கல்லூரியில் படித்துக்கொண்டே டூர் ப்ரோகிராம் ஏற்பாடு செய்வதன் மூலம் நிறைய சம்பாதிக்கின்றனர் இந்த மாணவர்கள்!

படிக்கும்போது ஊர் சுற்றித் திரியும் இளைஞர்களைப் பார்த்தால் திட்டவேண்டும் என்று தோன்றுமல்லவா? ஆனால், அதையே தொழிலாகச் செய்வதோடு, படிப்பிலும் கில்லியாக விளங்குகின்றனர் கோவை கற்பகம் தொழில்நுட்ப மற்றும் நாமக்கல் செல்வம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் முரளிதரன், நரேஷ், சரவணன்.

இந்த மூவரை நாம் சந்தித்தோம். முதலில் பேசவந்தார் முரளிதரன். ''எனக்கு ஊர் சுற்றுவது என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. அதற்காகவே விழுப்புரத்திலிருந்து கோவை கல்லூரிக்குப் படிக்கவந்தேன். அப்போதுதான் டிராவல் ஏஜென்சி வைத்திருக்கும் ஒருவரின் நட்பு கிடைத்தது. அவரது டிராவல் பிசினஸில் என்னையும் அவ்வப்போது உதவிக்காக வெளியூருக்கு அழைத்துச் செல்வார். அப்படியே அவருடன் ஜாலியாக ஊர் சுற்றும்போது இதை நாம் ஏன் ஒரு பிசினஸாகச் செய்யக்கூடாது என்று நினைத்தேன். வழக்கமான டூர் ப்ரோகிராம் மாதிரி இல்லாமல், சற்று வித்தியாசமாகச் செய்ய நினைத்தபோதுதான் நாங்கள் இப்போது செய்துவரும் இந்த டூர் பிசினஸ் ஐடியா பிறந்தது'' என முரளி நிறுத்தியபோது சரவணன் தொடர்ந்தார்.

சுற்றுலா பேக்கேஜ்!

''நாம் படிப்பது பொறியியல். எல்லாக் கல்லூரிகளிலும் இண்டஸ்ட்ரியல் விசிட் என்ற பெயரில் வருடா வருடம் 1-5 நாட்கள் வரை சுற்றுலாச் செல்வார்கள். நாங்களும் போய் வந்திருக்கிறோம். எனவே, மாணவர்களுக்கென ஒரு டூர் பேக்கேஜிங் ஆரம்பித்தால் என்ன என்று நினைத்தோம். இதன்படி, மாணவர்கள், மாணவிகள் எந்த ஊருக்குச் சுற்றுலாச் சென்றாலும் அவர்களைப் பேருந்தில் ஏற்றுவது முதல் அவர்கள் திரும்பி வந்து இறங்கும்வரை முழுக்க முழுக்க எங்கள் பொறுப்பு. எங்கள் இருவரோடு, என்னுடன் டிப்ளமோ வரை படித்த நரேஷையும் சேர்த்துக்கொண்டு 'ஃப்ளை இந்தியா டூர்ஸ்’ என்ற பெயரில் இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம்.

ஆரம்பத்தில் பஸ் வாடகை எடுப்பது பெரிய பிரச்னையாக இல்லை. ஆனால், தங்கும் இடம், வெளிமாநில உதவிகள் ஆகியவைதான் சற்றுத் தயக்கமாக இருந்தது.

ஃபேஸ்புக் மார்க்கெட்டிங்!

ஃபேஸ்புக்கில் எங்களைப் பற்றி ஒரு பக்கம் ஆரம்பித்து விளம்பரம் செய்ய ஆரம்பித்தோம். அதன் மூலம்தான் எங்கள் முதல் சுற்றுலா ஆர்டர் கிடைத்தது. முதல் பயணம், விழுப்புரம் டூ கோவை என்பதால் எங்களுக்கும் பெரிதாக எந்தக் கஷ்டமும் தெரியவில்லை. விழுப்புரத்திலிருந்து கிளம்பியபோது கூடவே நாங்களும் கிளம்பினோம். இங்கு வேலைகள் முடிந்தபிறகு சரியாகச் சென்று சேர்த்தோம். எங்கள் சேவை அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்ததால், அதைப் பார்த்து மற்ற நண்பர்களும் கேட்க ஆரம்பித்தனர். முதல் பயணத்தில் பெரிய பிரச்னை ஏதுமில்லை. ஆனால், மற்றப் பயணங் களிலும் பிரச்னைதான்'' என நிறுத்திய போது நரேஷ் தொடர்ந்தார்.

'டூர் ஆபரேட் செய்வது என்பது கொஞ்சம் டென்ஷன் பிடித்த விஷயம்தான். டூருக்கு வருகிறவர்கள் தங்குகிற இடம், சாப்பாடு, அழைத்துச் செல்கிற இடங்களில் எந்தப் பிரச்னையும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தூங்கும்போது கொசு கடித்தாலும் சரி, சட்னியில் உப்பு இல்லை என்றாலும் சரி, அதை ஒரு குறையாக நம்மிடம் எடுத்துச் சொல்லிவிடுவார்கள் டூருக்கு வந்தவர்கள். இதுமாதிரி அவர்கள் எந்தக் குறையை எடுத்துச் சொன்னாலும் அதைப் பொறுமையாகக் கேட்டு, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தரவேண்டும்.

சில சமயம் பஸ் எங்காவது மோதி சிறிய அளவில் விபத்து ஏற்பட்டுவிடும். அப்போது பாதிக்கப்பட்டவரிடம் பேசி காவல் துறையிடம் செல்லாதவாறு அவர்களைச் சமாளிக்க வேண்டும். இதுவரை நாங்கள் கோவை மட்டுமின்றி திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் உள்ள 26 கல்லூரிகளின் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்துதந்துள்ளோம்.

லாபமல்ல, உழைப்புக்கான ஊதியம்!

சிறுசிறு பிரச்னைகளால் செலவு ஏற்படும்போது எங்கள் லாபம் குறைந்துவிடும். அதை அடுத்தச் சுற்றுலாவில் பார்த்துக்கொள்ளலாம் என எங்களை நாங்களே தேற்றிக் கொள்வோம். எங்கள் சேவை திருப்தியாக இருக்கும்பட்சத்தில், அதை அவர்கள் தங்களது மற்ற நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வதன் மூலம் எங்களுக்கு இன்னும் நிறைய பிசினஸ் வாய்ப்புகள் கிடைக்கும். இப்படித்தான் எங்கள் வட்டம் விரிகிறது.

இதன்மூலம் எங்களுக்கு நல்ல தொழில் அனுபவமும் கிடைக்கிறது. இதுபோன்ற கல்வி சுற்றுலாக்கள் பெரும்பாலும் அரசு விடுமுறை நாட்கள், தேர்வு விடுமுறை நாட்களிலேயே மேற்கொள்ளப்படுவதால் எங்களுக்கும் படிப்பு, வருகை சதவிகிதம் ஆகியன பாதிக்கப்படுவதில்லை.

இந்தத் தொழிலில் கல்லூரிகளைப் பொறுத்தே லாபம் கிடைக்கும். பெரிய கல்லூரி மாணவர்கள் என்றால் எல்லா ஏற்பாடும் பெரிய அளவில் எதிர்பார்ப்பார்கள். லாபமானது கல்லூரிக்குக் கல்லூரி மாறுபடும். எப்படியும் ஒரு பயணத்துக்கு 6,000 ரூபாயாவது கிடைக்கும். எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில் 20,000 ரூபாய் வரை கிடைக்கும். இது வெறும் லாபம் மட்டுமல்ல, எங்களின் உழைப்புக்குக் கிடைக்கும் ஊதியம். இந்தப் பணத்தை எங்கள் கல்லூரிப் படிப்புச் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்வோம்' என்றார் நரேஷ்.

''எங்கள் மூவருக்கும் அரியர்கூட இல்லாத அளவுக்குப் படிப்பு மற்றும் தொழில் இரண்டையும் சமாளிக்கிறோம். இந்தத் தொழிலின் அடுத்தக்கட்டமாக இதை வெளிநாடு அளவுக்குக் கொண்டு செல்லமுடியுமா என யோசிக்கிறோம். முடிந்தால் அதையும் செய்வோம். படிப்பு முடிந்தால் நாங்கள் இதையேகூடப் பெரிய அளவில் செய்வோம். பொறியியல் படித்துவிட்டு வேலைக்காக அலையாமல் சுயதொழில் செய்வது நல்ல விஷயம்தானே'' என மூவருமே கேட்க, பெஸ்ட் ஆஃப் லக் சொல்லிவிட்டுப் புறப்பட்டோம்.

படங்கள்: ர.சதானந்த்.