Published:Updated:

உனக்கும் மேலே நீ!

தனித்தன்மையே உங்கள் அடையாளம்! டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

''எதை நினைக்கிறாயோ, நீ அதுவாகவே ஆகிறாய். நீ எப்படி ஒரு விஷயத்தை அணுகுகிறாயோ, உன் பார்வையும் அப்படியே அமைகிறது'' என்கிறது பாகவதம்.  

 இன்றைக்கு பர்சனாலிட்டி என்கிற வார்த்தைப் பல அர்த்தம் தரக்கூடியதாக மாறியிருக்கிறது.

'சிக்ஸ் பேக்ஸ்’ இருந்தால், நல்ல வெயிட்டான பர்சனாலிட்டி என்கிறோம்.

மாடர்ன் டிரஸ் போட்டிருந்தால், அல்ட்ரா மாடர்ன் பர்சனாலிட்டி’ என்று சொல்கிறோம்.

அண்டார்டிகா கடலை ஒரு நுண்ணிய கேமரா வைத்து போட்டோ எடுத்துப் பார்த்தால், வெளியில் தெரிகிற ஐஸ்கட்டியைவிட, உள்ளே தெரியும் ஐஸ்கட்டி பலமடங்கு பெரிதாக இருக்குமாம்.

அதுமாதிரி, வெளியே தெரியும் பர்சனாலிட்டி பற்றி அதிகம் கவலைப்படாமல், நமக்கு உள்ளே இருக்கும் பர்சனாலிட்டியைச் சரியாக வளர்த்தெடுப்பதன் மூலம் நாம் வெற்றிக் காணமுடியும்.

உலகில் கோடிக்கணக்கான இளைஞர்கள் வாழ்கிறார்கள். ஒவ்வொருவருடைய குணாதிசயமும், உருவங்களும் வேறுவேறு. ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒரு பர்சனாலிட்டி உண்டு; திறமை உண்டு. அந்தத் தனித்தன்மையும், ஆளுமைத்திறனும் தான் ஒருவரது உண்மையான அடையாளம்.

ஒரு மனிதனின் திறமைகளே அவனை உருவாக்குகின்றன. உங்கள் தனித்திறமையும், ஆளுமைத்திறனும் தான் உங்கள் பலமாகவும், பலவீனமா கவும் வெளியில் தெரிகிறது. உங்கள் பலத்தை அதிகரித்து, பலவீனத்தைக் குறைத்தால், உங்களுக்கு நிச்சயம் ஜெயம்தான்!

உனக்கும் மேலே நீ!

பர்சனாலிட்டி என்கிற வார்த்தைக்கு இன்று பல அர்த்தங்கள் இருந்தாலும், அந்த வார்த்தையில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் ஒரு பெரிய விஷயத்தை எடுத்துச் சொல்பவை. அந்த விஷயங்களின் ஒரு கூட்டுத் தொகுப்புதான் பர்சனாலிட்டி. இதில் என்னென்ன விஷயங்கள் மறைந்து கிடக்கிறது என்பதைச் சொல்கிறேன்.

‘P’ - Positive Thinking!

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மாணவர்களிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டேன்.

''உங்க  தலைக்கு மேலே ஒரு ஏரோப்ளேன் பறக்குது. நீங்க என்ன நினைப்பீங்க?'' ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பதிலைச் சொன்னார்கள். ஆனால், ஒருவர் மட்டும் ''இந்த பிளேன் கம்பெனிக்கு முதலாளி ஆவேன்’னு நினைப்பேன் சார்'' என்றார்.

அவர் இதைச் சொன்னவுடன் எல்லோரும் சிரித்தார்கள். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. அவருடைய பாசிட்டிவ் திங்கிங்கைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.  

‘E’ - Energetic Living!

யார் ஒருவர் காலை ஆறு மணி முதல் இரவு 10 மணி வரை கொட்டாவி விடாமல் வேலை பார்க்கிறாரோ, அவர்தான் எனர்ஜெடிக்கான மனிதன்!  உங்களைச் சுற்றி இருப்பவர்களைக் கொஞ்சம் உன்னிப்பாகப் பாருங்கள். இந்த எனர்ஜெடிக் மனிதர்கள் தனித்துத் தெரிவார்கள்.

உனக்கும் மேலே நீ!

‘R’ - Result oriented!

நிறைய பர்சனாலிட்டி தோற்பதற்குக் காரணம், ஆரம்பிக்கும்போது காட்டும் அக்கறையை முடியும் வரை காட்டுவதில்லை. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் முதல் பெரிய பதவியில் இருக்கிற ஆபீஸர்கள் வரை இதுதான் உண்மை.  

‘S’ - Success approach!

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் ஜெயிப்போம் என்கிற எண்ணத்துடன் அணுகவேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் அஜாக்கிரதையாக எடுத்துக்கொள்ளாமல், அதற்குரியச் சிரத்தையோடு, புதிதாக அணுகினாலே போதும், வெற்றிக் கிடைக்கும். இதற்குத்  தேவை நூறு சதவிகித ஈடுபாடு.

‘O’ - Optimistic!

'நல்லதே நடக்கும்’ என்று நினைப்பவர்கள் எல்லாப் பிரச்னைக்கும் ஒரு தீர்வு இருக்கு என்று நினைத்து நம்பிக்கையுடன் அதை நோக்கி நடப்பார்கள்.

'தீமையே நடக்கும்’ என்று நினைப்பவர்கள் எல்லாத் தீர்விலும் இருக்கிற பிரச்னையைப் பார்ப்பார்கள்.

‘N’ - Natural Thoughts!

எல்லா விஷயத்தையும் குயுக்தியாக நினைக்காமல், இயற்கையாக எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டால்,  உங்களுக்கு எல்லாமே நல்லதாகவே தெரியும். இந்த விஷயத்தில் தர்மராக இருந்தால், உங்களுக்கு எல்லாமே சரியாகத் தெரியும். துரியோதனனாக இருந்தால், நடப்பது எல்லாமே தவறாகத் தெரியும்.  

உனக்கும் மேலே நீ!

‘A - Artistic Life!

உங்களுக்குப் பிடித்த வாழ்க்கையைப் பிடித்த மாதிரி வாழ்வதுதான் 'ஆர்டிஸ்டிக் லைஃப்’.

'சார், சில விஷயங்கள் எனக்குப் பிடிக்கல்லே. ஆனா, அதை மாத்தவும் முடியாது. நான் என்ன செய்ய’ என்று கேட்கிறீர்களா?

நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் என்று புரிகிறது. மாற்ற முடியாத விஷயங்களை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். வெறுப்பு ஒழிந்து, நேசம் பிறக்கும்.

‘L’ - Lovable life!

நீங்கள் மற்றவர்களை விரும்புகிற மாதிரி, மற்றவர்கள் உங்களை விரும்பவேண்டும். அந்தக் குணாம்சம் உங்களுக்கு வந்துவிட்டால், பிறகு நீங்கள் தலைவர்தான்!

‘I’ - Innovative thinking!

ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் பத்து நிமிடங்களாவது புதுமையான விஷயங்களைச் செய்வதற்கு முயற்சியுங்கள். கண்டுபிடிப்புகள் விஞ்ஞானிகளுக்கு மட்டும் அல்ல, சாதாரண மனிதர்களுக்கும்தான்.  

‘T’ - Talent!

உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு திறமை இருக்கும். அதைச் சரியாகத் தெரிந்துகொண்டு, உங்கள் வேலையில், படிப்பில் காட்டினால், உங்கள் இலக்கு எளிதாக நிறைவேறும்!

‘Y’ - Youth!

இளமை என்பது வயதில் இல்லை. அது மனம் சார்ந்தது. 16 வயதில் 61 வயது கிழவனாகவும், 61 வயதில் 16 வயது இளைஞனாகவும் ஒருவரால் இருக்க முடியும். எனவே, புதிதாக யோசியுங்கள். இளமையாக இருப்பீர்கள்.

(மேலே செல்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு