Published:Updated:

வெளிநாட்டில் வசிப்பவருக்கு வங்கி லாக்கர் கிடைக்குமா?

படங்கள்: எம்.உசேன், ப.சரவணக்குமார், தே.தீட்ஷித்.

##~##

ஹெச்ஐவி-யினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிரிழப்பு ரிஸ்க் அதிகம் இருப்பதால், டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி கிடைக்காது!

 ?நான் கடந்த 20 வருடமாக வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறேன். எனக்கு மூன்று மகள்கள். அவர்களின் எதிர்காலத்துக்காக 100 கிராம் தங்கக் கட்டி வாங்கி வைத்துள்ளேன். இதை இந்தியாவில் உள்ள வங்கி லாக்கரில் வைத்து பாதுகாக்க முடியுமா? இப்படிச் செய்யும்போது கலால் துறையினால் ஏதாவது பிரச்னை வருமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

@ வெங்கடேஷ் வேலுசாமி,

இந்திரா பத்மினி, பொதுமேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தலைமை அலுவலகம், சென்னை.

''வெளிநாட்டில் வாழும் உங்களுக்கு இந்தியாவில் உள்ள வங்கியில் தாராளமாக லாக்கர் வசதி கிடைக்கும். இதில் வைக்கப்படும் பொருட்கள் குறித்து வங்கி எந்தவிதமான கேள்வியும் கேட்காது. பணம் தவிர்த்து அனைத்துப் பொருட்களையும் லாக்கரில் வைத்துக்கொள்ளலாம்.

கலால்துறை விசாரணைக்காக லாக்கர் குறித்து ஏதாவது தகவல் கேட்டால், லாக்கரை ஒப்படைத்துவிடுவோம். அதில் வைக்கும் பொருட்களுக்கான பில், வருமான விவரம் அனைத்தையும் வைத்திருப்பது வாடிக்கையாளரின் கடமை.''

வெளிநாட்டில் வசிப்பவருக்கு வங்கி லாக்கர் கிடைக்குமா?

?என்னுடைய மகள் கார் ஓட்டக் கற்றுக் கொள்வதற்காக எல்எல்ஆர் எடுத்து வைத்திருத்திருக்கிறாள். கார் ஓட்டப் பழகும்போது ஒரு கடையின் மீது மோதிவிட்டாள். கார் மற்றும் இன்ஷூரன்ஸ், மனைவியின் பெயரில் உள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட கடைக்காரருக்கு க்ளைம் கிடைக்குமா?

சிவக்குமார், திருச்சி.

ரவி கிருஷ்ணன், மேலாளர், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி.

''வாகனம் ஓட்டப் பழகுநர் உரிமம் வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் வாகனம் ஓட்டலாம். ஆனால், அவருடன் நிரந்தர லைசென்ஸ் வைத்திருக்கும் நபர் அமர்ந்திருப்பது அவசியம். ஏனெனில், இன்ஷூரன்ஸ் என்பது வாகனத்துக்குத்தான். எல்எல்ஆர் வைத்திருப்பவர் மட்டும் தனியாக வாகனம் ஓட்டி, அதனால் விபத்து ஏற்பட்டிருந்தால் கடைக்காரருக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலிருந்து எந்தவிதமான இழப்பீடும் கிடைக்காது.''

வெளிநாட்டில் வசிப்பவருக்கு வங்கி லாக்கர் கிடைக்குமா?

 ?நான் 58 வயதான மருத்துவர். எனக்கு வீட்டுக் கடன் கிடைக்குமா?

லோகநாதன், திருச்சி.

பி.பாலாஜி, சொத்து ஆலோசகர்.

''நீங்கள் சொந்தமாக கிளினிக் வைத்து அதன்மூலமாக வருமானம் ஈட்டுபவராக இருந்தால், வீட்டுக் கடன் கிடைப்பதில் எந்தவிதமான சிக்கலும் இருக்காது. மருத்துவர் என்பதால் உங்களை பிசினஸ் செய்பவராக வங்கி கருதும். பிசினஸ் செய்பவர்களுக்கு 65 வயது வரை வீட்டுக் கடன் கிடைக்கும். ஆனால், நீங்கள் வருமான வரித் தாக்கல் செய்பவராக இருக்கவேண்டும். அதேநேரத்தில், நீங்கள் பென்சன் அல்லது வேறு வகையில் வருமானம் (வாடகை, விவசாயம் சார்ந்த வருமானம்) ஈட்டுபவராக இருந்தால் உங்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்காது.''

 ?ஹெச்ஐவி-யினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் கிடைக்குமா?

ராஜேந்திரன், சிவகாசி.

வெளிநாட்டில் வசிப்பவருக்கு வங்கி லாக்கர் கிடைக்குமா?

விஜயராகவன், பிராந்திய மேலாளர்,வாடிக்கையாளர் சேவைப் பிரிவு, எல்ஐசி.

''ஹெச்ஐவி-யினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி தருவதில்லை. டேர்ம் இன்ஷூரன்ஸில் எதிர்பாராத விபத்தில் மரணம், இயற்கை மரணம் போன்றவற்றுக்குதான் க்ளைம் செய்ய முடியும். ஹெச்ஐவி பாதிப்பு உள்ளவர்களுக்கு இறப்பு விரைவாக ஏற்படலாம்; ரிஸ்க் அதிகம் என்பதால் பாலிசி தருவதில்லை.''

 ?என்னுடைய ஆதார் அட்டையில் பெயர் தவறாக அச்சாகி வந்துள்ளது. இதைச் சரி செய்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தேன். எனக்குப் புதிய அட்டை எப்போது கிடைக்கும், அதுவரை பழைய ஆதார் எண்ணையே பயன்படுத்திக் கொள்ளலாமா?

 எம்.என். மகேந்திரன், திருச்சி.3

கிருஷ்ணராவ், இணை இயக்குநர், மக்கள்தொகை கணக்கெடுப்பு.

''புதிய கார்டு வரும் வரை, உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆதார் எண்ணையே பயன்படுத்திக்கொள்ளலாம். அதில் எந்த விதமான பிரச்னையும் வராது. புதிய ஆதார் அட்டை வரிசைபடிதான் வழங்கப்படும். அது யூஐடிஐஏ அலுவலகத்திலிருந்து நேரடியாக உங்கள் முகவரிக்கே வந்துவிடும்.''

வெளிநாட்டில் வசிப்பவருக்கு வங்கி லாக்கர் கிடைக்குமா?

?வீட்டுக் கடன் வாங்குவதற்காக அடமானமாக என்னுடைய லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியைக் கொடுத்திருந்தேன். தற்போது எனக்கு அந்த பாலிசி திரும்பத் தேவைப்படுகிறது. இதைத் திரும்பப் பெறமுடியுமா? அதற்கு என்ன செய்யவேண்டும்?

கண்ணன், வேலூர்.

ஏ.கஜேந்திரன், சொத்து ஆலோசகர்.

''வீட்டுக் கடன் வாங்கும்போது உத்தரவாதத்துக்காகக்

வெளிநாட்டில் வசிப்பவருக்கு வங்கி லாக்கர் கிடைக்குமா?

கொடுக்கப்படும் ஆவணங்களைக் கடன் அடைப்பதற்கு முன் திரும்ப வாங்குவது என்பது சிக்கலான விஷயம். உங்களுக்கு பாலிசி யின் நகல் தேவை என்றால் வங்கி கிளையில் கோரிக்கை கடிதம் கொடுத்தால் நகல் தருவார்கள். இதற்கு கட்டணம் இருக்கிறது.''

வெளிநாட்டில் வசிப்பவருக்கு வங்கி லாக்கர் கிடைக்குமா?