சிவக்குமார் டேர்ம் இன்ஷூரன்ஸை 75 லட்சத்திலிருந்து 2 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும்.

இந்த வாரம் ஃபைனான்ஷியல் ஹெல்த் செக்-அப் செய்து கொள்ள நம்மைத் தேடி வந்தவர் சிவக்குமார் (வயது 38), பெங்களூரில் உள்ள பிரபல ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மனைவி அகிலா (வயது 32) தற்போது இல்லத்தரசி; முன்பு இவரும் ஐ.டி துறை சார்ந்த நிறுவனத்தில்தான் பணிபுரிந்தார். இவர்களுக்கு இரண்டு வயதான பூரணி என்கிற பெண் குழந்தை உள்ளது. குழந்தைப் பிறந்ததால் அகிலா தற்போது வேலைக்குச் செல்வதில்லை. சிவக்குமாரைச் சார்ந்து அவரின் தாயாரும் ஒரு தங்கையும் உள்ளனர்.

சிவக்குமாருக்கு அவரின் சம்பளம் மற்றும் சென்னையில் உள்ள அவருடைய வீட்டின் மூலம் வரும் வாடகை எல்லாம் சேர்த்து மாதம் இரண்டு லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது.

தற்போதைய நிதி நிலைமை!

மாதாந்திரச் செலவு - ரூ.45,000
வீட்டுக் கடன் தவணை - ரூ.12,000
வீட்டுக் கடன் கூடுதல் தவணை - ரூ.25,000

முதலீடுகள்:

வங்கி டெபாசிட் - ரூ.15,00,000
மியூச்சுவல் ஃபண்டு பங்குகளில் முதலீடு - ரூ.18,00,000

கடன்கள்:

வீட்டுக் கடன் - ரூ.10,00,000

அசையாச் சொத்துகள்:

சென்னையில் உள்ள மூன்று வீடு மனைவியின் பெயரில் இருக்கும் வீட்டைச் சேர்த்து மொத்தம் மூன்று வீடு உள்ளது. ஒரு வீடு வசிப்பதற்கு, இன்னொன்றுத் தன்னுடைய குழந்தைக்கு என எடுத்துக் கொண்டால், மற்ற ஒரு வீட்டைத் தகுந்த சமயம் பார்த்து விற்றுவிடலாம்.

இன்ஷூரன்ஸ், இன்னும் தேவை!

இவர் டேர்ம் இன்ஷூரன்ஸ் 75 லட்சம் ரூபாய்க்குதான் எடுத்துள்ளார். இவருடைய சம்பளத்தை இவரது மொத்தக் குடும்பமும் எதிர்நோக்கியுள்ளது. இவருக்குக் குறைந்தது இரண்டு கோடி ரூபாய் இன்ஷூரன்ஸ் கவரேஜ் வேண்டும். முன்பே ரூ.75 லட்சம் எடுத்துள்ளதால் இன்னும் ரூ.1.25 கோடி அடுத்த 25 வருடத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டும். அதற்கு வருடம் ரூ.20,000 பிரீமியம் கட்டவேண்டி இருக்கும்.

இவர், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பக்கம் தன் கவனத்தைச் செலுத்தாமல் இருக்கிறார். இன்னும் ஐந்து வருடத்தில் வேலையை விட நினைப்பதால், உடல்நலத்தின் மீது அக்கறை எடுத்துக்கொண்டு, உடனே மனைவி, குழந்தைக்கு என 5 லட்சம் ரூபாய்க்கு ஃப்ளோட்டர் பாலிசி எடுக்க வேண்டும். அதற்கு வருடத்துக்கு பிரீமியம் ரூ. 15,000 ஆகும். அம்மாவுக்கு என்று தனியாக 3 லட்சம் ரூபாய்க்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கவேண்டும்.

சேமிப்பு மற்றும் முதலீடுகள்!

சிவக்குமாரின் மாத செலவு மற்றும் முதலீடு ரூ.1.94 லட்சம். இதில் மியூச்சுவல் ஃபண்டு ரூ.26,000, தங்கம் ரூ.7,500, எஃப்.டி ரூ.50,000, எமர்ஜென்சி ஃபண்டு ரூ.20,000 அடங்கும்.

இன்று ஒருவருக்குப் பெண் குழந்தைப் பிறந்துவிட்டால், உடனே தங்கம் சேர்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இது சரியல்ல. காரணம், நீண்ட இடைவெளியில் தங்கம் தரும் லாபம் பெரிய அளவில் இருக்காது. எனவே, அதிகப்படியான லாபத்தைத் தராது என்பதே நிபுணர்களின் கருத்து.

இவர் தன் பெண்ணின் படிப்புக்குத் தற்போதைய நிலையில், 15 லட்சம் ரூபாய் தேவை என்று சொல்கிறார். அது இன்னும் 16 வருடங்களில் ரூ.51 லட்சமாக மாறும். அதேசமயம், இன்றிலிருந்து அதற்காக 6,500 ரூபாயை மாதம் முதலீடு செய்தால், அந்த இலக்கை எளிதாக அடையலாம். அதேபோல, திருமணத்துக்கு இன்றைய தேதியில் 15 லட்சம் ரூபாய் என எடுத்துக்கொண்டால், 21 வருடத்தில் 8% பணவீக்கத்தில் ரூ.75 லட்சமாகிவிடும். அதற்கு மாதம் 4,500 ரூபாய் சேமித்தாலே போதுமானது. ஏற்கெனவே சிவக்குமார் 26,000 ரூபாயைச் சேமித்து வருகிறார். இதிலிருந்து 11,000 ரூபாயை ஒதுக்கினால் இதற்குப் போதுமானது.

இவர் ஐந்து வருடத்தில் வேலையை மாற்றும்போது இவரது தங்கையின் அத்தியாவசியத் தேவைக்காகப் பெரிய தொகைத் தேவைப்படும் என்கிறார். தற்போது மியூச்சுவல் ஃபண்டு மற்றும் பங்குச் சந்தையில் ரூ.18 லட்சம் வைத்துள்ளார். 15% கூட்டு வட்டியில் இன்னும் 5 வருடத்தில் அந்தப் பணம் ரூ.36 லட்சம் ஆகலாம். இந்த முதலீட்டில் அதிக ரிஸ்க் உள்ளதால், தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து, தேவைப்பட்டால் வேறு முதலீடுகளுக்கு மாற்றவேண்டும். ஃபிக்ஸட் டெபாசிட்டில் சேமிக்கும் 50,000 ரூபாயுடன் வருமானத்திலிருந்து 25,000 ரூபாயைச் சேர்த்து 75,000 ரூபாயாக மியூச்சுவல் ஃபண்டில் போட்டால், அது 5 வருட முடிவில் 15% கூட்டு வட்டியில் ரூ.67 லட்சமாகிவிடும். இந்தத் தொகையைப் பயன்படுத்தித் தங்கையின் தேவையைப் பூர்த்திச் செய்துகொள்ளலாம்.

மேலே சொன்ன முதலீடுகளைத் தேவைக்குப் பிறகு அப்படியே தொடர்வது ஓய்வுக்காலத்துக்குப் பயனளிக்கும். எப்போதும் அந்த முதலீட்டை நிறுத்திவிடக் கூடாது. வருமானம் உயரும்போது ஓய்வுக்கால முதலீட்டை அதிகரித்து வருவதில் கவனம் அவசியம்.

திருத்தம் செய்யவேண்டும்!

இவரது இலக்குகள் எல்லாம் அடையக்கூடியதே. ஆனால், அதற்குச் சில திருத்தங்கள் செய்யவேண்டும். நான் ஃபிக்ஸட் டெபாசிட்டில் போடும் முதலீட்டை எடுத்து மியூச்சுவல் ஃபண்டில் போடச் சொன்னால், எல்லோரும் அது ரிஸ்க்காச்சே என்கிறார்கள். கடந்த 5 வருடத்தில் 10 முதல் 18% வரை எஸ்ஐபி (SIP) திட்டத்தில் வருமானம் கிடைத்துள்ளது. மேலும், வரும் 3 முதல் 5 ஆண்டுகளில் சந்தை நன்றாக வர வாய்ப்புள்ளது. இதில், பெரிய அளவில் ரிஸ்க் இருப்பதாகத் தெரியவில்லை என்பது என் கருத்து.

ஹெல்த் செக்-அப் ரிப்போர்ட்!

டேர்ம் இன்ஷூரன்ஸ் ரூ.75 லட்சத்திலிருந்து 2 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும்.

5 லட்சம் ரூபாய் ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியை அலுவலகத்தில் தருகிறார்கள். இதற்குமேலும் தனியாக ஒன்று எடுத்துக்கொள்வது நல்லது. தன் அம்மாவுக்குத் தனியாக ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

20,000 ரூபாய் எமர்ஜென்சிக்கு எனச் சேமிக்கிறார். தற்போது ஃபிக்ஸட் டெபாசிட்டில் உள்ள 15 லட்சத்தில், 10 லட்சத்தை எமெர்ஜென்சி ஃபண்டு என எடுத்துக்கொள்ளலாம். தனியாகச் சேமிக்கவேண்டிய அவசியமில்லை. மீதம் ரூ.5 லட்சத்தை முதலீட்டுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்காகச் சேமித்துவந்த தொகையை மேலே சொன்னதுபோல, தங்கையின் அவசரத் தேவைக்கும், பின்னர் ஓய்வுக்காலத்துக்கும் சேமிக்கலாம்.

அவருடைய இலக்குக்கான காலம் மிகக் குறைவாக உள்ளதால் வருமானத்தின் பெரும் தொகையை மியூச்சுவல் ஃபண்டில் சேமிக்கலாம். பாதுகாப்பான மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் அதிக வருமானம் தரக்கூடிய ஃபண்டுகளைத் தேர்வு செய்வது அவசியம்.

ஒரு வீட்டை, ஏதாவது ஓர் எதிர்காலத் தேவையுடன் லிங்க் செய்துகொள்ளலாம்.

தங்கத்துக்கு என்று மாதம் 7,000 ரூபாய்ச் சேர்க்கிறார். இதை வேறு முதலீட்டில் போட்டால், தங்கம் விலை நன்கு குறையும்போது வாங்கிக்கொள்ளலாம்.

தற்போது சேமிப்பதை நீண்டகால இலக்குகளுடன் இணைத்துக் கொண்டால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இவரது செலவுகள் எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்பதால், தேவையற்ற முதலீட்டை மேற்கொள்ளத் தேவையில்லை.

வீட்டுக் கடன் தவணையைக் குறைப்பதற்கு ரூ.25,000 கூடுதலாகக் கட்டி வருகிறார். வீட்டுக் கடனுக்கான வட்டி மிகக் குறைவு. எனவே, அதை முன்கூட்டியே செலுத்துவது சரியான யோசனை அல்ல.

ஃபைனான்ஷியல் ஹெல்த் செக்-அப் ரேட்டிங்!

இவர் நாணயம் விகடனின் நீண்டகால வாசகர் என்பதால் இவர் செய்திருக்கும் முதலீட்டில் தெளிவு தென்படுகிறது. மேலே சொன்னது போல, இவரது முதலீட்டில் இன்னும் சில திருத்தங்களைச் செய்தால் இலக்குகளை எளிதில் அடையலாம்.

இவரது எதிர்பார்ப்புகள் மற்றும் வேலை செய்யக்கூடிய காலம் குறைவாக உள்ளதால் இவர் கொஞ்சம் ரிஸ்க் எடுத்தாகவேண்டும். இவர் தவறான எந்த முதலீட்டையும் செய்யவில்லை. இத்தனை காலம் இவர் நாணயம் விகடனைப் படித்ததன் மூலம் கிடைத்த பலன் இது.

கட்டுப்பாடான செலவுகள், சரியான இன்ஷூரன்ஸ் பாலிசி, பரவலான முதலீடு, அடையக்கூடிய இலக்குகள், தற்போதுள்ள முதலீட்டுக் குணங்கள், அதன் செயல்பாடு, தொடர்ந்து முதலீடு செய்யும் பண்பு ஆகியவற்றைவைத்து இவருக்கு 70% மார்க் தரலாம்.

தொகுப்பு: செ.கார்த்திகேயன்.