்கு ரூ.10,000 தேவை எனச் சொல்லியிருக்கிறீர்கள். இது இன்றைய தேதியில் தேவைப்படும் தொகை. பணவீக்க விகிதம் 7% என எடுத்துக்கொண்டால், 13 வருடம் கழித்து உங்களுக்கு மாதம் ரூ.24,000  தேவைப்படும்.

நீங்கள் ஓய்வுபெறும்போது உங்களுக்கு ரூ.10,000 கிடைக்கவேண்டும் என்றால், அப்போது கையில் ரூ.15 லட்சம்  இருக்கவேண்டும். அதற்கு ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி 8% கிடைத்தால் ரூ.10,000 கிடைக்கும். இதற்கு மாதம் முதலீடு செய்யவேண்டிய தொகை ரூ.4,030. இதுவே, மாதம் ரூ.24,000  தேவையெனில் மாதம் ரூ.9,670  முதலீடு செய்யவேண்டும். இதற்கு 12% வருமானம் கிடைத்தால் ஓய்வுபெறும்போது ரூ.36 லட்சம் உங்கள் கையில் இருக்கும். இதை ஃபிக்ஸட் டெபாசிட்டில் போடுவதன் மூலம் ஓய்வுக்காலத் தேவையை ஈடுசெய்ய முடியும். மேலும், முதலீடு செய்யவேண்டிய தொகையில் 70% பங்குச் சார்ந்த முதலீடுகளிலும், 30% கடன் சார்ந்த முதலீட்டுத் திட்டங்களிலும் பிரித்துச் செய்யலாம்.''

டாப் -அப் கடன்...வரிவிலக்கு உண்டா?