Published:Updated:

பலம் பெறும் பங்குச் சந்தை...

வருகிறது வசந்த காலம்!

பலம் பெறும் பங்குச் சந்தை...
##~##

2014-15 நிதியாண்டில் சென்செக்ஸ் வளர்ச்சி 15% - 20% இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ந்திய பங்குச் சந்தை, பொருளாதார வளர்ச்சி குறைந்துபோனதன் காரணமாகக் கடந்த 2013-ம் ஆண்டு முழுக்க ஏற்ற இறக்கத்துடனே காணப்பட்டது. அந்த ஆண்டில் பங்குச் சந்தை ஒற்றை இலக்கத்தில்தான் வருமானத்தைத் தந்தது. கடந்த ஆண்டு போல் இல்லாமல் இந்த ஆண்டு இந்திய பங்குச் சந்தை கணிசமான வருமானத்தை அளிக்கும் என்கிற பாசிட்டிவ் சூழ்நிலை பரவலாக உருவாகி வருகிறது.

இதற்கு ஏற்றாற்போல் பல சூழ்நிலைகள் சாதமாகி உள்ளன. அவை என்னென்ன என்று பார்ப்போம்.

• கேபினட் கமிட்டியின் ப்ராஜெக்ட் மானிட்டரிங் குழுவுக்கு ரூ.17 ட்ரில்லியன் மதிப்புள்ள 384 திட்டங்கள் அனுமதிக்காக வந்துள்ளன. இதில் ரூ.4 ட்ரில்லியன் மதிப்புள்ள 120 திட்டங்களுக்கு அனுமதி தரப்பட்டு இருக்கிறது. இதில் ரூ.3 ட்ரில்லியன் மதிப்புள்ள திட்டங்கள் மின் உற்பத்தி சார்ந்தவை. அந்தவகையில் நாட்டில் மின் உற்பத்தி அதிகரிக்கும்பட்சத்தில் உற்பத்தித் துறை வளர்ச்சி காண அதிக வாய்ப்புள்ளது.

மேலும், கடந்த ஆறு மாதங்களில் இந்திய ஆயில் துறையில் ஆயில் சப்ளை ஒப்பந்தம் உள்ளிட்ட பல முக்கியமான சீர்திருத்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதுவும் மின் உற்பத்தியை அதிகரிக்கும் அம்சங்களாக உள்ளன.

பலம் பெறும் பங்குச் சந்தை...
பலம் பெறும் பங்குச் சந்தை...

• 2013 ஜூலை முதல் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. 2014-15-ம் ஆண்டில் இந்திய ஏற்றுமதி சுமார் 10% அதிகரிக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

• 2013-ல் பருவமழை நன்றாக இருந்ததால் உணவு தானியங்களின் உற்பத்தி அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் 2014-15-ல் மொத்தம் மற்றும் நுகர்வோர் விலை குறியீடு நடுத்தர அளவில் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

நல்ல பருவமழையால் உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி அதிகரிக்கும். இதனால், 2014-15-ம் ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி மேம்படும். அதாவது, 2013-14-ல் 4.5 சதவிகிதமாக இருக்க வாய்ப்புள்ள ஜிடிபி வளர்ச்சி, 2014-15-ல் 5.5 சதவிகிதமாக மேம்படும் என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

• தேர்தலுக்குப் பிறகு, புதிய சேவை மற்றும் சரக்கு வரி முறை, புதிய நேரடி வரி விதிப்பு, இன்ஷூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீடு போன்றவை வர வாய்ப்புள்ளது. இது அரசின் வரி வருமானத்தை அதிகரிப்பதுடன் நாட்டுக்குள் அந்நிய முதலீட்டை அதிகரிக்கவும் செய்யும்.

• கச்சா எண்ணெய் விலை 2013-ல் சுமார் 110 டாலராக இருந்தது. உற்பத்தி உயர்வு மற்றும் தேவை குறைவால் இனி கச்சா எண்ணெய் விலை 90 டாலருக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, மொத்த பணவீக்க விகிதம் சுமார் 6 சத விகிதத்துக்குக் குறைந்துள்ளதால் ஆர்பிஐ விரைவில் வட்டியைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014-15-ல் வட்டி விகித குறைப்பு கணிசமாக இருக்கும்.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, இந்தியாவின் பொருளாதாரத்தை மிகவும் அச்சுறுத்தி வருகிறது. அதேநேரத்தில், மேம்பட்டு வரும் பொருளாதார வளர்ச்சி, ஆயில் துறை சீர்திருத்தங்கள் போன்றவை வரும் 2014-15-ல் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் கொண்டுவர உதவும்.

பலம் பெறும் பங்குச் சந்தை...

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 2013-ல் 11% குறைந்துள்ளது. அதேநேரத்தில் ஏற்றுமதி வளர்ச்சி கண்டிருப்பதால், 2013-14 இரண்டாம் காலாண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 1.2 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. இதனால், ரூபாயின் மதிப்பு 2014-15-ல் தற்போதுள்ள 60-62 என்கிற நிலையிலேயே நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

• அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ், 2014 ஜனவரி முதல் பாண்டு முதலீட்டை 1,000 கோடி டாலர் அளவுக்குக் குறைக்கிறது. அதேநேரத்தில், 2015 வரையில் வட்டியில் மாற்றம் எதுவும் செய்யப்போவதில்லை.

அமெரிக்கா பாண்டுகளை வாங்குவதைக் குறைப்பது உலக சந்தைக்கும், இந்திய சந்தைக்கும் கவலை அளிக்கும் விஷயம்தான். மேலும், இந்திய ரூபாயின் மதிப்பு குறையும். அதனால், அந்நிய நிறுவனங்களின் (எஃப்ஐஐ) முதலீடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பங்குச் சந்தையில், எஃப்ஐஐ-களின் பங்களிப்பு சுமார் 21 சதவிகிதமாக இருக்கிறது.

எஃப்ஐஐ-கள் முதலீட்டை கணிசமாக விலக்கிக்கொண்டால், இந்திய பங்குச் சந்தையில் பாதிப்பு ஏற்படத்தான் செய்யும். அதேநேரத்தில், இந்திய பொருளாதாரத்தின் ஃபண்டமென்டல் அடிப்படையில்தான் வெளிநாட்டு முதலீடுகளும் வந்துகொண்டிருக் கின்றன. அந்தவகையில், இந்திய பொருளாதாரம் மேம்பட்டு வருவதால், வெளிநாட்டு முதலீடு நாட்டுக்குள்  வரவே அதிக வாய்ப்புள்ளது.

• எல்லாவற்றுக்கும் மேலாக, 2014 ஏப்ரல், மே மாதத்தில் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தல். இந்தத் தேர்தலில் அமையவிருக்கும் நிலையான ஆட்சி, உறுதியான நடவடிக்கை எடுக்கும் தலைமை ஆகியவற்றைப் பொறுத்து சந்தையின் போக்கு இருக்கும் என்பது சொல்லவே தேவையில்லை.

பலம் பெறும் பங்குச் சந்தை...

எந்தத் துறை எப்படி?

இனி 2014-ல் எந்தத் துறை எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

பலம் பெறும் பங்குச் சந்தை...

நுகர்வோர் துறை!

2013-14-ம் ஆண்டில் நுகர்வோர் துறையின் வளர்ச்சி நடுத்தர அளவில் உள்ளது. காரணம், அதிக விலைவாசியாக இருக்கிறது. விலைவாசி இறக்கத்தைப் பொறுத்துதான் 2014-15-ம் ஆண்டில் இந்தத் துறையின் வளர்ச்சி இருக்கும்.

பலம் பெறும் பங்குச் சந்தை...

சிமென்ட் துறை!

பலம் பெறும் பங்குச் சந்தை...

சிமென்ட் தேவை குறைந்துபோன தால் 2013-14-ல் சிமென்ட் துறை சவாலை சந்தித்து வருகிறது. இந்தநிலை 2014-15-ல் மாறி, இந்திய சிமென்ட் துறையின் வருமானம் சுமார் 20 சதவிகிதம் அளவுக்கு அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, ஏசிசி, அம்புஜா, அல்ட்ரா டெக் நிறுவனங்களின் லாப வரம்பு அதிகரிக்கக் கூடும்.

பலம் பெறும் பங்குச் சந்தை...

நிதிச் சேவை!

நிதித் துறை வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனங்களின் லாபம் 2013-14-ல் சுமார் 5% குறையும். அதேநேரத்தில், 2014-15-ல் வங்கிகளின் லாபம் சுமார் 25 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வளர்ச்சி பொதுத்துறை வங்கிகளில் 27%, தனியார் வங்கிகளில் 20 சதவிகிதமாக இருக்கக்கூடும். வங்கித் துறையின் கடன் வளர்ச்சி 15 சதவிகிதமாக இருக்கும். 2014-ல் வட்டி விகிதம் நிலையான அளவில் இருக்கும்.

பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரையில் அதிக அளவில் வாராக்கடன் இருக்கிறது. அந்த வகையில், அவற்றின் பங்குகளில் முதலீடு செய்வதில் நடுத்தரக் காலத்தில் ரிஸ்க் இருக்கிறது.

பலம் பெறும் பங்குச் சந்தை...

வாகனத் துறை:

2014-ம் ஆண்டில் வாகனத் துறை, 2013 போலவே மந்தமாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. பொருளாதார வளர்ச்சி கணிசமான அளவுக்கு மேம்பட்டால் மட்டுமே வாகனத் துறை வளர்ச்சி வேகம் எடுக்கும்.

பலம் பெறும் பங்குச் சந்தை...

ஹெல்த்கேர்!

2014-15-ம் ஆண்டிலும் பார்மா துறை சிறப்பாகச் செயல்பட அதிக வாய்ப்புள்ளது. பெரும்பாலான பார்மா நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டிருப்பது சிறப்பான அளவில் லாபத்தை அதிகரிக்க உதவும். டாலர் மதிப்பில் இந்திய பார்மா கம்பெனிகளின் வருமான வளர்ச்சி 20 சதவிகிதமாக இருக்கும்.

பலம் பெறும் பங்குச் சந்தை...

மெட்டல்!

கோல் இந்தியாவின் நிகர லாபம் பெரிய அளவில் அதிகரிக்கும் என்பதால் மெட்டல் துறையின் இபிஎஸ் வளர்ச்சி 2014-15-ல் 20 சதவிகிதமாக இருக்கும்.

பலம் பெறும் பங்குச் சந்தை...

பெட்ரோலியப் பொருட்கள்!

பெட்ரோலியப் பொருட்கள் துறையின் வளர்ச்சி 2013-14-ல் சுமார் 3 சதவிகிதமாக இருக்கும். இது, சமையல் எரிவாயு விலை உயர்வு போன்ற காரணத்தால் 2014-15-ல் சுமார் 20 சதவிகிதமாக அதிகரிக்கும். இதனால், ஆயில் இந்தியா, ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் அதிக லாபம் அடையும்.

பலம் பெறும் பங்குச் சந்தை...

மின்சாரம்!

புதிய விதிமுறைகள் மற்றும் வர்த்தக விலை குறைவு போன்றவற்றால் 2014-15ம் ஆண்டில் மின் உற்பத்தி நிறுவனங்களின் வருமானம் குறையும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, என்டிபிசி, ஜேஎஸ்டபிள்யூ நிறுவனங்களின் லாபம் குறையக்கூடும்.

அதேநேரத்தில், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பவர் துறை நிறுவனங்களின் வருமானம் 15-20% வளர்ச்சி காணக்கூடும்.

பலம் பெறும் பங்குச் சந்தை...

டெலிகாம்!

செல்போன் சேவையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் 2013-14-ம் ஆண்டில் இந்தத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் வருமானம் அதிகரித்தது. இது 2014-15-ல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலம் பெறும் பங்குச் சந்தை...

ரியல் எஸ்டேட்!

இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங் களின் வருமான வளர்ச்சி 2013-14-ல் சுமார் 5 சதவிகித அளவுக்குதான் இருந்தது. இது 2014-15-ல் 25-30 சதவிகித அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் டிஎல்எஃப், ஓபராய், பிரெஸ்டீஜ் போன்ற நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கக்கூடும். 2014-15-ம் நிதி ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் நாட்டில் வீடுகளின் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

பலம் பெறும் பங்குச் சந்தை...

தொழில்நுட்பம்!

2013-14-ல் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிகண்டதால் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் லாபம் அதிகரித்து, அவற்றின் பங்குகளின் மீதான வருமான மும் கூடியது. இந்த அதிகரிப்பு 2014-15-ம் ஆண்டிலும் நடுத்தர அளவில் இருக்கும்.

அமெரிக்க வங்கிகளிடமிருந்து இந்திய ஐ.டி துறைக்கு அதிக ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கின்றன. 2013-ம் ஆண்டில் இந்திய ஐ.டி பங்குகள் பல நல்ல வருமானத்தைக் கொடுத்திருக்கின்றன. இது நடப்பு ஆண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலம் பெறும் பங்குச் சந்தை...

2014-ல் எப்படி?

2014-ல் சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்று இனி பார்ப்போம்:

2013-14-ல் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமான வளர்ச்சி என்பது பெரிதாகச் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்த வளர்ச்சி 2014-15-ல் சுமார் 12-15 சதவிகிதமாக இருக்கும்.

குறிப்பாக, உள்நாட்டு வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், உலோகங்கள் மற்றும் சுரங்கத் துறை, சிமென்ட் மற்றும் மின் உற்பத்தி துறைகளின் வருமானம் அதிகரிக்கக்கூடும்.

நம் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 5.5 சதவிகிதமாகவும், உற்பத்தி மற்றும் வேளாண் துறை செயல்பாடு குறிப்பிடத்தக்க அளவுக்கு சிறப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

2014-15-ல் சென்செக்ஸ் வளர்ச்சி 15% - 20% இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதேநேரத்தில், தற்போதைய சூழ்நிலையைக் கவனிக்கும்போது, தேர்தலுக்குமுன் இந்திய பங்குச் சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கும்.

பலம் பெறும் பங்குச் சந்தை...

இந்த ஆண்டில் கவனிக்கவேண்டிய துறைகள்!

• தொழிற்துறை, ஆட்டோ மொபைல்ஸ், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (என்பிஎஃப்சி), தனியார் வங்கிகள், ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் ஐ.டி மற்றும் பார்மா நிறுவனப் பங்குகளை வாங்கினால் அதிக லாபம் பார்க்க முடியும்.

• வளர்ச்சித் துறையில் உள்ள நல்ல கம்பெனி பங்குகளைத் தேர்ந்தெடுத்து வாங்கவும்.

• அதிகக் கடன் உள்ள நிறுவனப் பங்குகள் மீதான ரிஸ்க்கும் அதிகம்.

• அமெரிக்காவின் மேக்ரோ பொருளாதாரத்தின் வளர்ச்சியைப் பொறுத்து இந்திய பங்குச் சந்தையின் வளர்ச்சி இருக்கும்.

•  ஐரோப்பாவிலும் நிலைமை சீராகி வருவது இந்திய பங்குச் சந்தைக்குச் சாதகமான விஷயமாக இருக்கிறது.

  - சி.சரவணன்.

கவனிக்க வேண்டிய பங்குகள்

லார்ஜ் கேப்

• ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

• ஐசிஐசிஐ பேங்க்

• ஆக்ஸிஸ் பேங்க்

• மாருதி

• டாடா மோட்டார்ஸ்

• டாடா ஸ்டீல்

• டைட்டன்

• அல்ட்ரா டெக்

• டாக்டர் ரெட்டீஸ்

• ஹீரோ மோட்டோகார்ப்

• எல் அண்டு டி

• விப்ரோ

• டிசிஎஸ்

• ஹெச்.டி.எஃப்.சி பேங்க்

• பவர் கிரீட் கார்ப்பரேஷன்

• டெக் மஹிந்திரா

• லூபின்

• பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்

• இண்டஸ்இந்த் பேங்க்

கவனிக்க வேண்டிய பங்குகள்

மிட் கேப்

• எல்ஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ்

• கிராம்ப்டன் கிரீவ்ஸ்

• ஐபிசிஏ லேப்ஸ்

• கெடிலா

• ராம்கோ சிமென்ட்ஸ்

• மதர்சன் சுமி

• ஸ்ரீராம் ட்ரான்ஸ்போர்ட்

• அசோக் லேலாண்டு

• பார்தி ஏர்டெல்

• இன்ஃபோசிஸ்

• சேச ஸ்டெர்லைட்

• க்ளென்மார்க் பார்மாச்சூட்டிக்கல்ஸ்

• கும்மின்ஸ் இந்தியா

• சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ்

• எஸ்கேஎஸ் மைக்ரோ ஃபைனான்ஸ்

• பாரத் ஃபோர்ஜ்

• ஐஎல் அண்டு எஃப்எஸ்  ட்ரான்ஸ்போர்ட்டேஷன்

• பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ்

• டாரன்ட் பார்மா

• ஐபிசிஏ லேப்

• ஜெயின் இர்ரிகேஷன்

• ஸ்ரீ சிமென்ட்