Published:Updated:

ஷேர்லக் ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைக்குமா?

ஷேர்லக் ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைக்குமா?

##~##

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர விற்பனை 10.3% அதிகரித்துள்ள நிலையில், அதன் நிகர லாபம் வெறும் 0.4%தான் உயர்ந்துள்ளது!

''பிரதமரே, எங்களுக்கு 9 சிலிண்டர் போதாது, அதை 12 சிலிண்டர்களாக உயர்த்தவேண்டும்'' என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் ராகுல் சொன்னவுடன், இனி எல்லோருக்கும் 12 சிலிண்டர் தர அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று பெட்ரோலியத் துறை வீரப்ப மொய்லி அறிவித்துவிட்டார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராகுல் சொன்னால்தான் எல்லாமே நடக்கும்போல'' என்று அரசியல் நையாண்டி பேசியவரை பங்கு உலகம் பக்கம் திசை திருப்பினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''டிசம்பர் காலாண்டு முடிவுகள் விறுவிறுவென வரத் தொடங்கி இருக்கின்றனவே?'' என்று கேட்டபடி பேச்சை ஆரம்பித்தோம்.

''பல நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்பைவிடச் சிறப்பாக வந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சிக்கொள்ள வைத்திருக்கிறது. வந்திருக்கும் முடிவுகளில் சிலவற்றைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.

ஷேர்லக் ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைக்குமா?

ரிலையன்ஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவு நன்றாக இருக்கும் என நினைத்து முன்னணித் தரகு நிறுவனங்கள் பல, அந்த நிறுவனப் பங்கை வாங்க பரிந்துரை செய்ததுடன் இலக்கு விலையையும் உயர்த்தின. ஆனால்,  இன்று வெளியான அதன் நிதிநிலை அறிக்கை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆர்ஐஎல்-ன் நிகர விற்பனை 10.3% அதிகரித்துள்ள நிலையில் அதன் நிகர லாபம் வெறும் 0.4%தான் உயர்ந்துள்ளது.

முன்னணி வீட்டு வசதி நிறுவனமான எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸின் நிகர லாபம் 38% அதிகரித்து ரூ.327 கோடியாக உயர்ந்துள்ளது. கடன் வளர்ச்சி மேம்பட்டிருப்பது மற்றும் வாராக்கடனுக்கான ஒதுக்கீடு குறைந்திருப்பது, நிகர வட்டி வரம்பு உயர்ந்திருப்பது போன்றவற்றால் இந்த நிறுவனத்தின் லாபம் உயர்ந்திருக்கிறது.

முன்னணி தனியார் வங்கியான ஆக்ஸிஸ் பேங்கின் நிகர லாபம் 20% அதிகரித்துள்ளது. கடன் வளர்ச்சி 18% உயர்ந்ததே இதற்கு முக்கியக் காரணம்.  

ஐடிசி-யின் நிகர லாபம் ஏறக்குறைய 16% அதிகரித்து, 2,385 கோடி ரூபாய் லாபம் கண்டிருக்கிறது. அதிக அளவிலான சிகரெட் விற்பனை இந்த நிறுவனத்துக்கு நல்ல லாபத்தைச் சம்பாதித்துத் தந்திருக்கிறது.

விப்ரோவின் நிகர லாபம் 27% உயர்ந்து, ரூ.2,010 கோடியாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், ஐடி சேவையின் மூலமான வருமானம் 2.9%தான் அதிகரித்துள்ளது. எல்லாம், ரூபாய் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கம்தான்.

டிசிஎஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 50% அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் வருமானம் அதிகரித்திருப்பதும் ஃபாரக்ஸ் வருமானம் உயர்ந்திருப்பதும் இதற்கு முக்கியக் காரணம். ஆனால், டிசிஎஸ் நிறுவனத்தைவிட அதிக லாபம் தந்திருக்கிறது ஹெச்சிஎல் நிறுவனம். கிட்டத்தட்ட 58% லாபம் தந்திருக்கிறது அந்த நிறுவனம்'' என்று பல நிறுவனங்களின் ரிசல்ட்களைச் சுருக்கமாக எடுத்துச் சொன்னவருக்குச்  சுடச்சுட ஏலக்காய் டீ தந்தோம்.

''நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைப் போக்க மத்திய அரசு மும்முரமாக இருக்கிறதுபோல் தெரிகிறதே?'' என்றோம்.

''நிதிப் பற்றாக்குறை மற்றும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்க மத்திய அரசு கங்கணத்தோடு செயல்படுகிறது. இதுவரையில் சேவை வரிக் கட்டாமல் வரி ஏய்ப்பு செய்தவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதாக வெளியிட்ட அறிவுப்புக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை ரூ.7,700 கோடி மத்திய அரசுக்குக் கிடைத்துள்ளது.

ஷேர்லக் ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைக்குமா?

இதுபோக, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ரூ.5000 கோடி மதிப்புள்ள பங்குகளை பொதுத் துறை நிறுவனங்களான ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா நிறுவனங்கள் வாங்கிக்கொள்ள இருக்கின்றன. அந்தவகையில் செலவு எதுவும் இல்லாமல் மத்திய அரசு நிதித் திரட்டி இருக்கிறது. இதுவும்போக, கோல் இந்தியா நிறுவனம் வரலாறு காணாத அளவு ஒரு பங்குக்கு 29 ரூபாய் டிவிடெண்டு அள்ளித் தந்ததில் மத்திய அரசாங்கத்துக்கு 16,485 கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. எதிர்பாராமல் கிடைத்த இந்தப் பணத்தைவைத்து அரசின் நிதிப் பிரச்னை ஓரளவுக்காவது தீர்ந்தால் சரிதான்'' என்றார்.

''நம் சந்தையில் எஃப்ஐஐ-களின் முதலீடு அதிகரித்திருக்கிறதாமே?'' என்றோம். ''ஆமாம், கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு மிகவும் வீழ்ச்சி அடைந்ததையடுத்து, எஃப்ஐஐ-கள் தங்கள் முதலீடுகளை இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து எடுத்துச் சென்றனர். தற்போது ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருவதையடுத்து எஃப்ஐஐ-கள் டிசம்பர் காலாண்டில் முதலீட்டை அதிகரித்துள்ளனர். செப்டம்பரில் எல் அண்டு டி நிறுவனத்தில் 15.25 சதவிகிதமாக இருந்த எஃப்ஐஐ முதலீடு டிசம்பரில் 17.85% ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், டாடா ஸ்டீல் (13.52% லிருந்து 16.09%), ஹிண்டால்கோ (24.86%லிருந்து 26.88%) மாருதி சுஸ¨கி (19.66%லிருந்து21.47%), இன்ஃபோசிஸ் (39.93%லிருந்து 40.65%), ஐ.டி.சி (19.3%லிருந்து 19.26%) போன்ற நிறுவனங்களிலும் எஃப்ஐஐ-களின் முதலீடு அதிகரித்துள்ளது'' என்றார்.

''கன்ஸ்யூமர் ப்ரைஸ் இண்டெக்ஸும் ஹோல்சேல் ப்ரைஸ் இண்டெக்ஸும் குறைந்திருக் கிறது. இனியாவது முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் குறைப்பாரா?'' என்று கேட்டோம்.

''வட்டி விகிதத்தைக் கொஞ்சமாவது குறைத்தால்தான் மூச்சுவிட முடியும் எனத் தொடர்ந்து நெருக்குதல் தந்துவருகிறது தொழிற்துறை அமைப்புகள். ஆனால், ரகுராம் ராஜனைப் பொறுத்தவரை, ஹோல்சேல் ப்ரைஸ் இண்டெக்ஸைவிட கன்ஸ்யூமர் ப்ரைஸ் இண்டெக்ஸையே அதிகம் கவனிக்கிறார்.  கன்ஸ்யூமர் ப்ரைஸ் இண்டெக்ஸின்படி, காய்கறிகளின் விலைதான் குறைந்திருக்கிறது. பால், மீன், இறைச்சி போன்றவற்றின் விலை அதிகரிக்கவே செய்திருக்கிறது. இந்த விலையேற்றம் குறையவேண்டும் என்பதோடு, காய்கறிகளின் விலை இன்னும் குறையவேண்டும். அப்போதுதான் கன்ஸ்யூமர் ப்ரைஸ் இண்டெக்ஸ் இன்னும் குறைந்து, வட்டி விகிதத்தைக் குறைக்கும் நடவடிக்கையை ஆர்பிஐ கவர்னர் எடுப்பார்  என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. வங்கிகளைப் பொறுத்தவரை, டெபாசிட் - கடன் ரேஷியா என்பது முக்கியமானதொரு விகிதம். அதாவது, ஒரு வங்கியில் 100 ரூபாய் டெபாசிட் ஆகியிருக்கிறது எனில், அந்த வங்கி அதிகபட்சமாக 73% மட்டுமே கடன் தரமுடியும். ஆனால், இப்போதைய நிலையில் 75.2% அளவுக்கு வங்கிகள் கடன் தந்திருக்கிறது. இந்த நிலைமையில் கடனுக்கான வட்டியைக் குறைத்தால், வங்கிகளின் வருமானம் மேலும் குறைந்துவிடும். எனவே, வட்டி விகிதத்தைக் குறைக்க வங்கிகள் ஒப்புக்கொள்ளாது. ஆகமொத்தத்தில், முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் இந்த மாதம் குறைக்க வாய்ப்பு குறைவுதான்'' என்றவர், சட்டென்று புறப்பட்டுச் சென்றார்.