இயந்திர மதிப்பீட்டால், அதிக பணத்தை மதிப்பீட்டுக் கட்டணமாகத் தரவேண்டிய அவசியம் இருக்காது என்கிறார்கள் வங்கி அதிகாரிகள்.

இன்றைய சூழலில் நடுத்தர மக்களின் இன்றியமையாத சொத்தாகவும், அவர்களது திடீர் செலவுகளைச் சமாளிக்கப் பணம் பெற்றுதரும் ஒரு பொருளாகவும் தங்க நகைகள் மாறியுள்ளன. இந்தத் தங்க நகைகளை வங்கிகளிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ அடகுவைத்துப் பணம் பெறுவதுதான் நம்மில் பலரது வழக்கம்.

இப்படி நகைகளை அடகு வைக்கும் போது, இதுநாள்வரை மதிப்பீட்டாளர் ஒருவரே மதிப்பீடு செய்துவந்தார். இப்போது இந்த மதிப்பீட்டைச் செய்வதற்கு இயந்திரங்கள் வந்துவிட்டன. சில தனியார் வங்கிகளில் நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கும் இந்த இயந்திரங்கள், இன்னும் சில ஆண்டுகளில் அனைத்து வங்கிகளிலும் வந்தாலும் ஆச்சர்யமில்லை!

இந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்காக வங்கிகள் சொல்லப்படும் காரணங்கள் பல. முதல் காரணம், நகை மதிப்பீட்டாளருக்கு வங்கிகள் தரும் கமிஷன் அல்லது சம்பளம். நகைக் கடன்களில் முக்கியப் பங்கு வகிப்பது நகை மதிப்பீட்டாளர் கள்தான். எந்த நகைக்கு எவ்வளவு கடன் தரலாம் என்பதை இந்த நகை மதிப்பீட்டாளர்களே முடிவு செய்கின்றனர். அதாவது, இவர்கள் சொல்லும் தொகைக்கு மேலே வங்கிகள் கடன் தருவதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக ரிசர்வ் வங்கியின் விதிகள்படி நகையின் மதிப்பில் அதிகபட்சமாக 75 சதவிகிதம் வரை மட்டுமே வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெறமுடியும்.

இந்த வேலையைச் செய்வதற்கு வங்கிகள் இவர்களுக்கு கமிஷன் அடிப்படையில் ஊதியம் தந்து வந்தன. நகை மதிப்பீட்டாளர்களுக்கு நகைக் கடன் தொகையில் 0.25 முதல் 0.3 சதவிகிதம் (அதாவது, 10,000 ரூபாய்க்கு 25-30 ரூபாய்) வரை கமிஷனாக வங்கிகள் தந்தன. சில தேசிய வங்கிகள் நகை மதிப்பீட்டாளர் கட்டணம் இல்லா நகைக் கடன் என்று விளம்பரம் செய்கின்றன. இதற்காகும் செலவை வங்கியே ஏற்றுக்கொள்கின்றன.

இந்தச் செலவைக் குறைக்கவேண்டிய கட்டாயம் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளது. சுமார் 5 லட்சம்

ரூபாய் விலையுள்ள இந்த இயந்திரத்தை ஒருமுறை வாங்கி விட்டால், பிற்பாடு செலவே இல்லை என்று நினைக்கின்றன வங்கிகள்.

இரண்டாவது காரணம், இந்த இயந்திரங்கள் மூலம் கிடைக்கும் துல்லியத்தன்மை. இந்த இயந்திரங்கள் தங்கத்தின் தரத்தைத் துல்லியமாகக் கணித்துச் சொல்லிவிடுவதால், வங்கிகள் இதைப் பெரிதும் விரும்புகின்றன.

மூன்றாவது காரணம், நகை மதிப்பீட்டாளருக்காகக் காத்திருக்காமல் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்வதில் இருக்கும் சௌகரியம்.

நான்காவது முக்கியமான காரணம், இயந்திரங்கள் மூலம் நகையை மதிப்பிடும்போது ஆவணங்களுக்கான கட்டணம் தவிர வேறு கட்டணம் எதுவும் கிடையாது. இதனால் கடன் வாங்க வருகிறவர்கள் அதிக பணத்தை மதிப்பீட்டுக் கட்டணமாகத் தரவேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறார்கள் வங்கி அதிகாரிகள்.

வங்கித் தரப்பில் இப்படி பல நியாயங்கள் சொல்லப்பட்டபோதிலும், இயந்திரங்கள் மூலம் நகையை மதிப்பிடுவது சரியாக இருக்குமா என ஜெம் அண்டு ஜுவல்லரி டெக்னாலஜி டிரைனிங் சென்டர் இயக்குநரும், நகை மதிப்பீட்டாளருமான சுவாமிநாதனிடம் கேட்டோம்.

''நகைக் கடன் பெறுவதில் மக்கள் பல்வேறு கருத்துக்களை மனதில் கொண்டுள்ளனர். நாம் அடகுவைக்கும் நகை எவ்வளவு தூய்மை யானது என்பது தொடங்கி, அவர்களது தேவைக்கேற்ற பணம் கடனாகக் கிடைக்குமா என்பதுவரை பல குழப்பங்களோடுதான் நகைக் கடன் வாங்க வருகின்றனர்.

நகை மதிப்பீட்டாளர்கள் மீது மக்களுக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் இருக்கிறது. ஏனெனில், அவர்கள் உறைகல்லால் நகையை உரசிப் பார்த்து நகையை மதிப்பிடுகின்றனர். அப்போது, நகை உரசி எடுக்கப்படுமோ; அதனால், நகைச் சேதமாகிவிடுமோ என்று நினைக்கின்றனர். ஆனால், நகை மதிப்பீட்டாளர் ஒரு நகையை உரசிப் பார்க்கும்போது 0.005 கிராம் அளவே தேய்மானம் ஏற்படும். இது இன்றைய விலையில் பார்த்தால் 15 ரூபாய்க்குள்தான் இருக்கும். கடன் பெற விரும்புகிறவர் இந்த 15 ரூபாய் அளவு தங்கம் தேய்மானத்தை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். நகை மதிப்பீட்டாளரைக் கொண்டு கணக்கிடப்படும் இந்த முறை 95-97% உண்மையானதாக இருக்கும்.

தற்போது பிரபலமாகிவரும் நவீன இயந்திரங்கள் தங்கத்தின் தூய்மையை அளவிடும் முறையைப் பார்க்கும்போது, அவற்றால் 20 முதல் 30 மைக்ரான் அளவுக்கு மட்டுமே ஊடுருவித் தங்கத்தின் தன்மையை அறிய முடியும்.

மேலும், அதில் பதியப்பட்டிருக்கும் அளவுகள் மாறும்போதோ அல்லது அந்த இயந்திரத்தில் நகை சரியான இடத்தில் வைக்கப்படாதபோதோ தவறு ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த இயந்திரங்கள் 60 - 80 சதவிகிதம்தான் துல்லியமாகத் தகவல் சொல்கின்றன. என்னதான் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இந்த இயந்திரங்களைப் பயன்படுத்தினாலும், அவர்களும் எங்களைப் போன்ற நகை மதிப்பீட்டாளர்களின் உதவியோடு மறுமதிப்பீடு செய்கின்றனர். இந்த இயந்திரங்களின் துல்லியத்தன்மை 95% என வரும்பட்சத்தில் நகை மதிப்பீட்டாளர்களது தேவைக் குறைய வாய்ப்புள்ளது'' என்று கூறினார்.

வங்கிகள் செலவுக் குறைப்பு, நவீனத் தொழில்நுட்பங்களைக் கொண்டுவருதல் போன்ற காரணங்களால் நகை மதிப்பீட்டாளர்களைத் தவிர்க்க நினைத்தாலும், அவர்களை முழுமையாகத் தவிர்க்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்!

படம்: ச.இரா.ஸ்ரீதர்.