இந்த வாரம் கச்சா எண்ணெய் விலைப்போக்குக் குறித்து ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனத்தின் கிளஸ்டர் ஹெட் சிவக்குமார் விரிவாகச் சொல்கிறார்.

கச்சா எண்ணெய்!

''அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த விபத்து விசாரணைக் குழுக்கள், கச்சா எண்ணெய் எடுத்துச்செல்லும் ரயில்களுக்குக் கடந்த வியாழக்கிழமையன்று கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், மக்கள் நிறைந்த பகுதிகளில் ஏற்படும் விபத்தால், பெரும்பாலானோர் தங்கள் வாழ்க்கையை இழப்பதோடு, சொத்துகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது.

அமெரிக்கா ஈரானுக்கு அடுத்த ஆறு மாதம் வரை நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பேரலுக்கு மேல் விற்பதற்குத் தடை விதித்துள்ளதாகத் தெரிகிறது. அதேசமயம், அமெரிக்கா மற்றும் சீனாவின் உற்பத்திக் குறைந்திருப்பது கச்சா எண்ணெய்யின் தேவையைக் குறைக்கலாம். வரும் வாரத்தில் கச்சா எண்ணெய் விலை ரூ.6,200-ஐ தாண்டும் பட்சத்தில் ரூ.6,400 - 6,600 வரை செல்ல வாய்ப்பிருக்கிறது.''

தங்கம்!

கடந்த வியாழக்கிழமையன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தங்கம் இறக்குமதி மீதான தடைகளை நீக்கவேண்டும், தங்கம் இறக்குமதி வரியை

10 சதவிகிதத்திலிருந்து குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்தியா விலைமதிப்பற்ற உலோகங்களை வாங்குவதில் உலக அளவில் முக்கிய இடத்தில் இருந்து வந்தது. ஆனால், கடந்தாண்டு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்கத் தங்கத்தின் மீதான வரியை அதிகரித்ததால் இறக்குமதி குறைந்தது. மேலும், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவிகிதம் ஏற்றுமதி செய்யவேண்டும் என்பது போன்ற விதிமுறைகளை மத்திய அரசு விதித்தது. இதனால், தங்கக் கடத்தல் அதிகரித்து வருகிறது.

மேலும், கடந்த வியாழக்கிழமையன்று வெளியான சீனாவின் உற்பத்திக் குறித்த குறியீடு அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் குறைந்துள்ளதைக் காண்பிக்கிறது. அமெரிக்காவில் நிறுவனங்களின் வருமானம் குறைந்துள்ளது என்ற செய்திகள் வெளியானதையடுத்து பங்குச் சந்தைகள் சரிந்தன.

பங்குச் சந்தைகளில் முதலீடு குறைந்து, அது தங்கத்தில் முதலீடானது.

இதையடுத்து வரும் வாரத்தில் 28-29 தேதிகளில் நடக்கவிருக்கும் ஃபெடரல் பாலிசிக் கூட்டத்தில் மாதாமாதம் வழங்கும் கடன்பத்திர அளவில் மாற்றம் செய்யப்படலாம் என்று நினைத்து, கோல்டு ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தவர்கள் வெளியேறி வருகின்றனர்.

அமெரிக்காவின் எஸ்பிடிஆர் கோல்டு ஃபண்டின் கையிருப்பு கடந்த வியாழக்கிழமையன்று 5.39 டன்கள் குறைந்து 790.46 டன்னாக இருந்தது. இது, கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தபட்சமாகும்.

வரும் வாரத்தில் அமெரிக்க மானிட்டரி கொள்கையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்துத் தங்கம் விலையில் மாற்றம் இருக்கலாம். வரும் வாரத்தில் தங்கத்தின் விலை ரூ.29,400-ஐ தாண்டும்பட்சத்தில் ரூ.30,000 வரை செல்லலாம். விலை குறையும் பட்சத்தில் ரூ.29,183 - 28,600 வரை செல்ல வாய்ப்புள்ளது.

வெள்ளி!

வரும் வாரத்தில் அமெரிக்காவில் மாதாமாதம் வழங்கும் கடன்பத்திர அளவில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்தே வெள்ளியின் விலை வர்த்தகமாகலாம். மேலும், வெள்ளியின் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் (மார்ச் கான்ட்ராக்ட்) ரூ.45,300. இந்த விலையைத் தாண்டாதபட்சத்தில் விலை குறையவே வாய்ப்புகள் அதிகம். வரும் வாரத்தில் விலை ரூ.45,300-44,400 வரையில் வர்த்தகமாக வாய்ப்புள்ளது.

அடிப்படை உலோகங்கள்!

காப்பர்: லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் காப்பரின் இருப்பு மார்ச் 2012-க்குப் பிறகு அதிகமாகக் குறைந்து காணப்படுகிறது. மேலும், கடந்த வாரம் வெளியான சீனாவின் உற்பத்திக் குறித்த குறியீடு குறைந்துள்ளதும், அமெரிக்காவில் வீடு குறித்த குறியீடுகள் குறைந்துள்ளதும் மெட்டல்களின் தேவைக் குறைந்துள்ளதைக் காட்டுகிறது. இதையடுத்து, வரும் வாரத்தில் காப்பரின் விலை குறையலாம்.

ஜிங்க்: ஜிங்க் கையிருப்பு குறைவாக உள்ளபோதிலும், ஜிங்கின் உத்தரவாத விகிதம் 5,19,725 மெட்ரிக் டன்னிலிருந்து 2,93,000 மெட்ரிக் டன்னாக குறைக்கப் பட்டுள்ளது. இதிலிருந்து ஜிங்கின் தேவைக் குறைந்துள்ளதை அறிய முடிகிறது. வரும் வாரத்தில் ஜிங்கின் விலை குறையவே வாய்ப்புகள் அதிகம்.

லெட்: கடந்த மூன்று மாதங்களாக லெட்டின் இருப்பு குறைந்துள்ள போதும், டெக்னிக்கல்படி, விலை குறைய வாய்ப்புகள் அதிகம். நடுத்தரக் காலத்தில் தேவை அதிகரித்து விலை ஏறலாம்.

நிக்கல்: தொடர்ந்து லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் நிக்கல் அதிகமாகவே இருந்து வருகிறது. அதேசமயம், இந்தோனேஷியாவில் ஏற்றுமதித் தடை செய்யப்பட்டுள்ளது அதிக விலையிறக்கத்தைத் தடுக்கலாம். வரும் வாரத்தில் நிக்கல் விலை அதிக ஏற்றஇறக்கம் இல்லாமல் வர்த்தகமாகலாம்.

இயற்கை எரிவாயு!

அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து சாதாரண வெப்பநிலைக்குக் கீழே அடுத்த ஐந்து நாட்களுக்கு நிலவிவரும் என்று கணிப்புகள் கூறுகின்றன. இது இயற்கை எரிவாயு விலையில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வெப்பமூட்டும் தேவைக்காக இயற்கை எரிவாயு தேவை அதிகரிக்கலாம்.